பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்

pathaviyai rajinama seitha muthal india pirathamar

பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் யார்மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய்

நேர்மையின் சிகரம் என்று போற்றப்படும் மொரார்ஜி தேசாய் அன்றைய காலத்திலே கறுப்பு பண ஒழிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அரச பதவி, பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி சிறைவாசம், சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி, காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை நழுவிப்போன பிரதமர் பதவி, 

பின்னர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து உருவாக்கப்பட்ட கூட்டணியில் பிரதமர் பதவி என அரசியல் மற்றும் பொது வாழ்வில் பெரும்பாலான பக்கங்களை அனுபவ பாடமாக்கியவரே மொரார்ஜி தேசாய்.

இவர் நேர்மையான மனிதர், உண்மையான காந்தியவாதி, சுதந்திரப் போராட்டத் தியாகி, இருப்பினும் பழமைவாதி, பிற்போக்காளர், பிடிவாதக்காரர், யாரிடமும் ஒத்துப் போக மாட்டார் என இருதரப்பு விமர்சனங்களுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.

மொரார்ஜியின் இளமைப்பருவம்

1896 பெப்ரவரி 29 அப்போதைய பம்பாய் மாவட்டத்தில் பல்சார் பிரதேசத்தில் உள்ள பட்டேலி கிராமத்தில் பிறந்தார்.

இவருடைய தந்தை ஒரு ஆசிரியர். தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் கடமை தவறாத கண்ணியத்தையும் கற்றுக் கொண்டதாக பின்னாளில் மொரார்ஜி தேசாய் தெரிவித்துள்ளார்.

அவருக்கு 15 வயது ஆகும் போது அவரது தந்தை இறந்த மூன்றாவது நாள் சுராஜ்மென் என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது.

சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மொரார்ஜி 1918 இல் துணை ஆட்சியராக பொறுப்பேற்றார். 12 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்து பின்னர் தன்னை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

மொரார்ஜியின் அரசியல் பயணம்

தேசாய் காந்தியடிகளின் அகிம்சை வாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டமையால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

சிறைவாசம் அனுபவித்த தேசாய் வெளியே வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரின் கோபத்திற்கு உள்ளாகி மீண்டும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்.

சிறைத் தண்டனைக்குப் பின்னர் வெளியே வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து  சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்று வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சராக பணி புரிந்தார். அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார்.

தேசாய் அமைச்சராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் இராஜினாமா செய்தார். பணம், பதவி, எல்லாவற்றிற்கும் முன் நாடும் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று வாழ்ந்தார். தேர்தலின் பின்னர் மீண்டும் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப்  பதவியேற்றார்.

காவல்துறை நிர்வாகத்தில் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தார். மொரார்ஜி ஏழைகளுக்காக எண்ணி ஏழைகளின் வளர்ச்சிக்கான சட்டங்களை கொண்டு வந்தார். முதலமைச்சர், மத்திய அமைச்சர், மத்திய வணிகம் மற்றும் வருவாய்துறை அமைச்சர், நிதி அமைச்சர் போன்ற பல பதவிகளை வகித்தார்.

மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவி ஏற்றல்

பல்வேறு போராட்டங்கள் மற்றும் இரண்டு தடவைகள் தட்டிப் பறிக்கப்பட்ட பிரதமர் பதவி இவற்றின் காரணமாக இந்திரா காந்தியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா கட்சியில் இணைந்து 1977.03.24 அன்று இந்தியாவின் நான்காவது பிரதமரானார்.

பல்வேறு சேவைகளை மக்களுக்கு ஆற்றிய தேசாய்க்கு பல எதிர்ப்புக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து உருவாகின.

பல குற்றச்சாட்டுக்களை, பழமைவாதி போன்ற முற்போக்கு சிந்தனைகளை முன்வைத்து நம்பிக்கை இல்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் கொண்டுவர தானே இரண்டு ஆண்டுகள் சேவை ஆற்றிய திருப்தியுடன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

தேசாயின் சேவைகள்

பிரதமராக பதவி ஏற்ற உடனேயே அவசரகால கொடுமைச் சட்டங்களைத் தளர்த்தினார்.

அதுமட்டுமல்லாமல்  தேசாய் அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், கட்சிகளின் சுதந்திர செயற்பாடு, தனிநபர் சுதந்திரம், கிராமங்களில் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்தல், இட ஒதுக்கீடு, உள்ளூர் வணிகங்களை உருவாக்குதல், பஞ்சத்தை ஒழித்தல்,

தங்க விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயித்தல், ரஸ்ய அமெரிக்க உறவுகளை சமநிலையில் வைத்திருத்தல், அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானிடம் நட்புக்கரம் நீட்டல், ஊழல் அற்ற நிர்வாகத்தை உருவாக்குதல் போன்ற சேவைகளை மக்களுக்காக ஆற்றினார்.

Read more: சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்