பங்குனி உத்திரம் என்றால் என்ன

panguni uthiram endral enna

பங்குனி உத்திரம் என்றால் என்ன

பங்குனி உத்திரம் என்றால் என்ன

பங்குனி உத்திரமானது முருகப்பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த நன்நாளாகும். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12 ஆவது நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் சேர்ந்து பௌர்ணமி நாளன்று வருவது பங்குனி உத்திரம் ஆகும்.

பங்குனி மாதத்தில் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றன என வரலாறு கூறுகின்றது.

பங்குனி உத்திரம் தோற்றம் பெற்ற வரலாறு

அசுரர்களின் அரக்க குணங்களை அழிக்க சிவபெருமானிடமும், உமாதேவியாரிடடும் முருகப் பெருமான் ஆசி பெற்று முருகப் பெருமானின் படைத் தலைவன் வீரப்பாகு தாரகாசுசனுடன் போரிடுவதற்கு செல்கின்றான்.

தாரகாசுரன் போட்டியிட்டு வெல்ல முடியாமல் தனது மாய வேலைகளுடாக வீரபாகு படையினரை தாக்கினான். இதனை அறிந்த நாரதர் தகவலை முருகப் பெருமானிடம் தெரிவிக்க ஆத்திரமடைந்த முருகப்பெருமான் தாரகாசுரனை கடுமையாக தாக்குகின்றார்.

தாக்குதலை எதிர் கொல்ல முடியாத தாரகாசுரன் எலியா மாறி மலைக்குள் ஒழிந்துக் கொண்டான். பின் முருகப்பெருமான் தன் அன்னை அருளிய சக்தி வாய்ந்த வேலினை எறிய வேல் மலையினை துகள்களாக்கியது.

பின் தாரகாசுரன் வெளிப்பட தாரகாசுரனை அழித்தார். மற்றும் அவனின் தமயன் சூரபத்மன் ஆகிய இருவரையும் போரிட்டு அழித்ததால் மனமகிழ்ந்த தேவர்குல தலைவர் தனது மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்கு பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளன்று மணம் முடித்த நாள் பங்குனி உத்திரம் எனப்படும்.

பங்குனி உத்திரமானது கல்யான விரதம், திருமண விரதம் என்றும் அழைக்கப்படும். சிவன்- பார்வதி, ராமர்- சீதைக்கும், முருகன் – தெய்வானைக்கும், பெருமாள் – மகலாட்சுமிக்கும் இந்நாளிலே திருமணம் நடைபெற்றது. இந்த நன்நாள் அன்று விரதம் இருப்பது வழக்கம்.

இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று பலர் பால்குடம் ஏந்தி வந்தும், காவடி எடுத்தும் வழிபடுவர்.

பங்குனி உத்திர விரதம் மேற்கொள்வது எப்படி

பங்குனி உத்திரம் நாள் அன்று விரதம் மேற்கொள்வோர் காலையில் குளித்து விட்டு சுவாமி படங்களிற்கு மலர்கள் வைத்து, மாலை கட்டி, குங்குமம் சந்தனம் இட்டு விளக்கேற்றி இறைவனை வழிபட்டு எவ்வித கெட்ட சிந்னைகளும் இன்றி முருகனை நினைத்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை படிப்பது நன்று.

“ஓம் சரவண பவ” எனும் முருகனுடைய நாமத்தை சொல்லலாம். ஆலயத்திற்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ மாலை வேலைகளில் இறைவனை வழிபட்டு ஆரத்தி காட்டி பொங்கல், பாயாசம் போன்ற நைவேத்தியங்கள் படைத்து விரதத்தை முடிக்கலாம்.

முடியாதவர்கள் பழம், வெற்றிலை, பாக்கு , பால் வைத்து படைத்து வழிபாட்டினை அனுஷ்டிக்கலாம்.

பங்குனி உத்திர நாளன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். விரதம் முடித்த பின்பு மாலை வேலையில் ஆலயத்திற்குச் சென்று முருகப் பெருமானை வணங்கி வரலாம்.

பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை முழு மனதோடு வணங்கினால் வேலையில்லாதோருக்கு வேலையும் வேலை செய்பவர்களுக்கு பணியில் பதவி உயர்வும் கிடைக்கும்.

திருமணம் ஆகாத பிரச்சினை ஏற்படும் போது இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது திருமணம் கைகூடும். நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களும் சிறப்பாக நடந்தேறும்.

மேலும் இவ்விரதத்தை மேற்கொண்டு ஆலயத்திற்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவோமானால், சகல பாவங்களும் எம்மை விட்டு நீங்கும்.

48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்வாராயின் பிறப்பற்ற முக்தி நிலை கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. தான தர்மங்கள் மேற்கொள்வதன் மூலம் புண்ணியங்கள் கிடைக்கும்.

Read more: பிரதோஷம் என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன