பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு நாளுக்கென்று ஒவ்வொரு திதி காணப்படுகின்றது. திதிகளில் ஏகாதசி, சதுர்த்தசி, தசமி, நவமி, துவாதசி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி போன்றன சிலவாகும். இன்றைய இந்த பதிவில் நாம் இன்று நவமி திதி பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் நோக்கலாம்.
Table of Contents
நவமி திதி என்றால் என்ன
நவமி என்பது ஒரு வடமொழிச்சொல் ஆகும். நவ என்பதன் பொருள் ஒன்பது என்பதாகும். அமாவாசை, பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதி ஆகும்.
பௌர்ணமி திதியில் இருந்து வரும் ஒன்பதாவது நாள் கிருஸ்ணபட்ச நவமி திதி என்றும் அமாவாசை திதியில் இருந்து வரும் ஒன்பதாவது நாள் சுக்கிலபட்ச நவமி திதி என்றும் அழைக்கப்படுகின்றது.
நவமி திதியின் பிறந்தவர்களின் குண இயல்புகள்
உலகினையே படைத்து ஆட்சி புரியும் பிரம்மா பல அவதாரங்களைப் பெற்று பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். மகா விஸ்ணுவின் பல அவதாரங்களில் பலராலும் போற்றப்படும் அவதாரமாக விளங்குவது இராம அவதாரம் ஆகும்.
இவ்வாறு சிறப்புக்களைப் பெற்ற இராமபிரான் பிறந்தது நவமி திதி ஆகும். இவர் பிறந்த நாளை இராமநவமி என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படுவதோடு இந்த நாள் மக்களால் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகின்றது.
நவமி திதியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியேயான குணநலன்கள் காணப்படுகின்றன. நவமி திதியில் பிறந்தவர்கள் எப்போதும் புகழ் பெற்றவர்களாகக் காணப்படுவார்கள். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை குறைவாகக் காணப்படும். மனைவி, பிள்ளைகள் மீது அதிகம் பாசம் காணப்படாது.
இவ்வாறு நவமி திதியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் எதிர்பாலினத்தின் மீது ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எப்போதும் தமக்கான புகழைத் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
நவமி திதியில் பிறந்தவர்களுக்கு மன தைரியம் அதிகமாகக் காணப்படும். யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டார்கள். மேலும் கலைகளைப் பயில்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்களது வாழ்வை தாம் விரும்பியபடி வாழக்கூடியவர்கள்.
நவமி திதியில் செய்ய வேண்டியவை
நவமி திதிக்குரிய தெய்வம் அம்பிகை. இந்த நவமி திதியில் காவல் தெய்வங்களை வழிபடுதல், எல்லைத் தெய்வங்களை வழிபடுதல், போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் நன்று.
மேலும் புதிய வேலைகளை ஆரம்பித்தல், நல்ல காரியங்களில் ஈடுபடுதல், ஆடை ஆபரணங்கள் புதிதாய் வாங்குதல், தான தர்ம செயல்களில் ஈடுபடல், புதிதாக இரும்பாலான ஆயுதங்கள் செய்தல் பயன்படுத்தல் செங்கல் சூளைக்கு சூடு வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.
நவமி திதியில் செய்ய கூடாதவை
நவமி திதியில் பெரும்பாலும் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் எழும். குறிப்பாக பொறாமை, பழி வாங்குதல், பிறரைத் தாக்குதல், போன்ற எண்ணங்கள் மனதில் உருவாகும்.
இதற்கு நாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டு மனதை திடப்படுத்தி ஒருமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் வரும் நவமி திதியில் சுப காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும்.
நவமி திதியின் பரிகாரங்கள்
நவமி திதியில் உருவாகும் கெடுதல்களைத் தவிர்க்க சரஸ்வதி தேவியை வழிபடுதல் அனைத்து தீய செயல்களையும் மாற்ற சிறப்பினை அளிக்கும். குறிப்பாக இராமபிரான் அவதரித்த இராம நவமியில் விரதமிருந்து இராமனை வழிபடுவதால் ஆஞ்சநேயரின் அருளாசி கிடைக்கும். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.
நவமி திதிக்கு சிம்மம் மற்றும் விருச்சிகம் என்பன கூடாத ராசிகள் ஆகும். துர்க்கை மற்றும் சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் வளர்பிறை, தேய்பிறை நவமி திதிக்குரிய தெய்வங்கள் ஆகும்.
Read More: சதுர்த்தி என்றால் என்ன