எனது கனவு நூலகம் கட்டுரை

En Kanavu Noolagam Katturai In Tamil

எனது கனவு நூலகம் கட்டுரை (En Kanavu Noolagam Katturai In Tamil): ஒரு நூலகம் திறக்கப்படுவதால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும் என்பார்கள்.

நூலகம் என்பது கோவிலை போன்ற ஒரு புனிதமான இடமாகும் இந்த பதிவில் “எனது கனவு நூலகம் கட்டுரை” பார்க்கலாம்.

எனது கனவு நூலகம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நூலகத்தின் அமைப்பு
  3. நூலகத்தின் வகைகள்
  4. கல்வி வளர்ச்சியும் நூலகங்களும்
  5. அருகிவரும் வாசிப்பு பழக்கம்
  6. நூலகங்களில் உளள்வை
  7. அறிவார்ந்த சமூகத்தின் கனவு நூலகங்கள்
  8. முடிவுரை

முன்னுரை

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” எனும் ஒளவையாரின் வாக்கிற்கிணங்க ஒரு மனிதன் பயனுள்ள பல நூல்களை வாசிக்கின்ற பொழுதே பூரணமடைகின்றான்.

வாசிப்பு அந்த அளவிற்கு மனிதனுக்கு முக்கியமானதாக உள்ளது. அறிவினை வளர்த்து கொள்ள கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக விளங்குவன இந்நூலகங்கள் ஆகும்.

கல்வியில் சிறந்த அறிஞர்கள் எழுதிய நூல்களை சேமித்து வைக்கும் இடங்களே நூலகங்கள் ஆகும். நூலகங்களை அறிவு களஞ்சியங்கள் என்று சொன்னால் மிகையாகாது நீண்டகாலங்களாக கல்வி துறையினரின் அறிவுப்பசியை போக்கும் இந்நூலகங்கள் அறிவார்ந்த ஒரு சமூகத்தின் அடித்தளமாகும். இதனாலேயே எமது மூதாதையர்கள் நூலகங்களை அமைத்து அறிவினை வளர்த்தனர்.

பெறுமதியான நூல்களையும் நல்லதோர் சூழலையும் கொண்ட எனது கனவு நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் அமைப்பு

“ஒரு நல்ல நூல் பல நல்ல நண்பர்களுக்கு சமம்” என்று கூறுவார்கள் நாம் உலக அறிவினையும் நுண்ணறிவனையும் பெற்றுக்கொள்ள பல நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தமக்கு தேவையான எல்லா புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.

ஆகவே நமக்கு தேவையான புத்தகங்களை இரவல் பெற்று படிக்க நூலகங்கள் உதவுகின்றன. நூலகங்களானவை அமைதியான காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில் அமைவு பெறவேண்டும்.

இங்கு நூலகர்கள் நூலக உதவியாளர்கள் வாசகர்கள் போன்றோரை உள்ளடக்கியதாகும் நூலகத்தில் நூல்கள் துறைவாரியாக அடுக்கப்பட்டிருக்கும். இவற்றில் தேவையான நூல்களை தேர்ந்தெடுத்து படிக்கமுடிவதுடன் இரவல் பெறவும் முடியும்.

நூலகத்தின் வகைகள்

நூலகங்களானவை பிரதானமாக தேசிய நூலகம், மாவட்ட நூலகம், இணைய நூலகம், கிளை நூலகம், பிரதேச நூலகம், பகுதிநேர நூலகம், பிரதேச நூலகம், பாடசாலை நூலகம், பல்கலைக்கழக நூலகம், பொது நூலகம் என வகைப்படுத்தப்படுகின்றன.

இதில் ஒன்று தான் எனது கனவு நூலகம்.

கல்வி வளர்ச்சியும் நூலகங்களும்

பாடசாலைகளில் கற்பிக்க படுகின்ற பாடத்திட்டங்களை விடவும் மாணவர்களது பொது அறிவு இலக்கியங்கள் சிறுகதைகள் நாவல்கள் சஞ்சிகைகள் கவிதைகள் மொழித்திறன் சார் நூல்கள் சுயசரிதைகள் ஏனைய மொழிநூல்கள்

போன்ற மேலதிகமான அறிவினை புத்தகங்கள் புகட்டுவதோடு.

