வாகைத் திணை என்றால் என்ன

வாழ்க்கையின் வெற்றித் தன்மையினை உறுதி செய்யக்கூடிய முறைமையாக வாகை திணையானது காணப்படுகின்றது. அதாவது வெற்றி சூடி கெண்டாடுவதனை இது சுட்டி நிற்கின்றது. வாகைத் திணையானது புறத்திணையில் பாடப்படக் கூடிய தொன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாகைத் திணை என்றால் என்ன

வாகை திணை என்பது யாதெனில் வெற்றி பெற்ற அரசன் மற்றும் அவனது வீரர்களானவர்கள் தன் வெற்றியின் அடையாளமாக வாகைப் பூவினை சூடி கெண்டாடுவதனை வாகை திணை என்று குறிப்பிடலாம்.

இந்த வாகை திணையானது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகின்றது. போரில் வெற்றி பெற்ற அரசனுடைய வெற்றியை பாடுவதாகும்.

வாகைத் திணையின் முக்கியத்துவம்

அதாவது அரசன் ஒருவன் தான் போரில் வெற்றியடைந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய வெற்றியின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாகை திணையானது துணைபுரிகின்றது.

சமூகத்தில் அரசன் மற்றும் ஏனையோர் தாங்கள் செய்யும் தொழிலில் சிறப்பினை இவ்வாகை திணையின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அதாவது வாழ்வில் அடையவேண்டிய உண்மையான வெற்றி பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வெற்றி பெற்ற அரசனானவன் தன்னுடைய செயலை கருத்திற் கொண்டு பாசறையில் இருந்த தன்மையை பற்றி இலகுவாகவும் தெளிவாகவும் பேசினர். அதாவது பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையை சூடுதல் என்பது இவ்வாகை திணையின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது.

வாகைத் திணை இடம் பெறும் துறைகள்

வாகை திணையானது பொதுவாக 32 துறைகளை உள்ளடக்கி பாடக் கூடியதாக கருதப்படுகின்றது.

வாகை அரவம்: வெற்றிபெற்ற வீரர்கள் மலர் சூடியும் வீரக் கழலணிந்;துவம் ஆரவாரம் செய்வதாகும்.

அரச வாகை: வெற்றி பெற்ற செங்கோல் வேந்தனுடைய இயல்புகளை கூறுதல்.

முரச வாகை: வெற்றி முரசு பற்றிய சிறப்பினை கூறுதலாகும்.

முன்தேர்க் குரவை: வெற்றி வாகை சூடிய மன்னனது தேரின் முன்னால் பேய் குரவைக் கூத்தாடலை தேரக் குரவை எனலாம்.

பின் தேர்க் குரவை: வாகையரசனின் தேரின் பின்னர் விறலியரும் மறவரும் கூத்தாடுவது பற்றி குறிப்பிடப்படுவதாகும்.

பார்ப்பன வாகை: வேள்வி மண்டபத்தில் வேதம் உணர்த்த பார்ப்பனனை கொண்டாடும் வாகைத் திணையாகும்.

அறிவன் வாகை: முக்காலங்களையும் உணரவல்ல பேரறிவாலனின் இயல்பினை எடுத்துரைக்கும் வாகைத் திணையாகும்.

பொருந வாகை: பிறரோடு ஒப்பிட்டு பார்க்க நிகரான ஒருவர் தனக்கு இல்லாமையை அறிந்த அறிஞர் மன்னனுக்கு இகழாமையில் அவசியத்தை எடுத்தியம்பக் கூடிய வாகைத் திணையாகும்.

புறத்திணையில் வாகைத் திணையின் செல்வாக்கு

புறத்திணைகளானவை போர் பற்றி விளக்குவதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் போரில் வெற்றி வீரனைப் பற்றி பாடுவதாகவே இந்த வாகைத்திணை காணப்படுவதானது புறத்திணையில் வாகைத்திணை செல்வாக்கு செலுத்துவதனையே குறிப்பிடுகின்றது.

அதாவது புறத்திணைகளானது போரில் வெற்றி பெற்ற அரசன் பற்றி பாடக் கூடியதாகவே அமைவதோடும் போர்தொடுக்கும் சமயங்களில் போரின் சிறு சிறு நிகழ்வுகள் பற்றி கூறக் கூடியனவாகவும் புறத்திணை செல்வாக்கு செலுத்துகின்றது.

போருக்கு அடிப்படை காரணம் உலகப் பொருள்கள் மேல் உள்ள ஆசையும் பெண்ணாசையுமே ஆகும்.

அந்த வகையில் இந்த வாகைத்திணையானது அரசனின் வெற்றியை பற்றி பாடக் கூடியதாக காணப்படுவதோடு வெற்றி பெற்ற அரசன் வாகைப் பூவினை சூடிக் கொள்கின்றான் என்பதனையும் எடுத்துக் கூறக்கூடியதாக காணப்படுகின்றமை புறத்திணையில் வாகைத்திணையானது செல்வாக்கு செலுத்துகின்றது.

Read More: நிறைவுப் போட்டி என்றால் என்ன

பஞ்சலோகம் என்றால் என்ன