கேலிச்சித்திரம் என்றால் என்ன

keli chithiram enral enna

பொதுவாக கேலிச் சித்திரங்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்க கூடியவை. கூடுதலாக அதன் விமர்சனத் தொனி தனித்துவமானதாக இருக்கும்.

கேலிச்சித்திரங்களைப் பற்றி மக்கள் நினைக்கும் நேரங்களில், கார்ட்டூன் வரைபடங்கள் எடுத்துக்காட்டுகளாக நினைவுக்கு வருகின்றன.

கேலிச்சித்திரம் என்பது ஒரு பாத்திரம், அதன் முக்கிய பண்புகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். இந்த அதீத மிகைப்படுத்தல் அந்த பாத்திரத்தை வாசகருக்கு கேலிக்குரியதாக தோற்றுகின்றது.

கேலிச்சித்திரப் படங்களில் கலைஞர்கள் நகைச்சுவையாக இருக்கும் அளவிற்கு அவரது பெரிய காதுகள் போன்ற பண்புகளை மிகைப்படுத்தி காட்டப்படும் தன்மையைக் காண முடியும்.

கேலிச்சித்திரங்கள் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமடைந்தன. அவை ஐரோப்பிய பிரபுத்துவத்தால் அரசியல்வாதிகளை கேலி செய்யும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்டன.

சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன.

கேலிச் சித்திரங்கள் சில மனிதர்களை அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகளைக் கேலிசெய்யும் விதமாக வரையப்படுவதனைக் காணமுடிகின்றது.

கேலிச் சித்திரத்தில் வரையப்படும் உருவங்கள் அனைவரும் அறியும் வகையில் இருக்கும்.

பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும், கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன.

கேலிச்சித்திரம் என்றால் என்ன

கேலிச் சித்திரங்கள் (Cartoons) அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும்.

அதாவது நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் கேலிச்சித்திரம் ஆகும்.

உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை உணர்வு தோன்றும்படி வரைவதே கேலிச்சித்திரம் ஆகும்.

அரசியல் கேலிச்சித்திரங்கள்

அரசியல் கேலி சித்திரங்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு இருக்கிறது. அரசியலில் பெரும்பாலும் ஜனாதிபதிகள் மற்றும் பிற முக்கிய அரசியல்வாதிகளது உருவங்கள் கேலிச்சித்திரம் செய்யப்படுகிறன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் பல கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

பாரதியார் தனது இந்தியா எனும் இதழில் அரசியல் கேலி சித்திரங்கள் வரைந்திருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப் படங்களை வரைந்தவர் என்ற பெருமை பாரதியாரையே சாரும்.

கேலிச் சித்திரங்கள் மூலம் ஆங்கிலேய ஆட்சியின் குறைகளை இந்தியா என்ற இதழில் வெளியிட்டார். அவை தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கின்றன.

சமகால அரசியல் மற்றவடிவங்களை விட கேலி சித்திரங்களில் தான் உண்மையான விமர்சனத்திற்கு உட்படுகிறது.

நஜிஅல் அலியின் கேலி சித்திரங்கள் பாலஸ்தீன மக்கள் அடைந்த துயரங்களையும் ஒடுக்குமுறையையும், இஸ்ரேலிய ராணுவ ஆக்ரமிப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்கான படுகொலைகள் என்று தீவிரமான அரசியல் பிரச்சனைகளோடு உருவானவை.

கேலிச்சித்திரம் வரைவதே தனது அரசியல் செயல்பாடு எனும் நஜிஅல்அலி முப்பதாயிரத்திற்கும் அதிகமான கேலி சித்திரங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்த அச்சுறுத்தல்கள், கடுமையான தணிக்கை, சிறை தண்டனை என்று அதிகாரம் அவரை முடக்கிய போதும் அவரது செயல்பாடுகள் முடங்கவில்லை.

இவர் முப்பது ஆண்டுகாலம் புகழ்பெற்ற கேலி சித்திரக்காரராக செயல்பட்டிருக்கிறார். நஜிஅல் அலி அவர்கள் 1987 ம் ஆண்டு லண்டனில் ஒரு சாலையை கடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

ஆனால் இன்றும் அவரது கேலி சித்திரங்கள் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் அவரது குரல் இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

Read more: சுற்றுச்சூழல் என்றால் என்ன

பற்களில் மஞ்சள் கறை நீங்க