பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

இந்த பதிவில் “பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகள் காரணமாக தற்போது சுற்றுசூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பருவநிலை மாற்றம்
  3. பருவநிலை மாற்றத்திற்கான ஆதாரம்
  4. பருவநிலை மாற்றத்தினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கங்கள்
  5. முடிவுரை

முன்னுரை

பருவநிலை மாற்றம் என்பது பூமியில் ஏற்படும் வழக்கமான மாற்றமாகும். மனிதர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகள் காரணமாக தற்போது சுற்றுசூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து அதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு பருவநிலை மாற்றங்கள், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

இத்தகைய மாற்றங்களையும் அதனோடு ஒன்றிணைந்த சுற்றுசூழல் பற்றி நோக்குவதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம் குறுகிய காலப் பருவமாற்றமாகும். அதாவது வழக்கமான பருவநிலை மாறுதலைக் குறிக்கும். (உதாரணத்திற்கு குற்றாலம் சீசனைக் கூறலாம்). இம்மாற்றத்திற்கு பிரதான காரணி மனித நடவடிக்கைகள் ஆகும்.

பருவநிலை மாற்றத்திற்கான ஆதாரம்

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்னதாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் கூறுகிறது.

உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. நீரின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே பருவநிலை மாற்றத்திற்கான காரணமாகும்.

இருப்பினும் பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. சமீப கால ஆய்வுகளில் அண்டார்டிக்காவில் பனிப்பாறைகள் இழக்க தொடங்கியுள்ளன.

பருவநிலை மாற்றத்தினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கங்கள்

மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் சுற்றுச்சூழலிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் கூட பாதிக்கின்றன.

நன்னீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் அதிகரிப்பது போன்ற பல வடிவங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் சுற்றுச்சூழலில் காணப்படுகின்றன.

அதிதீவிரமான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் அவற்றை தற்போது நிலவும் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி கூறுவது சிக்கலான காரியமாகவே உள்ளது.

உலகம் மென்மேலும் சூடானால் நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து அதன் காரணமாக காற்றில் ஈரப்பதன் அதிகரிக்கும். இதன் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும் சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக் கூடும்.

கோடைகாலத்தின் போது வெப்பநிலை அதிகரித்து வறட்சிக்கு வித்திடும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அதேவேளை புயல்களின் காரணமாக ஏற்படும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் கடலில் கலந்து அதன் நீர்மட்டம் உயர வழிவகுக்கும்.

இதுபோன்ற அசாதாரணமான இயற்கையின் கோரத்தாண்டவங்களை எதிர்கொள்வதற்குரிய செயல்திட்டம் இல்லாத ஏழை நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கக்கூடும்.

புதிய வாழிடத்துக்கு ஏற்ப இசைவாக்கி கொள்வதற்கு முன்னரே அடுத்த இடத்துக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் இதன் காரணமாக அழியும் நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அளவு அதிகரிப்பதால் கடல்கள் உறிஞ்சும் கரியமில வாயுக்களின் அளவும் அதிகரிக்கும். இந்த மாற்றத்தின் காரணமாக கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

முடிவுரை

தற்போது இந்த பருவநிலைமாற்றமானது எமது சுற்றுச்சூழலில் பல்வேறுபட்ட தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளே இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.

இத்தகைய பருவநிலை மாற்றத்தினை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வதோடு எமது எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் கொடைகள் வழங்குவோமாக.

You May Also Like :
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு