மேஷ ராசி குணங்கள்

mesha rasi gunangal in tamil

மேஷ இராசியில் பிறந்தவர்களுடைய தனித்துவமான குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்த இராசியின் அதிபதி செவ்வாய் ஆகையால் அதிகம் கோபம் உடையவர்களாக இருப்பார்கள்.

அடுத்தவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்ட அதிகம் விரும்புவார்கள். பெரும்பாலான இந்த இராசி காரர்களுக்கு கால்கள் மற்றும் மூட்டுக்கள் சார்ந்த பிரச்சனைகள் காணப்படும்.

ஒருவரை பார்க்கும் போதே அவர்களுடைய உண்மை முகம் என்ன என்பதனை கண்டுபிடித்துவிடுவார்கள்.

இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். உடனுக்குடன் உணர்ச்சிக்கு கட்டுப்படுவார்கள். மிகவிரைவாக தமது உணர்ச்சிகளில் இருந்து வெளிவர கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் அதிகம் செலவு செய்வதனை விரும்புவதனால் எவ்வாறான வழிகளில் பணத்தை செலவு செய்யலாம் என்பதனை விரைவாக திட்டமிடுவார்கள்.

மேலும் இவர்களுக்கு பணத்தை சேமிக்கும் எண்ணம் பெரிதளவு இருக்காது. இருப்பினும் அந்த செலவுகள் பயனற்ற ஊதாரி செலவுகளாக இருக்காது அவசிய தேவைகளுக்காக செய்யப்படும் செலவுகளாகவே இருக்கும்.

புண்ணிய காரியங்கள் செய்ய மனம் விரும்பும் பொதுவாகவே எந்த செயலாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய திறமை கண்டு எதிரிகள் கூட பயம் கொள்வார்கள்.

பொதுவாக இவர்களுக்கு நீர் நிலைகளை பார்த்து அச்சம் இருக்கும். ஆனால் உயரங்களை பார்த்து பயம் கொள்ள மாட்டார்கள்.

எல்லாவிடயங்களிலும் முதன்மை பெற்றவர்களாக விளங்கும் எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். தமக்கு முன்னே நடக்கும் அநீதியை கண்டு கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் எந்த செயலாக இருந்தாலும் அதில் துடிப்பும் ஆர்வமும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதன் பின்விளைவுகளை பற்றி
வருந்தமாட்டார்கள் யாருக்காகவும் தமது முடிவை மாற்றி கொள்ளும் எண்ணம் இவர்களுக்கு இருக்காது.

இவர்களுடைய பேச்சில் கம்பீரம் இருப்பதனால் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவருகின்ற இயல்பு இவர்களுக்குண்டு. மிக வேகமாக செயற்பட கூடிய இவர்கள் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக தமது செய்ல்களை ஆற்ற கூடியவர்களாவர்.

ஒரு விடயத்தை சொல்வதை காட்டிலும் அதனை செய்து காட்டுவதையே விரும்புவார்கள். தலைமை தாங்கும் இயல்பு அதிகம் இருப்பதனால் தொழில்சார் வாழ்வில் வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட வாழ்வில் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

மேலும் வாழ்வில் மனதில் ஒரு போராட்டத்துடன் தமது வாழ்வை கடப்பார்கள். தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அதிகம் நடக்க தடைகள் காணப்படும்.

இவர்களால் பிறருக்கு கிடைக்கும் நன்மைகளை போல இவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை. இவர்களுடன் தனுசு, துலாம், சிம்மம் போன்று ராசிகள் நட்பாக இருக்கும்.

குடும்பத்துக்காக கடுமையாக உழைத்தாலும் அவர்களால் நற்பெயரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும். அதிகம் நோய்களால் பீடிக்கப்படுவதனால் மருத்துவ செலவுகள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அதிகம் விரக்தி அடைந்தவர்களாக காணப்படுவார்கள்.

You May Also Like :
ரிஷப ராசி குணங்கள்
மகர ராசி குணங்கள்