உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும், மரியாதையோடு நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நல்ல விடயங்களை சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்வார்கள். மரியாதை இல்லாமல் பேசும் போது மற்றவர்களது மனம் புண்படும்.
எனவே தங்கள் குழந்தையின் நலன் கருதி, குழந்தைகள் நல்ல நிலைக்கு முன்னேறி வர வேண்டும் என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.
பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
#1. பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும்.
பெரியவர்கள் கண்ணியமாகவும், கௌரவமாகவும் மதிக்க வேண்டிய மனிதர்கள் ஆவர்கள். பெரியோர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் மதித்து, அவர்களிடம் அனுசரணையாக நடக்க வேண்டும் ஒவ்வொருவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்.
#2. அன்பாகப் பேச வேண்டும்.
பெரியவர்களிடம் பேசும்போது அன்புடன் பேச வேண்டும்.
#3. கனிவான வார்த்தைகளை பயன்படுத்திப் பேச வேண்டும்.
பெரியவர்களோடு உரையாடும்போது தீய வார்த்தைகளை பயன்படுத்தாது கனிவான பணிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேச வேண்டும்.
#4. மலர்ந்த முகத்துடன் கண்ணியமாகப் பேச வேண்டும்.
எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பதே சிறந்தது. மலர்ந்த முகத்தோடு பேசும்போது மற்றவர்களை நாம் கவருவோம். அத்தோடு பெரியவர்கள் மீதான பணிவையும் அது வெளிப்படுத்தும்.
#5. கேலி செய்யும் வகையில் பேசக்கூடாது.
நண்பர்களுடன் பேசுவது போல் கேலியும் கிண்டலும் அடித்து பெரியவர்களுடன் பேசக்கூடாது. பேசினால் அது அவர்களுக்கு மதிப்பு அளிக்காது நடந்து கொள்வது போல் ஆகிவிடும். எனவே கேலி செய்யும் வகையில் பேசுதல் கூடாது.
#6. அன்றாட வாழ்க்கையில் பெரியவர்களுக்கு உதவி செய்யலாம்.
வீட்டைச் சுத்தம் செய்யலாம். தாத்தா பாட்டிக்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வரலாம். பாத்திரங்களைக் கழுவி உதவி செய்யலாம். எவ்வளவு வேலை இருப்பினும் நம் பெரியவர்களுக்காக சிறிது நேரம் செலவு செய்வது சிறந்தது.
#7. பெரியவர்கள் முன்னிலையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்தல் கூடாது.
நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என அதட்டுவார்கள். இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். எனவே பெரியவர்கள் முன்னிலையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்வதை தவிர்க்க வேண்டும்.
#8. பெரியவர்களது சொல் பேச்சு கேட்டு நடத்தல் வேண்டும்.
எப்போதும் பெரியவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடக்கும்போது வாழ்வில் வளம் பெறுவோம்.
#9. என்றென்றும் நன்றி உணர்வுடன் இருத்தல்.
ஒவ்வொரு சிறிய செயலுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். இது பெரியவர்கள் மனதை குளிர்விப்பதோடு, ஒரு இணைபுரியா பந்தத்தை ஏற்படுத்தும்.
#10. உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
பெரியவர்களிடம் உண்மையைக் கூறவேண்டும். பொய் பேசுவது தீய பழக்க வழக்கம். வயதுக்கு மூத்தவரிடம் பொய் பேசுவது அவர்களை அவமானப்படுத்துவதாகின்றது. எனவே பொய் பேசாது எப்போதும் பெரியவர்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
You May Also Like : |
---|
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் |
மாதவிடாய் தள்ளி போக காரணங்கள் |