அமைதியான சூழலும் வாசிப்பு பழக்கவழக்கங்களும் மாணவர்கள் மத்தியில் நல்ல விழுமியங்களை வளர்ப்பதனாலும் போதை பொருட்களும் சமூக சீர்கேடுகளும் தலைவிரித்தாடும் எமது சமூகத்தில் எனது கனவு நல்ல நூலகமாகும்.

அருகி வரும் வாசிப்பு பழக்கவழக்கம்

தகவல் தொழில்நுட்பம் பரிநாம வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இணைத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிமையாகி கிடக்கும் எமது இளம் சமுதாயத்தினர் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ வாசிக்கின்ற பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.

வாசிக்கவோ நல்ல ஆக்கங்களை எழுதவோ விரும்பாத சமூகம் சினிமா நாகரகீத்தில் மூழ்கி திளைத்துவருவது கவலைக்குரிய விடயமாகும் இந்நிலைமையால் அடுத்த தலைமுறையினருக்க எமது வரலாறுகளை கூட அறிந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டு விட்டது.

இந்நிலமை மாறவேண்டுமாயின் வாசிப்பினை ஊக்கப்படுத்துகின்ற நூலகங்களை அமைத்து மாணவர்களை வாசிக்க ஈடுபாடு உண்டாக்க வேண்டும்.

நூலகத்தில் இருப்பவை

ஒரு சிறந்த நூலகமொன்றில் இலக்கியம், தொழில்நுட்பம், வரலாறு, அரசியல், புவியியல், வானியல், சித்த வைத்தியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த நூல்களும் நாழிதழ்கள், வார இதழ்கள், செய்திதாள்கள், பிறமொழி நூல்கள், இலக்கண இலக்கிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதை தொகுப்புக்கள், சஞ்சிகைகள், பல்சுவை இலக்கியங்கள், போட்டி பரீட்சை நூல்கள், மின்நூல்கள் போன்றனவும்

கணனி வசதிகள், இணைய தள வசதிகள் போன்ற வசதிகளும் படிப்பதற்கான இருக்கைகளுடன் கூடிய சூழலும் இவற்றை சிறப்பாக கவனித்து கொள்ள சிறப்பான நூலகரும் இருக்க வேண்டும். இவ்வாறான நூலகங்களுக்கு சென்று படிப்பதன் மூலம் அறிவினை வளர்த்து கொள்ள முடியும்.

அறிவார்ந்த சமூகத்தின் கனவே நூலகம்

அன்று தொட்டு இன்று வரை தமிழ் சமூகம் தனக்கென இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை தன்னகத்தே கொண்டதாகும். ஆகவே பல கல்விமான்கள் தோன்றி பல பெறுமதியான நூல்களை எமக்காக தந்து விட்டு சென்றுள்ளனர் ஆனால் எமது இன்றை கல்வி சமுதாயம் அந்நூல்களை வாசிப்பதோ அவற்றில் உளள் நல்ல விழுமியங்களை எடுத்து கொள்வது குறைவாகவுள்ளது.

ஒரு அறிவார்ந்த சமூகம் கட்டியெழுப்பபட வேண்டுமாயின் அதன் கனவாக நல்ல நூல்களும் நூலகங்களும் அவசியமாகும்.

முடிவுரை

ஆக இந்த நிலையை உணர்ந்து நூலகங்களுக்கு சென்று அமைதியாக நல்ல நூல்களை தேர்ந்தெடுத்த படிப்பதன் மூலம் கற்பனை சக்தியையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

“புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

என்ற பாவேந்தர் பாரதி தாசனின் கூற்றுக்கிணங்க ஓய்வு நேரங்களை பயனுள்ளவாறு நூலகங்களை பயன்படுத்தி எமது சமூகம் எழுச்சி அடையவேண்டும் என்பதுவே எனது கனவாகும்.

You May Also Like:

கொரோனா கால கதா நாயகர்கள் கட்டுரை