ஜீவசமாதி என்றால் என்ன

jeeva samadhi endral enna

ஜீவசமாதி என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது.

பொதுவாக இவ்வுலகில் பிறக்கக்கூடிய எந்த உயிராக இருந்தாலும் அதன் கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கும் வரை இவ்வுலகில் இருக்கும். கர்மவினைகளை முழுமையாக கழித்த பின்னர் இறை நிலையை அடைய முடியும்.

யோகிகளும், ஞானிகளும் இது புரிந்ததால் தான் உயிர் வெளிப்படாமல் அதே நிலையில் நிலைநிறுத்தி உயிரானது கர்ம வினைகளை முழுமையாக அனுபவித்து இறை நிலையை அடைவதற்காக ஜீவசமாதி செல்கின்றனர்.

ஜீவசமாதி உள்ள இடங்களில் இறைவன் அருள் பூரணமாக இருக்கும். இறைவனோடு இறைவனாக கலந்துவிட்ட, இத்தகைய மேன்மக்களை இவர்களது சீடர்கள் உதவியோடு ஜீவசமாதிக்கான ஒரு குறிப்பிட்ட முறையான சடங்குளைப் பின்பற்றி அவர்களின் உடலை சமாதி செய்யவேண்டும். இவ்வகையான முறைக்கு “சமாதிக்கிரியை” என்று பெயர்.

சாதாரண மனிதர்களாலும் ஜீவசமாதி அடைய முடியும். ஆனால் அவற்றிற்கு முறையான பயிற்சி வேண்டும்.

வாசி யோகம், கிரியா யோகம் போன்ற யோக முறைகள், உணவுப் பழக்கங்களில் மாறுதல், வெளியுலகத்தில் இருந்து முற்றிலும் தம்மை விடுவித்துக் கொள்ளுதல் போன்றவற்றினை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமே சாதாரண மனிதர்களால் ஜீவசமாதி அடைய முடியும்.

ஜீவசமாதி என்றால் என்ன

ஜீவன் இருக்கும் பொழுதே சமாதியில் அடங்குவது ஜீவசமாதி ஆகும். அதாவது ஜீவசமாதி என்பது ஜீவன்+ சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள் ஆகும்.

சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ரிஷிகளும் இம்முறையை கையாண்டனர். அதாவது மகான்களுக்கு ஞானம் கிடைத்த பின் அவர்கள் இவ்வுலகில் வாழ விரும்புவதில்லை. நமக்கு ஆயுள் போதும் என்று நினைக்கும் போது அவர்கள் விரும்பிய இடத்தை தேடிச் சென்று அந்த இடத்தில் சமாதி எழுப்புவார்கள். இதுவே ஜீவசமாதி ஆகும்.

சித்தர்களின் ஜீவசமாதியை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

உலகில் கடவுள்களை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால் நமது கோரிக்கைகள் கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்களே சித்தர்கள் ஆவர். சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள்.

சிவனை நினைத்து அகக்கண்ணால் கண்டு தியானித்து ஆத்ம சக்தியை எழுப்பி தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்களே சித்தர்கள் என்பார்கள். சித்தர்கள் தங்கள் தவ வலிமையால் பிரபஞ்சத்திலேயே தங்கள் ஜீவசமாதியில் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஜீவசமாதிகள் கோவிலுக்கு இணையாக புனிதத் தன்மை உடையவையாக கருதப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த கோவில்களில் யாதேனும் ஒரு ஞானியின் ஜீவசமாதி அமையப் பெற்றிருப்பது இன்றளவும் காணமுடியும். அவர்களால் கோவில்கள் புத்துணர்வு பெறுகின்றன.

சித்தர்கள் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடங்களுக்குச் சென்றால் அங்கு அனைத்தையும் மறந்து ஏகாந்த உணர்வு நமக்கு உண்டாகும். மனமும் அமைதியில் திளைக்கும். சிலிர்ப்பூட்டும் அதிர்வுகளை நம்மால் உணர முடியும்.

நோயுற்றவர்கள் அங்கு சென்றால் நோய் உடனடியாக மறையும், நம்முடைய வேண்டுதல்களும் நிறைவேறும். நம் வாழ்வில் மாற்றம் உண்டாகும். சித்தர்களின் அனுகிரகம் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும்.

சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால் தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும். ஜீவசமாதியில் பரவி நிற்கும் அருள் ஒளிக்கீற்று நம் மீது பட்டாலே வாழ்வில் புத்துணர்ச்சி பெற முடியும்.

Read more: ஆவணி மாத சிறப்புகள்

பொங்கு சனி என்றால் என்ன