கடகம் ராசி குணங்கள்

kadaga rasi gunangal in tamil

இது ஒரு நீர் ராசி என்பதனால் இதனது அதிபதி சந்திரன் ஆவார். புனர்பூசம், பூசம், ஆயிலியம் ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியினுள் அடங்கும்.

இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவர்களாக காட்சி தருவார்கள். கலை நயம் உள்ள பொருட்கள் மீதும் கலைத்துறை சார்பாகவும் அதிக ஆர்வம் காணப்படும்.

மற்ற ராசியினரை விட அதிகம் கடவுள் பக்தி உடையவர்களாக இருப்பார்கள். ஓரிடம் விட்டு ஓரிடம் நகர்ந்து கொண்டே இருப்பார்கள் பயணம் என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இவர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க முடியாது.

அதிக பிடிவாத குணம் உடையவர்களாக இவர்கள் இருப்பர் தமக்கு வேண்டியதை பெற இவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் பிடிவாதம் ஆகும்.

மேலும் பொதுவாக அமைதியான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவர்கள். அதிகமாக வாயாடிகளாக இருப்பார்கள். மிகவும் நேர்த்தியான உடையணியும் பழக்கத்தினால் பிறரை கவர்ந்து விடுவார்கள். நேர்த்தியான நடையும் மிடுக்கான தோற்றமும் இவர்களுக்கு மேலும் அழகை சேர்க்கும்.

இவர்கள் அடுத்தவற்றின் மீது அதிகாரம் செய்ய அதிகம் விரும்புவார்கள் அடுத்தவர்களது புகழ் வார்த்தைக்கு மயங்கி விடுவார்கள் இவர்களை புகழ்ந்து பேசினால் யாரும் எந்த காரியத்தையும் சாதித்து விட முடியும்.

தங்களுடைய குடும்பத்தின் மீது அதீத பாசம் உடையவர்களாக இருப்பார்கள். பிரிவினை தாங்கி கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்கின்ற அனைத்து காரியங்களையும் மனப்பூர்வமாக செய்வார்கள் மிகவும் தெளிவான மனம் உடையவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம் மற்றும் மீன ராசி காரர்கள் இவர்களுக்கு பொருந்த கூடியவர்களாக காணப்படுவார்கள்.

நீர் சார்ந்த பொருட்கள், உணவுகளில் அதிக விருப்பம் காட்டுவார்கள். வெண்மை நிறமானது இவர்களுக்கு அதிகம் பிடித்தமானதாக அமையும். மேலோரிடத்தில் மரியாதை உடையவர்களாகவும் சாந்தமாகவும் இவர்கள் காணப்படுவார்கள்.

இக்கட்டான சூழ்நிலைகளில் சகிப்பு தன்மையோடு இவர்கள் காணப்படுவார்கள். நல்ல சிந்தனைகளும் எண்ணங்களும் உடையவர்களாக இருப்பதனால் பல நல்ல காரியங்களை வாழ்வில் ஆற்றுவார்கள்.

நல்ல ஞாபக சக்தி இவர்களுக்கு இருக்கும். வாழ்வில் உயர்ந்த இலட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயற்பட்டு எதையும் திறமையாக செய்து வெற்றி பெறுவார்கள்.

எல்லோரிடமும் சகஜமாக பழக கூடிய இவர்கள் எதையும் தீர ஆலோசித்து செய்வார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சி வசப்படும் குணமும் உடையவர்களாக இருப்பார்கள்.

கற்பனை திறன் அதிகம் உடையவர்களான இவர்களிடம் இலகுவில் பழகினால் பிரிய முடியாது. யாரையும் நம்பி உதவி செய்கின்ற குணம் உடையவர்கள் இதனால் ஏமாந்து போகவும் சந்தர்ப்பங்கள் உண்டு.

கள்ளங்கபடம் இல்லாமல் வெகுளியாக வெளிப்படையாக பேசுவார்கள். எப்பொழுதும் புகழ் செல்வம் ஆகியவற்றை தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள்.

நல்ல ராஜதந்திரம் உடையவர்களான இவர்கள் யாரிடத்தில் எப்படி பேசவேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.

பொறுமையும் உண்மையும் உடைய இவர்கள் வாழ்வில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள். எவ்வகையிலாவது பணம் சம்பாதிக்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள்.

பணத்தை சேமிப்பதில் ஆர்வம் இருப்பதனால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களை காண்பார்கள்.

You May Also Like :
ரிஷப ராசி குணங்கள்
மேஷ ராசி குணங்கள்