பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

potassium rich foods in tamil

பொட்டாசியம் என்பது ஓர் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது இதயத்தை துடிக்க வைப்பது முதல் பலவிதமான செயல்பாடுகளுக்கு உடலுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. நரம்புகளையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக வைக்கின்றது. நமது உடலில் சுரக்கக்கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகின்றது. உடலில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்திருக்க உதவுகின்றது.

பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறிகள்

மலச்சிக்கல்

குறைந்த பொட்டாசியம் அளவு உடலில் உள்ள தசைகளை பாதிப்படைய செய்யும். இது உணவு கழிவுகளை வெளியேற்றுவதை தாமதமாக்கும். இந்த விளைவினால் உடலில் வீக்கம் மற்றும், மலச்சிக்கல் ஏற்படும்.

தசைப் பலவீனம்

பொட்டாசியம் குறைபாடு உடலிணுள்ள மற்றைய தசைகளையும் பாதிக்கும். இதில் கை மற்றும், கால்கள் உட்பட பொதுவான தசைப்பலவினம் மற்றும், தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தும்.

ஒருவர் வியர்வையின் மூலம் சிறிய அளவிலான பொட்டாசியத்தை இழக்கின்றார். அதனால் தான் தீவிரமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படும் போதோ அல்லது, வெப்ப காலங்களின் உண்டாகும் அதிக வியர்வை காரணமாகவோ தசைப்பலவினம் அல்லது, தசைப் பிடிப்பு உண்டாகும்.

சோர்வு

பொட்டாசியம் உடலின் செல்கள் மற்றும் திசுக்கள் அனைத்திலும் உள்ளது. பொட்டாசியம் அளவு குறையும்போது அதிக அளவு உடல் செயற்பாடுகளை பாதிக்கும். ஆகையால் உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படும்.

உயர் குருதி அழுத்தம்

ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறையும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்த நாளங்களை தளர்த்துவதில் பொட்டாசியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. எனவே பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. குறிப்பாக அதிக சோடியம் அல்லது, உப்பு உட்கொள்பவர்களின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைகின்றது. இதனால் அவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

இளநீர்

இளநீரில் பொட்டாசியம் உட்பட கால்சியம் சோடியம் போன்ற சத்துக்களும் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இளநீரை குடித்தால் இழந்த நீர்ச்சத்து உடனடியாக கிடைக்கும். இளநீர் குடிப்பதால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்கள் நீக்கப்படும். ரத்தசோகையும் குறையும்.

வெள்ளரிக்காய்

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை உருவாக்குவதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் அதிகம் உண்டு. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை வலிமை பெறும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலும் சுத்தமாகும்.

தக்காளி

தக்காளியை தினமும் உணவில் சேர்த்து உண்டு வந்தால் பலவித சத்துக்கள் கிடைக்கும். தேகத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும். காரணம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்களும், விட்டமின் சத்துக்களும் ஏராளம் உள்ளன.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதனை ஃபிறை, சிப்ஸ் செய்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அப்போதுதான் நமக்கு பொட்டாசியம் சத்து முழுமையாக கிடைக்கும்.

பீட்ரூட்

170g பீட்ரூட்டில் 518Mg அளவு பொட்டாசியம் உள்ளது. அடர் சிவப்பு நிறத்திலுள்ள பீட்ரூட் இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கின்றது. இதற்கு காரணம் பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியமே ஆகும்.

Read More: நுரையீரல் பலப்படுத்தும் உணவுகள்

சிறுநீரகம் பலம் பெற உணவு