பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும்

podugu poga tips in tamil

முறையற்ற பராமரிப்பு, தலையை முறையாக அலசிக் குளிக்காமை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பதிவில் நாம் பொடுகுப் பிரச்சனைக்கான தீர்வுகளைக் காண்போம்.

பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும்

#1. பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

#2. வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து தலை குளித்து வர பொடுகு தொல்லைகள் அற்றுப் போகும்.

#3. நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை பொடியாக்கி சிறிதளவு தயிர் எடுத்து அதனுடன் கலந்து தலையின் வேர்ப்பகுதியில் தேய்த்து வர பொடுகு இல்லாமல் போகும்.

#4. எலுமிச்சம் பழச்சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வாரம் இரண்டு முறை குளித்து வர பொடுகுப் பிரச்சனை நீங்கி விடும்.

#5. பச்சைப் பயறினை  மாவாக்கி அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு, தயிர் போன்றவற்றை கலந்து தலையிற் வேர்ப்பகுதி வரை அலசி 15 நிமிடம் வரை ஊற வைத்து தலை குளித்து வாரம் இருமுறை இவ்வாறு செய்து வர பொடுகுப் பிரச்சனை நீங்கி விடுமு.

#6. வினிகர் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டினையும் சம அளவில் எடுத்து கலந்து ஒரு கலவையாக்கி இரவு தூங்குவதற்கு முன்பு தலைமுடிக்கு தடவி காலை எழுந்து மிதமான ஷாம்பூவால் தலைமுடிக்கு அலசி வர பொடுகுத் தொல்லை இல்லாமல் போகும்.

#7. இரண்டு முட்டையை எடுத்து நன்றாக கலக்கி கலவையாக்கி தலைமுடியில் வேர்ப்பகுதி வரை தடவி ஒரு மணித்தியாலம் வரை ஊறவிட்டு பின் தலைமுடியை ஷம்பூ போட்ட அலச வேண்டும்.

#8. பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி தூங்குவதற்கு முன்பு மசாஜ் செய்து இரவு முழுதும் ஊற விட்டு காலையில் ஷாம்பூ கொண்டு அலசி வர பொடுகு நீங்கும்.

#9. கற்றாளை ஜெல்லை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் வரை ஊற விட்டி ஷாம்பூ கொண்டு தலையை அலச பொடுகுப் பிரச்சனை அற்றுப் போகும்.

#10. சில வேப்ப இலைகளை அரைத்து நன்கு பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து தலையில் தடவி ஒரு மணித்தியாலம் வரை ஊற விட்டு பின்னர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் அலசி வர தலையில் உள்ள பொடுகுகள் எல்லாம் நீங்கி விடும்.

பொடுகு பிரச்சனையால் தூக்கம், நிம்மதியினை இழந்து தவிக்கும் அன்பார்ந்த வாசகர்களே! மேற்குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி பொடுகுது தொல்லையில் இருந்து விடுபடுவீர்களாக!

You May Also Like:

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

பற்களில் மஞ்சள் கறை நீங்க