சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

sinus foods to avoid in tamil

கண், காது, மூக்கு என்பதனைப் போலவே சைனஸ் என்பதும் உடலின் ஒரு பகுதியாகும். சைனஸ் என்பது நமது முகத்தில் எலும்புகளுக்கு இடையே சிறு சிறு இடைவெளிகள் உண்டு அந்த இடைவெளிகளே சைனஸ் ஆகும்.

இது பல வேலைகளைச் செய்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றை சூடாக்கி வடிகட்டி நமது உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றால் போல் அதனை சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் முக்கிய வேலையச் செய்கின்றது. இவ்வாறு பண்ணா விடின் வழியில் உள்ள காற்று அப்படியே உள்ளே போகும்போது நுரையீரல் பாதிக்கப்படும்.

நமது தலையில் மண்டையோடு பெருமூளை, சிறுமூளை, தண்டுவட்டத்தின் ஆரம்பம், கண், வாய், நாக்கு என நிறைய உறுப்புகள் உள்ளன.

இவை அனைத்தும் சேர்ந்து தலையின் பாரம் அதிகமாகும். இது நமது கழுத்தை பாதிக்கும். இதனால் இயற்கையாகவே நமது தலையில் பாரத்தை குறைப்பதற்காக நமது மண்டையோட்டிக்குள் உள்ள காற்று பைகளே சைனஸ் ஆகும்.

நாம் பேசும்போது நமது வாய்ஸ் (Voice) Resonance கொடுப்பது இதனால் தான் சைனஸ் பிரச்சனையின் போது பேசும்போது குரல் வித்தியாசமாக இருப்பதற்கு காரணமாகும்.

மொத்தம் நான்கு வகையான சைனஸ்கள் முகத்தில் உண்டு.

Frontal sinus – கண் புருவத்திற்கு மேல் இருக்கும்.

Maxillary sinus – கன்னப் பகுதியில் இருக்கும்.

Ethmoid sinus – மூக்கின் பிரிட்ஜ் பகுதியில் இருக்கும்.

Sphenoid sinus – கண்ணின் பின் பகுதியில் இருக்கும்.

சைனஸ் பிரச்சினை வருவதற்கான காரணங்கள்

தொற்றுக்கள்: பாக்டீரியா, பங்கஸ், வைரஸ் என பல தொற்றுக்கள் உள்ளன.

அலர்ஜி: தற்போது இருக்கும் அதிகளவான அலர்ஜிகளாகவும், நமக்கு அதிகம் உளைச்சலை உண்டாக்குவை கண் மற்றும், மூக்கு சம்பந்தமான அலர்ஜிகளே ஆகும். இது பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கக் கூடிய விடயமாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம்.

தலை குளித்து விட்டு சரியாகத் துவட்டாமல் விடுதல், வைரஸ் உள்ள நீச்சல் தடாகத்தில் குளித்தல் போன்ற காரணங்களாலும் சைனஸ் ஏற்படும்.

உடலின் தட்ப வெப்பநிலை மாறும் போதும் சைனஸ் பிரச்சினை ஏற்படும்.

சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் சம்பந்தப்பட்ட உணவுகள்

தயிர், சீஸ், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சாக்லேட், குளிரான உணவுகள்

குளிர்பானங்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்ட குளிரான உணவுகள் இவை வீக்கத்தை உண்டாக்குவதுடன் அலர்ஜியையும் உண்டாக்கும்.

வாழைப்பழம்

சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழம் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.

வறுத்த மற்றும் மாவுச் சத்துள்ள உணவுகள்

அரிசி இறைச்சி போன்ற உணவுகளை சைனஸ் பிரச்சினை உள்ளபோது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்ட் கொண்ட உணவுகள்

இது சைனஸில் உற்பத்தியாகும் அதிகப்படியான சளியைத் தூண்டும்.

துரித உணவுகள்

துரித உணவுகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் நோய் உள்ள போது இவற்றை எடுத்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி இல்லாமல் போய்விடும்.

சைனஸ் அறிகுறிகள்

  • கண்ணில் தண்ணீர் ஒழுகுதல்
  • தலைப்பாரம்
  • காதுவலி
  • உடற்சோர்வு
  • சிலருக்கு காய்ச்சல்
  • அடிக்கடி தும்மல் ஏற்படுதல்
  • கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களில் தொட்டால் வலி ஏற்படல்
  • மூக்கடைப்பு ஏற்படல்

Read More: பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் உணவுகள்