ஆடித்தபசு என்றால் என்ன

aadi thabasu in tamil

ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் மிக அற்புத நாளக ஆடித்தபசு காணப்படுகின்றது. ஆடித்தபசு விழவானது மிகப்பெரிய வரலாற்றினை கொண்டதாக காணப்படுகின்றது.

ஆடித்தபசு என்றால் என்ன

ஆடித்தபசு என்பது அம்பிகை, சிவபெருமானை நோக்கி பல இடங்களில் தவமிருந்து பல வரங்களை பெற்றுள்ளால் அவ்வாறு அம்பிகை பெற்ற வரங்களுள் சிறப்பான வரம், அம்பிகையின் தவ வலிமை போன்றவற்றை போற்றி புகழும் ஒரு பண்டிகையே ஆடித்தபசு பண்டிகையாகும். சங்கரன் கோவிலிலே ஆடித்தபசுவானது விழவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடித்தபசு விழா கொண்டாடப்படுவதற்கான காரணம்

சங்கரன் கோவிலில் பிரசித்தி பெற்றதொரு விழாவாக ஆடித்தபசு விழா காணப்படுகிறது.

அதாவது ஹரியும், அரனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமாதியம்மன் அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.

அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார் சங்கர நாராயணராக காட்சியளித்தார். இந்த வைபவமே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அதாவது ஒரு பாகத்தில் தலையில் சடாமுடி, கங்கை பிறையுடன் நெற்றியில் நீரூற்றுப்பட்டை, கழுத்தில் பாம்பு, ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல், கையில் அங்குசமும் அணிந்த கோலமாகவும் மற்றொரு பாகத்தில் தலையில் கிரீடமும், நெற்றியில் திருமன், கழுத்தில் துளசிமாலை, இடுப்பில் பட்டு பீதாம்பரம், கையில் சங்கும் ஏந்திய நிலையில் சிவனும் நாராயணனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்த திருநாள் தான் ஆடிமாத பௌர்ணமி தினமாகும். இவ்வாறாகவே இந்நாளானது ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

ஆடித்தபசி வழிபாட்டு முறைமை

சிவபெருமான் துன்பங்களை அழிக்கும் கடவுளாக காணப்படுவதோடு திருமால் சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காக்கக் கூடிய கடவுளாக காணப்படுகின்றனர்.

அன்னை அம்பிகையே எந்த குறைகள் இருந்தாலும் அவற்றை நீக்கி சுகமான வாழ்வு தரக்கூடியவளாக திகழ்கிறாள். அந்த வகையில் இம்மூவருக்கும் உரிய நாளகவே ஆடித்தபசுவானது காணப்படுகிறது.

ஆடித்தபசுவானது பௌர்ணமி, திருவோணம், ஆடிச் செவ்வாய் இணையும் நாளிலேயே வருகிறது. இந்நாளில் இயலுமானவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வரமுடியும்.

அவ்வாறு இயலாதவர்கள் அருகில் உள்ள சங்கர நாராயணர் கோவில், சிவ, விஸ்ணு கோவில்களுக்கு சென்று வரலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோவிலிற்கு சென்று விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.

ஆடித்தபசுவானது பௌர்ணமியுடன் இணைந்து வருவதால் இவ்வழிபாட்டினை மாலை 7 மணிக்கு பின்னர் செய்வது விசேஷமாகும். இந்நாளில் சத்யநாராயண பூஜையினை மேற்கொள்வது வறுமையை போக்கி அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளித்தரும்.

ஆடித்தபசு நாளில் அம்பிகையை வழிபட்டால் கணவன் – மனைவியிடையே காணப்படும் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்வதற்கு துணைபுரியும். மேற்குறிப்பிட்ட வகையிலேயே ஆடித்தபசு விழாவின் வழிபாட்டு முறைகள் காணப்படும்.

ஆடித்தபசு சிறப்பு

திருமணம் மற்றும் மகப்பேறு வேண்டும் பெண்கள் இத்திருநாளில் வேண்டிநாள் திருமணமானது கைகூடும் என கூறமுடியும்.

ஆடி மாதத்திலேயே சிறப்பிற்குரிய திருநாளாக ஆடித்தபசு நாள் காணப்படுகிறது. இந்நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேட பூஜைகள் இடம்பெறும்.

ஆடித்தபசு நாளில் வழிபாடுகளை மேற்கொள்வதனூடாக வறுமை நீங்க பெற்று அனைத்து விதமான செல்வங்களும் எம்மை வந்து சேரும் சிறப்பிற்குரிய நாளாக ஆடித்தபசு நாள் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட வகையிலேயே ஏனைய திருவிழாக்களை விட முக்கியமானதொரு திருவிழாவாக இந்த ஆடித்தபசுவானது காணப்படுவதோடு இந்நாளானது பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டமைந்ததாகவும் காணப்படுகின்றது.

Read More: உத்தராயணம் என்றால் என்ன

ஆடிப்பெருக்கு என்றால் என்ன