தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எதுஆனைமுடி

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

தென்னிந்தியாவில் பல இடங்கள் மிகவும் பிரபலமானவைகளாகவும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் காணப்படுகின்றன. இன்றைய இந்த பதிவில் நாம் தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமான ஆனைமுடி சிகரம் பற்றி நம்மில் பலரும் அறிந்திராத பல விடயங்கள் பற்றி பார்ப்போம்.

ஆனைமுடி சிகர அமைவிடம்

இந்த சிகரத்தின் உயரம் 2695m. கடல் மட்டத்தில் இருந்து 8842 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

உதக மண்டலம் ஊட்டி தமிழ்நாட்டில் தலைசிறந்த சிகரமான தொட்டாபட்டாவை விட 237 அடி உயரமானது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் ஒன்றான இந்த மலை முகடு இரபிக்குளம் தேசிய பூங்காவின் தென்பகுதியில் ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது.

இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலைமுகடுகள் மூணார் நகராட்சியின் கீழ் உள்ளது.

உலக பாரம்பரிய பட்டியலில் மேற்குத் தொடர்ச்சி மலை ஐந்து மாநிலங்களை இணைக்கும் ஒரு மலைத்தொடர்ச்சி ஆகும். இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தலைசிறந்த மலையாக விளங்குவது இந்த ஆனைமுடி மலை ஆகும்.

ஆங்கிலேய அளவையாளர் பிரான்பிலிப் என்பவரும் அவருடன் ஐந்து பேர் இணைந்த குழு 1871 இல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அனைத்து சிகரங்களையும் அளந்து தென்னிந்தியாவின் மிகவும் உயரமான சிகரம் ஆனைமுடி என அறிவித்தனர்.

ஆனைமுடி சிகரத்தில் உள்ள உயிர்ப்பல்வகைமை

இது ஒரு புலிகள் சரணாலயம் ஆகும். இங்கு புலிகள் மட்டுமல்லாமல் எண்ணற்ற அதிசய உயிரினங்கள் வாழ்கின்றன. பறவைகள், அதிசயமான பாம்புகள், காட்டெருமை, மான் இனங்கள், செந்நாய், கரடி, யானைகள் போன்ற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.

சுற்றுலாத் தளங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்ற பெருமையை ஆனைமுடி சிகரம் பெற்றுள்ளது. இதன் உயரம் 8842அடி ஆகும்.

ஐயாயிரம் வகைத் தாவரங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 பறவைகள், மற்றும் 179 நீரிலும் நிலத்திலும் வாழக் கூடிய உயிரினங்கள் இந்த ஆனைமுடி மலைச் சிகரத்தில் வாழ்கின்றன. உலகில் அழியும் நிலையில் உள்ள 325 வகை உயிரினங்கள் இங்கு உள்ளன.

ஆறுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாயும் காவிரி, கிருஸ்ணா, கோதாவாரி ஆகிய ஆறுகள் இங்கு உற்பத்தி ஆகின்றன.

இந்த மலைத் தொடரில் உருவாகும் ஆறுகள், விவசாயம் மற்றும் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. புலிகள் சரணாலயமாக விளங்கும் இந்த ஆனைமுடி வனவிலங்கு இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்குகின்றது.

பல உயிரினங்கள் வாழும் இந்த அதிசய இடத்தைப் பார்ப்பதற்கு அனுதினமும் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர்.

பார்ப்பதற்கு கண்ணைக் கவரக்கூடிய இந்த இடங்களே இயற்கை நமக்கு தந்த வரம் ஆகும். அதுமட்டுமல்லாமல் பல அருவிகளும் ஏரிகளும் பல அதிசயமான உயிரினங்களும் ஒன்று சேர இருக்கக் கூடிய இடமே இந்த ஆனைமுடி ஆகும்.

Read more: மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்