நரம்பு மண்டலம் வலுப்பெற உணவுகள்

narambu mandalam foods in tamil

நாம் நமது நுரையீரல், இதயம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் மற்றும், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றை அன்றாடம் சரியாக செயல்படுகின்றதா என்பதனை உறுதி செய்யவும் அவற்றில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றோம்.

ஆனால் நாம் அதிகம் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது நரம்பு மண்டலத்தை தான். இது நமது இயல்பான செயல்பாட்டில் ஒருங்கிணைந்த ஒரு முக்கிய பகுதியாகும். நரம்பு மண்டலம் தான் நமது நரம்பு முனைகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புகின்றது. நரம்புகள் தான் ஒருவரை புரிந்து கொள்ளவும் உதவுகின்றது.

மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகளவில் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதில் நரம்பு மண்டலப் பாதிப்பும் ஒன்றாக உள்ளது. நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் எழுதும்போது நடுக்கம், சோர்வு, தலைவலி, தடுமாறுதல், களைப்பு போன்றன உண்டாகின்றன.

நமது உடலிற்கு மிக முக்கியமான நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால் அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியை செய்வது மிகவும் அவசியம்.

அத்துடன் நரம்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள குறிப்பிட்ட சில உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நரம்புகள் பலவீனமாவது தடுக்கப்பட்டு வலிமையாக இருக்கும்.

நரம்பு மண்டலம் வலுப்பெற உணவுகள்

அத்திப்பழம்

அத்திப்பழம் உண்பதினால் நரம்பை நன்கு வலுப்படும். உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தியும் அத்திப்பழத்திற்கு உண்டு. இதனால் தினமும் 10 அல்லது 12 அத்திப்பழங்களைத் தினமும் உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும்.

பிரண்டை

பிரண்டையானது உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டது. உணவில் பிரண்டையை அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் சரியாகும்.

மாதுளம் பழம்

நரம்பு மண்டலம் அதிகரிக்க மாதுளம் பழம் அதிகளவு உண்பது நல்லது. மாதுளம் பழமானது உடலிற்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நரம்புகளை சரி செய்து உடலை வலுப்படுத்தும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்க்கு நரம்பை வேறுபடுத்தும் அனைத்து சக்தியும் உண்டு. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதனால் நரம்பு பலம் அடைவதுடன், உடல் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

வெற்றிலை

இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். செரிமானமும் சீராகும். உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தியை வெற்றிலை கொண்டுள்ளது.

முருங்கக்காய் கீரை

பொதுவாக முருங்கை கீரைக்கு வலுப்படுத்தும் சக்தி அதிகம் உள்ளது. பலவிதமான சக்தி தரும் கண்கண்ட மருந்தாகும். உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்த முருங்கைக்காய் கீரையை சமைக்கும் போது அதனுடன் முருங்கைப் பூவையும் சேர்த்து சமைத்து உண்டால் நல்லது.

பேரிச்சை

பேரிச்சை தினமும் பாலுடன் சேர்த்து உண்டு வந்தால் நரம்புகள் வலுப்படும்.

பாதாம், ஆளி விதை

பாதாம் மற்றும் ஆளிவிதை போன்றவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளன. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் தான் ஆரோக்கியமான சரும மற்றும், நரம்புகள் உயிரணுக்கள், ஜவ்வுகளைப் பாதுகாக்கின்றன. அத்தோடு வைட்டமின், கனிமச் சத்துக்கள், புரோட்டின் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இதனால் நரம்பு மண்டலம் பலம்பெறும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் வைட்டமின் B அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இந்தச் சத்துக்கள் அனைத்தும் நரம்புகளை அமைதியடையச் செய்து நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Read More: நோய் வரக் காரணங்கள்

சிறுநீரகம் பலம் பெற உணவு