பசுமை இந்தியா கட்டுரை

Pasumai India Katturai In Tamil

இந்த பதிவில் “பசுமை இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

சிறு வயதிலிருந்தே நமது சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்திருப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். பசுமையான சுற்று சூழலே ஆரோக்கியமானது.

பசுமை இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுப்புறப் பசுமை
  3. மரம் நடுவதன் அவசியம்
  4. வளங்களைப் பாதுகாத்தல்
  5. சுற்றுச்சூழல் அழிவு
  6. முடிவுரை

முன்னுரை

பசுமை இயற்கையின் அற்புதம் ஆகும். சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். பச்சைப்பசேலென்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தமே.

இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும்⸴ அவற்றைப் பாதுகாப்பது முக்கியமான கடமையாகும். அப்போது தான் இந்தியா பசுமை அடையும். பசுமை இந்தியா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சுற்றுப்புறப் பசுமை

சிறு வயதிலிருந்தே நமது சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்திருப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். வீட்டின் பின்புறங்களில் மரக்கன்றுகளை வளர்க்கும் போது தான் தூய்மைக் காற்றை உணர முடியும்.

செடி⸴ கொடிகளைப் பயிரிட்டு அதன் பயன்களைப் பெறும் போது மனதிற்கு மகிழ்ச்சி உண்டாவதுடன் சுற்றுப்புறம் பசுமையாகும். சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்திருந்தால் தான் பாரதமும் பசுமை பெறும்.

மரம் நடுவதன் அவசியம்

பசுமையைப் பேண மரங்களை நாட்ட வேண்டும். மரங்கள் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்களும்⸴ அடர்ந்த காடுகளும் சுவாசத்திற்கு உதவுவதால் மரங்கள் நடுவது அவசியமாகும்.

இன்று காடுகள் மனித தேவைகளுக்காகவும்⸴ இயற்கைச் சீற்றங்களாலும் அழிவடைகின்றன. இதனை தடுத்து பசுமையைப் பேண மரங்களை நாட்ட வேண்டும். புவி வெப்பமடைவதைத் தடுக்க மரம் நடுவது முக்கியமானதாகும்.

வளங்களைப் பாதுகாத்தல்

மனிதனைச் சுற்றியுள்ள சகல வளங்களும் இறைவனால் அளிக்கப்பட்ட பொக்கிஷமாகும். எனவே இதனைப் பாதுகாத்து பராமரிப்பது நமது கடமையாகும். சூழலைப் பாதுகாக்கும் போது தான் மனித குலம் ஆரோக்கியமாக வாழும்.

காற்று⸴ நீர்⸴ நிலம்⸴ ஆகாயம் இவை அனைத்தும் நமக்கு பெரும் பயனைத் தருகின்றன. தெளிந்த நீரும்⸴ நிலமும்⸴ உயர்ந்த மலையும்⸴ அடர்ந்த காடும் சூழலின் பாதுகாப்பு வேலிகள் ஆகும். இவற்றை மாசுபடுத்தாமல் பேணிக் காக்க வேண்டும்.

மனித நலனுக்காகவும்⸴ தேவைக்காகவும் வளங்கள் மிக அவசியமானது. எனவே அதன் மீது மிகுந்த கரிசனை கொண்டு அதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

சுற்றுச்சூழல் அழிவு

சுற்றுச்சூழல் அழிவால் பல மோசமான நிலைமைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. காற்று மாசுபாடு⸴ நீர் மாசுபாடு⸴ மண் மாசுபாடு போன்ற மாசுபாடுகளினால் மோசமான சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுகின்றன.

இயற்கைச் சுற்றுச்சூழல் அழிவுகளால் வன விலங்குகள்⸴ பறவைகள் அழிவதற்கும் வழிவகுக்கின்றன. இதனால் அரிய வகை உயிரினங்களும் அழிவைச் சந்திக்கின்றன.

முடிவுரை

எமது நாட்டின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும்⸴ பராமரிப்பதும் அனைவரதும் கடமையாகும். மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது.

மனிதனால் மேற்கொள்ளப்படும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும்⸴ காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவது.

மனித அபிவிருத்திக்காகவும்⸴ அடுத்த சந்ததியினருக்கும் பசுமையைப் பேண வேண்டிய பொறுப்பில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதை உணர்ந்து செயற்படுதல் வேண்டும்.

You May Also Like :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

சுற்றுப்புற தூய்மை கட்டுரை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள்