விருச்சிகம் ராசி குணங்கள்

viruchigam rasi gunangal

இது ஒரு நீர் ராசியாகும் இதன் அதிபதியாக செவ்வாய் விளங்குகின்றது. இந்த ராசியின் உடைய குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்த ராசியின் உருவம் தேள் ஆகும்.

மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும் எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த தடங்கல் வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பொதுவாகவே இரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

உடல் அளவில் மெல்லியவர்களாக காணப்படும் இவர்கள் உறுதியான உடல் கம்பீரமான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். எப்போதும் சத்தான சுவையான உணவுகளை உண்ணவே விரும்புவார்கள். உணவு மற்றும் உடை விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

ரகசியங்களை பாதுகாக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு அமைதியான தோற்றம் காணப்பட்டாலும் கோபம் வந்து விட்டால் வார்த்தைகளை விட்டு விடுவார்கள்.

இவர்களுக்கு எத்தனை கஸ்ரங்கள் வந்தாலும் அதனை தேற்றி கொண்டு விடாமுயற்சியுடன் முன்னேற கூடியவர்கள்.

பசியினை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் வெள்ளை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அன்பு, பண்பு, பாசம் மிகுந்தவர்களாக காணப்படுவார்கள் அதிகளவாக பேச மாட்டார்கள் ஆனால் சுருக்கமாக நேர்த்தியாக பேசுவார்கள்.

உண்மையாக இருப்பார்கள். மிகச்சிறந்த அறிவாளிகளாக விளங்குவார்கள். ஆடம்பரங்களை அதிகம் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். உணவு பிரியர்களாகவும் இருப்பார்கள்.

மனிதயேமும் நியாய உணர்வும் வாய்க்க பெற்றவர்கள். இனிய சுபாவமும் அழகான தோற்றமும் இருப்பதனால் அனைவருக்கும் இவர்களை பிடித்து விடும். உணர்ச்சிகளை பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள்.

மேலும் பிறர் கூறுகின்ற அறிவுரைகளை இவர்கள் விரும்ப மாட்டார்கள் தங்களது சொந்தமான முடிவுகளையே இவர்கள் செயற்படுத்துவார்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் இறுதி வரை முயற்சி செய்து அதில் வெற்றி பெறும் இயல்பு உடையவர்களாக இருப்பார்கள்.

பயணங்களை விரும்பும் இவர்கள் அதற்காகவே பணம் சேர்ப்பார்கள். சமூக சேவைகளில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. மற்றவர்களுக்கு தானம், தர்மம் செய்வதிலும் இவர்களுக்கு அதிக ஈடுபாடு உள்ளது.

இவர்களது ஆரம்பகால வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் பிற்காலத்தில் சிறப்பான வாழ்வை பெறுவார்கள். பொருளாதார ரீதியாக தாராளமான பணவரவு உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். இதனால் எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிப்பார்கள்.

மிகவும் தைரியமான இவர்கள் எந்த விடயத்தையும் நேருக்கு நேராக பேசக்கூடியவர்கள். கல்வியை பொறுத்தவரையில் அதில் ஆர்வம் உடையவர்களாக அதில் சிறந்தும் விளங்குவார்கள்.

இவர்கள் சிந்தனை திறன் மிக்கவர்கள் எந்நேரமும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள். கற்பனை திறன் உடையவர்களாக இருப்பார்கள் அனைத்து விடயங்களிலும் சுறுசுறுப்பாகவும் சிக்கனமாகவும் இருப்பார்கள்.

எப்போதும் சுதந்திரமாக வாழ்வதனையே இவர்கள் விரும்புவார்கள். இவ்வாறு பலவகையான தனித்துவங்களை கொண்டமைந்து காணப்படுவார்கள்.

You May Also Like :
மிதுனம் ராசி குணங்கள்
கடகம் ராசி குணங்கள்