மெத்தனால் எத்தனால் என்றால் என்ன

மெத்தனால் மற்றும் எத்தனால் என்பது ஒரு வகை வேதிச் சேர்மானமாகும். இவை இரண்டும் நச்சுத் தன்மையினை ஏற்படுத்தக் கூடியதாகவே காணப்படுகின்றது.

மெத்தனால் என்றால் என்ன

மெத்தனால் என்பது CH3OH எனும் மூலக் கூற்றை கொண்ட ஒரு சேர்மமாகும். அதாவது ஒரு மெத்தில் குழு ஐதராக்சில் குழுவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது மெத்தனால் எனப்படும். இது ஒரு ஆல்கஹால் வகையில் ஒன்றாகும். இதற்கென்று தனித்துவமான மனம் காணப்படுகின்றது.

எத்தனால் என்றால் என்ன

எத்தனால் என்பது தானிய ஆல்கஹால் ஆகும். எத்தனால் என்பது எரிநறா அல்லது வெறியம் வகையை சேர்ந்த ஒரு வேதிச் சேர்மமாகும். இது எரியக் கூடியதாகவும் நிறமற்றதுமாக காணப்படும்.

இதுவும் ஒரு போதைப் பொருளாகும். எத்தனால் ஒரு பொழுதுபோக்கு பானமாக காணப்படுவதோடு குடிவெறி மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணமாக அமைகிறது.

மெத்தனாலினால் ஏற்படும் பாதிப்புக்கள்

பலருடைய உயிரிழப்பிற்கு காரணம் மெத்தனாலே ஆகும். ஏனெனில் இன்று ஆல்கஹாலில் இது கலந்துள்ளதால் நச்சுத் தன்மை அதிகளவு கொண்டுள்ளதோடு மனித உயிர்களை காவு வாங்குகின்றது.

மெத்தானலை உட்கொள்வதினூடாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் என பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது மரணம் வரை செல்லக் கூடியதாக காணப்படுகின்றது.

எத்தனாலின் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள்

எத்தனாலின் ஊடாக தலைவலி, குமட்டல், தூக்கம், பலயீனம், சுயநினைவின்மை போன்ற நிலைகளை ஏற்படுத்தும்.

எத்தனாலை உள்ளிழுக்கும் போது கண் மற்றும் சுவாசக்குழாயில் எரிச்சல் போன்றவை ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, கல்லீரலின் செயற்பாடுகள் குன்றி பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

எத்தனால் மூலமாக நீருக்கு பல்வேறு வகையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதாவது ஆக்சிஜன் குறைவடைவதால் மேற்பரப்பு நீரின் தாக்கம் நீர்வாழ் உயிரினங்களை கொன்று விடுகிறது.

மெத்தனால் எத்தனால் இரண்டுக்குமிடையேயான வேறுபாடுகள்

ஒரு காபனை கொண்டு மெத்தனால் காணப்படும். எத்தனாலானது 02 காபன்களை கொண்டு இணைந்து காணப்படும்.

மெத்தனாலை எரித்தால் நீல நிற தீ ஏற்படும். எத்தனாலில் வெளிரிய வெள்ளை நிறத்தில் தீ எரியும்.

மெத்தனாலானது அதிக நச்சுத் தன்மையினை கொண்டு காணப்படுகின்றது. எத்தனாலானது குறைந்தளவிலேயே நச்சுத் தன்மையை கொண்டுள்ளது.

எத்தனாலனது அதிகளவு ஆல்கஹாலிலே பயன்படுத்தப்படுகின்றது. மெத்தனாலினை கள்ளச்சாராயத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் கண்பார்வை குறைபாடு ஏற்படுகின்றது.

எத்தனாலின் பயன்கள்

எத்தனாலானது ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுவதோடு பக்டீரியாவை எதிர்நோக்கும் நோய் நுண்ணுயிர் தடையாக காணப்படுகின்றது. மேலும் புரதத்தினுடைய வீரியத்தை குறைக்க கூடியதாகவும் காணப்படுகின்றது. நீரில் கரையாது காணப்படும். பல்வேறு மருந்துகளை கரைப்பதற்கு எத்தனாலானது துணைபுரிகின்றது.

தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கை பொருளாகவும் எத்தனாலானது பயன்படுத்தப்படுகின்றது. எத்தனாலானது பிரேசில் நாட்டில் எத்தனால் இயந்திர எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எத்தனாலானது சில சந்தர்ப்பங்களில் ஆய்வகங்களில் உலர் பனிக்கட்டியுடன் அல்லது குளிரூட்டிகளில் வெப்பத்தை குறைக்க பயன்படுத்தப்படுகின்றது.

இன்றைய கால கட்டத்தில் மெத்தனால் மற்றும் எத்தனாலின் நிலை
இன்றைய கால கட்டத்தில் ஆல்கஹால் மற்றும் மது பாவனையின் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு காணப்படுகின்ற ஒரு சூழலையே காண்கின்றோம்.

அதாவது ஆரம்ப காலங்களில் மது பாவனை பயன்பாடு சற்று குறைவாக காணப்படினும் இன்று அதன் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. ஏனெனில் இன்று எத்தனாலின் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்டமையேயாகும்.

Read More: மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

மது ஒழிப்பு கட்டுரை