சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்குருநானக்

இறையருள் பெற்ற குரு மூலம் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணி இறைவனை அடைய முடிவது மனித வாழ்வின் குறிக்கோள் என்று சீக்கிய சமயம் கூறுகின்றது.

இந்த சீக்கிய சமயத்தை தோற்றுவித்தவர் குருநானக். கடவுளை ஒளி வடிவில் கண்டவர் குருநானக். இவர் கடவுள் இருப்பதை உணர்த்தியதோடு உருவ வழிபாடுகளைத் தவிர்த்து வந்தார்.

சீக்கியத்தைத் தோற்றுவித்த குருநானக் இறைவனை ஒளி வடிவில் கண்டதாக வரலாறு கூறுகின்றது. அவர் வகுத்த வழிகளுக்கே சீக்கிய சமயம் என்று பெயர் வந்தது.

குருநானக் தோற்றம்

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும் சீக்கிய சமயத்தின் முதல் குருவுமான குருநானக் இன்றைய பாகிஸ்தானில் லாகூர் அருகில் உள்ள நங்கானா சாகிப் எனும் கிராமத்தில் 15 ஏப்ரல் 1469 பிறந்தார்.

ஒரு சாதாரண நடுத்தர இந்து குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதல் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல மதங்கள் குறித்து கற்பதிலும் ஆர்வமாக இருந்தார்.

அவருடைய தந்தை உள்ளூரில் வரி வசூலிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் அவருடைய தந்தையின் வழித்தடத்தில் சென்ற குருநானக் பின்னர் அதனை விடுத்து ஆன்மீக வழியில் செல்ல தொடங்கினார்.

சிறு வயது முதல் அதிக நேரம் தியானம் செய்வதில் ஈடுபட்டு வந்தார். தனது பதனோராவது வயதில் இந்து மத சம்பிரதாயப்படி புனித நூல் அணிவதை முற்றாக மறுத்தார். இது போன்ற உருவங்கள், சின்னங்களை வைத்து வழிபடுவதை ஏற்க மறுத்தார்.

சீக்கிய மதத்தின் தோற்றம்

ஒரு தடவை தியானம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென மூன்று நாட்கள் காணாமல் போயிருந்தார். திரும்பி வந்த அவர் வாய் திறந்து பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.

அவர் பேசத் தொடங்கிய போது இந்து, முஸ்லிம் என எந்த மதத்தையும் பற்றி பேசாமல் வேறு ஒரு புதிய மதம் பற்றி பேசத் தொடங்கினார். அதில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு மதம் குறித்து பேசினார்.

அதில் கடவுளின் பெயரே மந்திரமாக கூறப்பட்டது. குருமார்களின் வாழ்க்கையும் போதனைகளும் பக்திப்பாடல்களாக உலவுகின்றது. உருவ வழிபாடு, கபட வேடம், மந்திரம், மாயம், அனைத்தும் உடன்பாடற்றவையாக காணப்பட்டன.

இவ்வாறு குருநானக் கூறிய புதிய மதமே சீக்கிய மதம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் சீக்கியர்கள் என அழைக்கப்பட்டனர்.

குருநானக்கின் சமய போதனைகள்

1999ஆம் ஆண்டு குருநானக் தன்னுடைய 30ஆவது வயதில் ஞானம் பெற்றார். தெய்வீக நிலையை அடைந்த குருநானக் அன்றிலிருந்து அன்பு பற்றியும் கடவுளின் போதனைகள் குறித்தும் உலகின் பல பாகங்களுக்கு சென்று விளக்கத் தொடங்கினார்.

இவருடைய இந்த பயணத்தில் தென்னிந்தியாவில் திபெத், டாக்கா, பூடான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று மக்களை சந்தித்து பிரசங்கம் செய்தார். மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைந்தார்.

மதத்தால் வேறுபட்டுக் கிடந்த மக்களிடையே அன்பினை விதைத்து ஒன்றுபடுத்தினார். நாம் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும். அது மதங்களால் ஆனது அல்ல. அன்பு வழியினாலான பாதை என்று விளக்கமளித்திருந்தார்.

குருநானக் மத ஒற்றுமைக்காக மகத்தான சேவை செய்தார். இவருடைய போதனைகள் யாவும் அன்பை வலியுறுத்தியே கூறப்பட்டன. இதனால் குருநானக் வாழ்ந்த காலத்தில் சீக்கிய மதம் விரைவாக பரவியது.

சீக்கிய மதத்தின் பரம்பல்

குருநானக் போதனைகளைக் கேட்ட இந்து, முஸ்லிம் எனப் பல கலாசாரங்களைக் கொண்ட மக்களும் விரைவாக சீக்கிய மதத்திற்கி மாறினர். குருநானக்கின் போதனைகள் அடங்கிய நூல் “குரு கிரந்த் சாகிப்” என அழைக்கப்படுகின்றது.

உலக மக்கள் யாவரும் ஒரே மாதிரியானவர்கள் என வலியுறுத்தினார். உதவி செய்தல், மோசடி இல்லாத நேரடியான வாழ்வு, எல்லா நேரங்களிலும் கடவுளைத் தியானித்தல், முன்னோர்களை மதிக்க வேண்டும் போன்ற கொள்கைகளைக் கடமையாக்கினார்.

சீக்கியர்களுக்கு உருவ வழிபாடு இல்லை. குருத்வாரா என்பது சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமாகும். குருக்ஹரகந்த சாஹிப்பை வாத்தியப் பின்னணியுடன் குருத்வாராக்களில் குர்வானி இசையில் இவை பாடப்படும்.

இவ்வாறு உலகிற்கு சீக்கிய மதத்தை தந்த குருநானக் 22.09.1539 அன்று இறைபதம் அடைந்தார்.

Read more: தமிழின் முதல் கள ஆய்வு நூல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்