மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

constipation solution in tamil

நம் உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை வைத்து மலச்சிக்கல் தீர எளிய வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

இன்றைய கால கட்டத்தில் பலரும் மலசிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணமாக சரியான நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் எடுக்காமையே இருக்கிறது.

மலசிக்கல் பிரச்சனை இருக்கின்றவர்கள் சரியான தூக்கம் இல்லாமை மற்றும் வயிறுவலி போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

நம் உடலில் உள்ள உணவுக் கழிவுகள் இலகுவாக நம் உடலில் இருந்து வெளியேற நம் உணவுகளில் கட்டாயம் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்க வேண்டும்.

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்

  • உணவில் நார்ச்சத்துக்கள் குறைதல்.
  • துரித உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.
  • தொடர்ச்சியான பயணம்.
  • மனஅழுத்தம்.
  • உடற்பயிற்சி இன்மை.
  • அதிகளவு பால் மற்றும் பாலினால் செய்த உணவுகளை உண்ணுதல்.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள் மற்றும் டிப்ஸ்

வழக்கத்திற்கு அதிகமாக நீர் அருந்துதல். நம் உடலில் நீர் சத்து குறைந்தால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். உங்கள் உடலில் நீர்சத்து நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிக நார்ச்சத்து உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது.

காப்பி மற்றும் டீ அதிகம் அருந்துவதை குறைத்தல்.

செயற்கை குளிர்பானங்கள் அதிகம் அருந்துவதை குறையுங்கள்.

அல்ககோல் (மது) எடுத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள நீர்சத்துக்கள் அதிகமாக சிறுநீர் மூலம் வெளியேறுகின்றது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றது.

உணவு கழிகளை வெளியேற்றும் உணர்வு வந்தவுடனே வெளியேற்ற வேண்டும். தாமதிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனையை இன்னும் அதிகமாகின்றது.

உலர்திராட்சை

சிறிது உலர் திராட்சை பழத்தை விதையுடன் இரவில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீருடன் அருந்தினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக கொய்யாப்பழம் இருக்கிறது. தினமும் ஒரு கொய்யாப்பழத்தை அதன் விதையுடன் சாப்பிட்டு வந்தால் விரைவில் மலச்சிக்கலில் இருந்து குணமாகலாம்.

பழங்கள்

பழங்களில் அத்திப்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம் மற்றும் பேரிச்சம் பழம் போன்ற பழங்களை மட்டும் இரவு உணவாக பயன்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம்.

இந்த பழங்களில் மலச்சிக்கலை தடுக்கும் குணங்கள் அதிகம் உண்டு.

விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்)

இரவு உணவுக்கு முன்னர் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் வெண்ணீருடன் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமான தீர்வை பெற முடியும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் வெண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். இது உடலுக்கும் உற்சாகம் கொடுக்கும்.

வெந்தயம்

வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் விழுங்கி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வை பெற முடியும்.

இளநீர்

வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆனால் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு

உண்ணவேண்டிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டு, தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து, சரியான பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான மருத்துவ ஆலோசனையும் பெற்று கொண்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

மேலும் படியுங்கள்.