ஆக்கத்திறன் என்றால் என்ன

ஆக்கத்திறன்

அனைவரிடத்திலும் ஏதேனும் ஒரு ஆக்கத்திறன் உள்ளது. ஆனால் அளவில் வேறுபாடு உள்ளது. ஆக்கத்திறன் இயற்கையாக காணப்பட்டாலும் கூட கற்றல் – கற்பித்தல் முறைகள் மூலம் மலரச் செய்யலாம்.

புதிய கோணத்தில் சிந்தித்து பிரச்சினையை தீர்க்க பல்வேறு வழிகளைக் காண முயலும் போது ஆக்கத்திறன் செயற்படுகின்றது.

அறிவியல் கண்டுபிடிப்புக்கள், ஓவியம் தீட்டுதல், இசை அமைத்தல், உடை வடிவமைப்பு, புதுவகை உணவு பொருட்கள் தயாரித்தல் எனப் பலவகையாக ஆக்கத்திறனை வகைப்படுத்தலாம்.

கலைஞனோ, அறிஞனோ தான் அறிந்த தகவல், அனுபவங்கள், உள்ளுணர்வுகளைப் பயன்படுத்தி புதுமையான ஒன்றை கண்டுபிடித்து, ஆக்கத்திறனை வெளிப்படுத்துகின்றனர்.

எடுத்துக்காட்டாக பாரதியார், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளைக் கூறலாம். ஆக்கத்திறன் என்பது ஆக்கச் சிந்தனையுடன் தொடர்புடையது.

ஆக்கத்திறன் என்னும் சொல்லை உளவியலில் முதன்முதலில் பயன்படுத்தியவர் Guiford என்பவராவார். ஆக்கத்திறனை பற்றி ஏழு பண்புகளை கூறியுள்ளார்.

Sensitivity, Intention, fluency, flexibility, Originality, Intuitive leap, Per instance அதாவது பிரச்சினைகள் பற்றிய என் உள்ளுணர்வு, தடையின்றி துரிதமாக சிந்தித்தல், தனிப்பண்பு (நற்பண்பு), அகக் கட்சித்தாவல், விடாமுயற்சி, புதிய தொடர்புகளைக் காண விளைதல் என்பனவாகும்.

தாரன்ஸ் என்பவர் ஆக்கத்திறனின் 5 பண்புகள் உள்ளன என கூறியுள்ளார். அவையாவன தன்னியல்பு, நெகழ்ச்சி, மாற்று தன்மை, கருத்துவேகம், முற்றிலும் புதுமை என்பனவாகும்.

ஆக்கத்திறன் என்றால் என்ன

புதுமையானவற்றை, தனித்தன்மை உள்ளவற்றைப் படைக்கும் அல்லது உருவாக்கும் திறன் ஆக்கத்திறன் எனலாம். பல்வேறு பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பே ஆக்கத்திறன் எனலாம்.

ஆக்கத்திறனை ஒரு ஆக்கச் செயல் என தீர்மானிப்பதற்கு நான்கு நியதிகளை பயன்படுத்த முடியும். அவையாவன புதுமை (தனித்தன்மை), பொருத்தமான தன்மை (அவைகளுக்கும் விருப்பங்களுக்கும் பொருத்தமானது), மாற்றிப் பயன்படுத்துதல் (அணுகுமுறையில் தீவிர இடப்பெயர்ச்சி), சுருக்குதல் (மிகச் சுருக்கம்) என்பனவாகும். – ஜாக்சன் மற்றும் மெஸிக்

ஆக்கத்திறன் உள்ளவர்களின் பண்புக் கூறுகள்

ஆக்கத்திறன் உள்ளவர்கள் பண்புக்கூறுகளாக கில்பர்ட் என்பவர் கூறியது யாதெனில்

  • பிரச்சினை பற்றிய நுண்ணறிவு
  • துரிதமாகச் சிந்தித்தல்
  • சிந்தனையில் நெகிழ்ச்சி
  • தனித்தன்மை கொண்ட புதுமை
  • விடாமுயற்சி
  • கற்பனை

ஆகியவைதான் ஆக்கத்திறன் வேராகச் செயற்படுகின்றன எனக் கூறியுள்ளார்.

Read more: கடையேழு வள்ளல்கள்

பீரோ வைக்கும் திசை