உடம்பு வேறு பெயர்கள்

உடம்பு வேறு சொல்

உடம்பு வேறு பெயர்கள்

எல்லா உயிர்களுக்கும் உடம்பு என்பது அவசியமாக காணப்படுகின்றது. உயிர் நிலையானது ஆனால் உடல் அழிவடையக்கூடியது. உயிர் இன்றி உடல் இயங்காது. உடல் என்பது மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம் ஆகும்.

இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் அமையும். உடல் என்பது அழிவடையக்கூடிய சடப்பொருள் என சமவாதிகளால் கூறப்படுவதோடு உயிரானது ஒரு உடலை விட்டு நீங்கி இன்னொரு உடலை சென்றடையும் எனவும் கூறப்படுகின்றது.

இதனையே பாடலாசிரியர்கள் “காயமே இது பொய்யா வெறும் காற்றடைத்த பையடா” எனப்பாடுகின்றனர். இவ்வாறு அழிவுடைய உடலை வைத்தே பெரும் பாடுபடுகின்றனர் பூமி வாசிகள்.

உடல் அழிவுறும் என அறிந்து அதனை அழகுபடுத்துவதற்கு என பல வேலைப்பாடுகளை செய்கின்றனர். ஆனால் எது எவ்வாறாக இருப்பினும் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

இவ்வாறான உடல் என்பதற்கு தமிழில் வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன.

உடம்பு வேறு பெயர்கள்

  1. உடல்
  2. சரீரம்
  3. தேகம்
  4. மெய்
  5. மேனி
  6. அங்கம்
  7. யாக்கை
  8. கட்டை
  9. காயம்
  10. முண்டம் (தலை இல்லாத உடல்)
  11. சடலம் (இறந்த உடல்)

இவ்வாறான பெயர்கள் உடலுக்கு வழங்கப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.

Read more: கோகுலாஷ்டமி என்றால் என்ன

பொங்கு சனி என்றால் என்ன