நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வது என்பது அனைவரது விருப்பமேயாகும். ஆனால் இன்று பல்வேறுபட்ட நோய்கள் அனைவரையும் ஆட்கொண்டு வருகின்றது. இவ்வாறான நோய்களுள் ஒன்றே தொற்றா நோயாகும்.
Table of Contents
தொற்றா நோய்கள் என்றால் என்ன
தொற்றா நோய் என்பது யாதெனில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவமுடியாத நோய்களே தொற்றா நோய் எனப்படும். இவை நோயுற்ற நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.
இவ்வகையான தொற்றா நோய்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. உலகில் ஏற்படும் மரணங்களில் 63 சதவீதமானவை தொற்றா நோய்களின் காரணமாகவே ஏற்படுகின்றன.
தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
ஆரோக்கியமாக உணவு பழக்கவழக்கங்கள் அதாவது உணவு பழக்கவழக்கங்களில் சுத்தத்தை பேணுதல் மட்டுமல்லாது ஆரோக்கியத்தை தரும் புரதம், காபோவைதரேற்று, விற்றமின் அடங்கியுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனூடாக எம்மை அழிக்கும் நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
உடற்பயிற்சி செய்தல் வேண்டும். ஒரு மனிதனானவன் உடலில் கொழுப்புக்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு உடற்பயிற்சியானது அவசியமானதாகும். உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் ஊடாக பெரும்பாலான தொற்றும் நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் எம்மை அண்டாது. மேலும் ஆரோக்கியமாக வாழவும் வழியமைத்து தருகின்றது.
அதிகளவு எண்ணெய் தன்மையான உணவு வகைகளை உண்ணக்கூடாது, அதிகளவில் பழங்களை சாப்பிட வேண்டும். மேலும் மன அழுத்தங்கள் ஏற்படாது மனதுக்கு இதமான இயற்கையோடு ஒன்றிய விடயங்களில் ஈடுபடல் வேண்டும்.
தொற்றா நோய்களின் வகைகள்
நீரிழிவு
இது தொற்றா நோய்களுல் ஒருவகை நோயாகும். அதாவது தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்துள்ள போதிலும் அதனை பயன்படுத்த இயலாத நிலையில் இந்நோய் காணப்படுபவர்களது இரத்தத்தில் அதிகளவு சக்கரை காணப்படும்.
இன்சுலின் அதனது சமச்சீர் நிலையை இழந்த நிலையில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரத்தத்தில் அதிகளவு சக்கரை இருப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக தாகமெடுத்தல், பசி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயால் ஏற்படும் விளைவுகள்
பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா அல்லது இறப்பு.
இதய நோய்
இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் கொழுப்புச்சத்து, உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பக்க விளைவுகள் இதய நோய்க்கு காரணமாக அமைகின்றது.
இதய நோய்க்கான காரணங்கள்
- எண்ணெயில் செய்யப்பட்ட உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல். அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்ளல்.
- சோம்பலான வாழ்க்கை முறை.
- புகைப்பிடித்தல்.
- மன அழுத்தம்.
புற்று நோய்
கேடு விளைவிக்கும் உடற் கட்டிகளால் ஏற்படும் பல நோய்களில் ஒரு வகை நோய் புற்று நோய் ஆகும். இக்கட்டிகள் உடலில் பரவும் ஆற்றலுடையதாகும்.
புற்று நோய்களுக்கான அறிகுறிகள்
உடலில் கட்டி ஏற்படல், இரத்த போக்கு, நீடித்த இருமல், காரணமில்லாமல் எடை இழப்பு.
புற்று நோயை தடுப்பதற்கான வழிகள்
- சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல்.
- அதிக பழவகைகள் காய்கறிகள் உட்கொள்ளல்.
- உடல் எடையை சீராக பேணல் சீரான உடற்பயிற்சி.
நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்த மருத்துவம் மற்றும் உணவு வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
மேலும் உடற்பயிற்சி, ஆரோக்கியமாக உணவு மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிப்பதன் ஊடாக இவ்வாறான தெற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பை பெற முடியும்.
Read more: சுற்றுச்சூழல் என்றால் என்ன