புரட்சி என்றால் என்ன

puratchi enral enna

மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும் ஏற்பட, ஏற்பட புதிய, புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.

மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் தங்கள் வாழ்நாளை மக்களுக்காக வாழ்ந்தனர். தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும் பாடுபட்டவர்கள் ஏராளம்.

அதுதவிர உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று நலமாக வாழ வேண்டும் எனப் போராடிய, புரட்சி செய்த தலைவர்களும் உள்ளனர்.

மனித குல வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போதும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

பொருளாதாரம், சமூகம், அரசியல், சித்தாந்தம், கலை, இலக்கியம் என்று ஒவ்வொரு துறையிலும் அடிப்படையான மாற்றங்களைக் காண முடியும். புரட்சிகர மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

புரட்சி என்றால் என்ன

புரட்சி என்றால் எழுச்சி என்று பொருள். ஒரு குறுகிய காலத்தில் வல்லமையில் அல்லது ஒரு நிறுவன கட்டமைப்பில் ஓர் அடிப்படை மாற்றம் ஆகும்.

அதாவது, ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவது புரட்சி ஆகும். அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவது தான் புரட்சி என்று சொல்லப்படும் .

புரட்சி என்ற சொல்லானது இலத்தீன் சொல்லான Revolutio என்ற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். ஆங்கிலத்தில் புரட்சி என்பது Revolution என்று அழைக்கப்படுகின்றது.

பல்வேறு புரட்சிகள்

வெண்மைப் புரட்சி

வெண்மை புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 இல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும்.

இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளை பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கீஸ் அரியன் இதனை நிறுவினார். இதனால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

பசுமைப் புரட்சி

பசுமைப் புரட்சி 1940களில் பயிர்ச்செய்கை நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் பன்மடங்கு பெருகியது.

வேளாண்மை தொழில்நுட்பத்தால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் பசுமைப் புரட்சி எனப்பட்டது. இந்தியாவில் 1966 – 1967 ஆம் ஆண்டில் திரு சுவாமிநாதன் அவர்களால் பசுமைப்புரட்சி ஏற்படுத்தப்பட்டது.

நீலப்புரட்சி

நீலப்புரட்சி என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறை மற்றும் நீர் நிலைகளை ஆக்கபூர்வமாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன் வளர்ப்பு முறையை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்ட திட்டமாகும்.

இந்தியாவில் அருண் கிருஷ்ணன் அவர்களால் 1973 – 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

கறுப்பு புரட்சி

பெட்ரோலிய உற்பத்திக்காக தொடங்கப்பட்ட புரட்சியாகும்.

இளஞ்சிவப்பு புரட்சி

மருந்துகள், வெங்காயம் உற்பத்திக்காக ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும்.

சாம்பல் புரட்சி

உரம் உற்பத்திக்காக தொடங்கப்பட்ட புரட்சியாகும்.

சிவப்புப் புரட்சி

இறைச்சி தக்காளி ஆகியவற்றுக்காக சிவப்புப் புரட்சி ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவின் முக்கியமான புரட்சிகள்

புரட்சிகள்புலம்புரட்சியின் தந்தைகாலம்
பசுமை புரட்சிவிவசாயம்திரு.எம்.எஸ்.சுவாமிநாதன்1966-1967
வெள்ளைப் புரட்சி (அ) வெள்ள நடவடிக்கை (Operation Flood)பால் / பால் பொருட்கள்திரு. வர்கீஸ் குரியன்1970-1996
நீல புரட்சிமீன் உற்பத்திதிரு. அருண் கிருஷ்ணன்1973-2002
தங்க புரட்சிபழங்கள், தேன், தோட்டக்கலைதிரு.நிர்பக் டூட்ஜ்1991-2003
வெள்ளி புரட்சிமுட்டைகள்திருமதி.இந்திரா காந்தி2000’s
மஞ்சள் புரட்சிஎண்ணெய் விதைகள் உற்பத்திதிரு.சாம் பிட்ரோடா1986-1990
இளஞ்சிவப்பு புரட்சிமருந்துகள், இறால்கள், வெங்காயம்திரு. துர்கேஷ் படேல்1970’s
பழுப்பு புரட்சிதோல், கோகோதிரு. ஹர்லால் சவுத்ரி
சிவப்பு புரட்சிஇறைச்சி, தக்காளிதிரு. விஷால் திவாரி1980’s
தங்க பைபர் புரட்சிசணல்1990’s
பசுமைமாறா புரட்சிவேளாண் மொத்த உற்பத்திதிரு.எம்.எஸ்.சுவாமிநாதன்2014-2022
கருப்பு புரட்சிபெட்ரோலியம்
வெள்ளி பைபர் புரட்சிபருத்தி2000’s
சுற்று(அ)வட்ட புரட்சிஉருளைக்கிழங்கு1965-2005
புரோட்டீன் புரட்சிவிவசாயம் (உயர் உற்பத்தி)திரு.நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது2014-2020
சாம்பல் புரட்சிஉரங்கள்1960-1970

Read more: பசுமை இந்தியா கட்டுரை

படபடப்பு குறைய வழிகள்