நூலகத்தின் சிறப்பு கட்டுரை

Noolagam Katturai In Tamil

இந்த பதிவில் “நூலகத்தின் சிறப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

அன்றாட நிகழ்வுகளை அறியவும், இலக்கியம், வரலாறு, பொது அறிவு, அறிவியல் என அறிவார்ந்த படைப்புக்களை பருக உதவும் அறிவுத் தடாகம் தான் நூலகம்.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதாகும்.

  • Noolagam Katturai In Tamil
  • நூலகத்தின் சிறப்பு
எனது கனவு நூலகம் கட்டுரை

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

குறிப்புசட்டகம்

  1. முன்னுரை
  2. நூலகங்களின் அவசியம்
  3. நூலகத்தின் வகைகள்
  4. நூலகங்களின் பெருமைகள்
  5. முடிவுரை

முன்னுரை

“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.

ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நூலகமே அந்த சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதனை போல நூலகங்கள் இல்லாத ஊரும் பொலிவிழந்ததாகவே அறியப்படுகின்றது.

இக்கட்டுரையில் நூலகங்களினுடைய அவசியம், அவற்றின் வகைகள் மற்றும் அவற்றின் பெருமைகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

நூலகங்களின் அவசியம்

மனித வாழ்வின் மான்பு எனப்படுவது. நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும்.

இதனை “புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது” என குறிப்பிடுவார்கள். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமானால் கல்வியிலும் அறிவிலும் மேன்மை பொருந்திய பிரஜைகள் அங்கு வாழ்வதனால் தான் இது சாத்தியமாகும்.

மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் இந்த நூலகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் எமது முன்னோர்களான அரசர்கள் தமது நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்.

மனிதர்களின் அறிவு மிகச்சிறந்த பலமான ஆயுதம் ஆகும். இதனால் தான் பண்டை தமிழர்கள் அறிவை வளர்க்க பல பணிகளை ஆற்றினர்.

எதிரிகளும் ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின் அவர்களது கல்வியையும் நூலகங்களையுமே அழிக்க முற்பட்டனர் என்பது வரலாறு. இவற்றின் வாயிலாக நூலகங்களின் முக்கியத்துவம் தெளிவாக புலனாகிறது.

நூலகத்தின் வகைகள்

நூலகங்கள் பொதுவாக அமைதியான சூழலை கொண்டு காணப்படும். இவை நிர்வாகம் செய்யப்படும் இயல்புகளை பொறுத்து பல வகைகளாக காணப்படும் அவையாவன.

பொதுநூலகம், கல்வி நூலகங்கள், விசேட நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் போன்றவையாகும்.

பொதுநூலகங்கள் எல்லாவகையான துறைசார்ந்த நூல்களையும் கொண்டு காணப்படும்.

அது போல கல்வி நூலகங்கள் கற்றலுடன் தொடர்புடையவர்கள் வாசிக்க கூடிய நூல்களை கொண்டு காணப்படும். இதனை ஆசிரியர்கள் மாணவர்களே அதிகம் பயன்படுத்துவர்.

பாடசாலை நூலகங்கள் இவை பாடசாலையில் அமைந்து காணப்படும் இங்கு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான நூல்கள் காணப்படும்.

இவ்வாறு தேவைகளின் அடிப்படையில் நூலகங்கள் அளவிலும் தொழிற்பாட்டிலும் வேறுபட்டவையாக காணப்படும்.

நூலகங்களின் பெருமைகள்

கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன.

மனிதனுக்கு அழகான குணமான அமைதியை இந்த நூலகங்கள் தரவல்லன. உலகத்தில் அமைதி கிடைக்கவில்லை என புலம்புவர்கள் ஒரு முறை நூலகங்களுக்கு சென்றால் இந்த குறை தீர்ந்துவிடும்.

பொறுமை, தேடல், ஆழமான வாசிப்பு, விவேகம், எழுத்தாற்றல், கேள்வி, ஞானம், படைப்பாற்றல் போன்ற உயர்ந்த திறன்களை இந்த நூலகங்கள் வழங்கும் பெருமை உடையன.

பல நூறு நண்பர்களை விட ஒரு நல்ல புத்தகம் மிகச்சிறந்த நண்பன் என்றால் பல லட்சம் நல்ல புத்தகங்களை உடைய நூலகங்கள் எத்தகையன?

பெருமைகள் பல மிகுந்த நூலகங்களை மனிதர்கள் சரியாக பாவிக்க வேண்டும்.

முடிவுரை

ஒவ்வொரு நாடுகளினுடைய பெருமையும் சிறப்பும் அந்த நாட்டு மக்களுடைய கல்வி அறிவிலேயே தங்கியுள்ளது. கல்வி அறிவு உயர்வதனால் அந்த நாடு சிறந்த வாழ்க்கை தரத்தை அடைந்து கொள்கின்றது.

எனவே அந்த நாட்டினுடைய அறிவு மேலாண்மையில் நூலகங்கள் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.

ஆட்சியாளர்களானாலும் பொதுமக்களானாலும் நாடெங்கிலும் பயன் தரும் நூலகங்களை அமைப்பதனால் அவற்றின் மூலமாக நல்லறிவினை பெற்று நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாகவும் மாற்ற முடியும்.

You May Also Like :

எனது கனவு பள்ளி கட்டுரை

கல்வி வளர்ச்சி கட்டுரை