வயிற்று புண் குணமடைய உணவு

vayiru pun in tamil

அதிகமானவர்களுக்கு ஏற்படக்கூடிய சிறு பிரச்சினையாக தோன்றி பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் நோயாக வயிற்று புண் காணப்படுகின்றது. வயிற்றுப்புண் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன.

காலை உணவை அதிகமாக தவிர்ப்பது, கார உணவுகளை அதிகமாக உண்பது, நீண்ட நாட்கள் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், இரவு நேரம் அதிகமாக கண்விழித்து தூங்காமல் இருப்பவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு அதிகம் வயிற்று புண் உண்டாகும்.

வயிற்று புண் அறிகுறிகள்

  • அதிக நெஞ்சு எரிச்சல்
  • அதிக உப்புசம்
  • வயிற்று மேற்பகுதியில் வலி உண்டாகுதல்
  • சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் குமட்டல், வாந்தி வருதல்
  • வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவது
  • காரணம் இல்லாமல் எடை குறைவது
  • பசியின்மை
  • புளித்த ஏப்பம்

வயிற்று புண் குணமடைய உணவு

தேன்

காலையில் எழுந்திருக்கும் போது ஆசிட் அதிகமாக இருக்கும். ஏனெனில் இரவு முழுவதும் நாம் அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பதினால் கெக்ஸிஸ் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் டீ, காபி குடித்தால் ஐசலின் அதிகமாகும். எனவே அந்த நேரங்களில். இரண்டு டீஸ்பூன் தேன் குடிக்கலாம். அல்லது, பாலுடன் தேன் சேர்த்து பருகலாம்.

வெண்பூசணி யூஸ்

காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் குடித்தால் வயிறு குளிர்மை அடைவதுடன், வயிற்றுப் புண்ணும் குணமடையும்.

பார்லி

பார்லியை சிறிது வறுத்து பொடியாக்கி அதனை கஞ்சி காய்ச்சி பால், தேன் கலந்து குடிக்கலாம்.

அதிமதுரம்

சிறிதளவு அதிமதுரம், நெல்லி வற்றல் ஒரு ஸ்பூன் இரண்டையும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பெருகி வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்தினை முழுமையாகவோ அல்லது யூஸ் ஆகவோ வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுத்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

ஆப்பிள்

வயிற்றுப் புண்ணுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் ஆப்பிள் பழத்தை பச்சையாக உண்பதை விட வேகவைத்து உண்பது நல்லது.

தயிர்

பொதுவாகத் தயிர் சாப்பிட்டால் வயிறு குளிர்மையடையும். அது மட்டுமல்லாது, இது வயிற்றுப் புண்ணையும் குணமாக்கும். மதிய உணவின் போது உணவுடன் தயிர் சேர்த்து உண்ணலாம் அல்லது, மதிய உணவிற்கு தயிர் சாதம் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

தேங்காய் எண்ணெய்

இயல்பாகவே தேங்காய் எண்ணெய்க்கு வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி உண்டு. தேங்காய் எண்ணெயை காலை எழுந்தவுடன் ஒரு டீஸ்பூன் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை உணவில் எடுத்தால் வயிற்று புண் குணமாகும். மணல் தக்காளிக் கீரையை காலை எழுந்தவுடன் மையாக அரைத்து நீர் மோருடன் குடித்தால் வயிற்று புண் குறையும் அல்லது கடையிலாகக் கடைந்து உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

தேங்காய் பால்

தேங்காய் பாலிற்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி அதிகம் உண்டு. இதனால் காலை நேரத்தில் காரமான உணவை உண்பதைத் தவிர்த்து விட்டு தேங்காய் பால் கலந்த உணவுகளை உண்பதன் மூலம் வயிற்று புண் குணமாகும்.

Read More: பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்