தனுசு ராசி குணங்கள்

dhanusu rasi gunangal in tamil

எப்போதும் தர்ம சிந்தனை உடையவர்களாக விளங்கும் இந்த ராசிக்காரர்களுடைய குணங்கள் பற்றி இக்கடுரையில் காண்போம்.

எப்பொழுதும் ஒரு சுயகட்டுப்பாடு உடையவர்களாக இவர்கள் காணப்படுவர். சிறப்பான தெய்வீக சிந்தனையும் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்களாக இவர்கள் காணப்படுவர்.

நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என விருப்பம் உடையவர்களாவர். தங்களை விட வயதில் மூத்தவர்களோடு நட்பு பாராட்டும் இயல்பு உடையவர்கள்.

எப்பொழுதும் மதிப்பு மரியாதை என்பனவற்றை விரும்புவார்கள். உபதேசங்கள் செய்வதில் வல்லவர்களான இவர்கள் மன ஒருமைப்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.

சலனம் அற்ற திடமான எண்ண ஓட்டங்களை உடைய இவர்கள் ஒரு தனுசை போல தெளிவாக இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஒரு குறிக்கோளுடன் இவர்கள் காணப்படுவார்கள். செய்கின்ற காரியங்களை நேர்த்தியாக செய்ய விரும்பும் இவர்கள் பிறரிடத்திலும் இதனை எதிர்பார்ப்பார்கள்.

பொதுவாகவே தலைமை தாங்கும் பண்பு இவர்களிடம் இயற்கையாகவே காணப்படும். மிகச்சிறந்த நிர்வாக திறன் உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். வாதாடுவதில் வல்லவர்களான இவர்கள் யாராலும் இலகுவில் வெல்ல முடியாதவர்கள்.

வாத திறன் அதிகமாக இருப்பதனால் ஒரு பொய்யை கூட உண்மையாக மாற்றும் திறன் படைத்தவர்கள். உடலை பலமாக்கும் விளையாட்டுக்களை விளையாடுவதில் அதிகம் நாட்டம் உடையவர்கள்.

இவர்கள் வறுமையிலே வாழ்ந்தாலும் மதிப்பும் மரியாதையும் உடையவர்களாகவே இருப்பார்கள். மிக கடினமான உழைப்பை உடைய இவர்கள் தொழில் என்ற விடயத்தை ஆரம்பித்த பின்னர் தான் வாழ்வில் மாற்றங்கள் நிகழ துவங்கும்.

இந்த ராசியின் அதிபதி குரு பகவான் ஆகையால் பாக்கியசாலிகளாக விளங்குவார்கள். எப்பொதும் சமூக ஒழுக்க சிந்தனைகள் அதிகம் வாய்க்க பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சமூகத்தை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்களாக இருப்பார்கள் அனைவரிடத்திலும் அன்பும் பாசமும் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள்.

வன்முறை என்பது இவர்களுக்கு பிடிக்காது எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவர்கள் எத்தனை துன்பங்களையும் தாங்கி வாழ்வில் முன்னேறும் இயல்புடையவர்கள். இதனால் அனைவரிடத்திலும் நன் மதிப்பு உடையவர்களாக விளங்குவார்கள்.

இவர்களது நேர்மையான குணத்தால் பலர் இவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் என்றாவது ஒரு நாள் வாழ்வில் முன்னேறி விடலாம் என்ற ஆழமான நம்பிக்கை இவர்களிடத்தில் எப்போதும் காணப்படும்.

இரக்க குணமும் சற்று பயந்த சுபாவமும் உடையவர்களாக இருப்பார்கள் பிறருக்கு சரியான ஆலோசனைகளை தர கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது நன்மதிப்பு கொண்ட ஒரு கூட்டமே இவர்களது ஆலோசனைகளை கேட்க இருக்கும்.

பொதுநலனை இவர்கள் சிந்திப்பதனால் தனிப்பட்ட வாழ்வில் பல பாதிப்புக்களை இவர்கள் சந்திப்பார்கள். வெளியூர்கள் செல்ல அதிகம் நாட்டம் உடையவர்களான இவர்கள் சுபநிகழ்வுகளில் பங்கெடுப்பதனையும் அதிகம் விரும்புவார்கள்.

You May Also Like :
மேஷ ராசி குணங்கள்
மிதுனம் ராசி குணங்கள்