கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

பலருக்கும் தொல்லையாக இருக்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் அழகை கெடுக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பவை முகப்பருக்கள். முகப்பருக்களின் அடுத்த நிலையே கரும் புள்ளிகள்.

கரும்புள்ளிகள் முகத்தில் இருந்து இலகுவில் மறைவதில்லை. அவ்வாறு மறைவதாக இருந்தாலும் சிலவேளைகளில் முகத்தில் தழும்பினை ஏற்படுத்தி விடுகின்றன.

கரும்புள்ளிகள் வர காரணம்

முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதாலும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.

முகப்பருக்கள் வந்தால் சிலர் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடுவார்கள். இதனால் பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன.

தலையணை உறையை சுத்தம் செய்யாமல் பல வாரங்களுக்கு பயன்படுத்தி வந்தால் அதன் அழுக்குகள் மேலும் தேங்கி விடும். எனவே மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலையணை உறையை மாற்றுவது அவசியம். இல்லாவிடின் பருக்கள் அதிகம் வர காரணமாக அமையும்.

கரும்புள்ளிகளை நீக்குவதற்கு என பல கிரீம்கள் இருந்தாலும் அவற்றில் இரசாயன தன்மைகள் அதிகம் இருக்கும்.

இவை சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியவை. கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பக்கவிளைவு இல்லாத இயற்கை முறையே நிரந்தர தீர்வாக அமையும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

உப்பு

உப்பினை நீரில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.

பருக்களால் வந்த கரும்புள்ளிகள் தழும்புகளை மறைக்க உப்பு சிறந்த பொருள். பருக்கள் உடைந்து மற்ற இடங்களில் பட்டால் பருக்கள் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பிக்கும்.

உப்பு பருக்களில் உள்ள கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.

பூண்டு

நம் அன்றாட உணவுகளில் சேர்க்கும் பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க பெரிதும் உதவும்.

பூண்டினை அரைத்து பேஸ்ட் செய்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் குறைவதோடு கரும்புள்ளிகளும் நீங்கும்.

அதிலும் முட்டையின் வெள்ளைக் கருவையும் எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து தடவினால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.

இது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை சிறப்பாக போக்கும்.

வேப்பம் இலை

வேப்பிலை சிறப்பான மூலிகை இது சருமத்தை சுத்தம் செய்வதோடு சருமத்தை தாக்கும் கிருமிகளிடம் இருந்தும் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவதன் மூலம் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

கற்றாளை

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கற்றாளை சாற்றினை இரவில் முகத்தில் தடவி ஊற வைத்து காலையில் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும தொற்றுக்கள் நீங்கும்.

குறிப்பு

மேலே கூறப்பட்ட குறிப்புகளை தொடர்ச்சியாக சில வாரங்களுக்கு செய்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சிறந்த பலனை அடைய முடியும்.

கண் கருவளையம் மறைய டிப்ஸ்