தர்ப்பை புல் தொன்மையான ஒருவகைத் தாவரம். இது மிகவும் தூய்மையான இடங்களில் வளரக்கூடியது. தர்பைக்கு அக்னிகற்பம் என்றும் பெயருண்டு. தர்ப்பையில் குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விசுவாமித்திரம், யவை என ஏழுவகை உண்டு.
இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. மழைக் காலத்தில் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும் தர்ப்பை அழுகிப்போவதில்லை என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
கடும் கோடையிலும் காய்ந்து போகாது. திருமணம் முதல் இறப்பு வரை இந்து மதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.
தர்ப்பை புல் பயன்கள்
1. தர்ப்பைப் புல்லில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக இருக்கிறது.
2. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். குடிநீரில் தர்பைப் புல்லை போட்டுக் குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும்.
3. சிறுநீரகப் பிரச்சினையைக் போக்கும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும். சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது. இதற்கு 15 கிராம் தர்ப்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
4. கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பை பயன்படுத்தப்படுகின்றது.
5. உடல் சூடு தணியும். இதற்கு தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
6. மன அழுத்தம் மற்றும், மன அழுத்தால் தூக்கமின்மைப் பிரச்சினை ஏற்படுகின்றது. இதனைப் போக்க தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட பாயைப் பயன்படுத்தலாம்.
7. தர்ப்பை புல் விஷத்தை முறிக்க வல்லது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பை போட்டு வைக்கப்படுகின்றது.
8. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த உதவுகின்றது.
9. சிறுநீர் உபாதை, கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.
10. நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
11. உடல் அரிப்பை போக்கும். உடல் அரிப்பு உள்ளவர்கள் தர்ப்பைப் புல்லைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் விட்டுக் காய்ச்சி அதனை குடித்து வந்தால் உடல் அரிப்பு பாதிப்பு நீங்கும்.
12. பித்தத்தைப் போக்கும். மற்றும் பித்தத்தால் ஏற்படுகின்ற இளநரை தலை முடி உதிர்வு போன்றவற்றையும் குணப்படுத்தும். தர்ப்பைப் புல்லின் வேரினை நிழலில் காயவைத்து பின் அரைத்து பொடியாக்கி அதனை பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.
You May Also Like : |
---|
மங்குஸ்தான் பழம் நன்மைகள் |
செம்பருத்தி இலையின் பயன்கள் |