சூரியன் வேறு பெயர்கள்

sooriyan veru peyargal in tamil

இருள் நீக்கி மனிதர்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் சக்தியே சூரியன். இது ஞாயிற்று தொகுதியின் மையத்தில் காணப்படுகின்றது. கோள மண்டலத்தில் காணப்படும் சூடான கோளே சூரியன் ஆகும். இங்கு சூரியன் என்பது வடமொழிப்பெயர் ஆகும்.

சூரியனை இந்து மக்கள் கடவுளாகவும் வழிபடுகின்றனர். இவ்வாறு சிறப்புடைய சூரியன் தமிழில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

சூரியன் வேறு பெயர்கள்

  1. பரிதி
  2. பாற்கரன்
  3. ஞாயிறு
  4. வெய்யோன்
  5. ஆதித்தன்
  6. ஆதவன்
  7. ஆயிரங்கதிரோன்
  8. ஆயிரஞ்சோதி
  9. இரவி
  10. இருள்வலி
  11. உதயன்
  12. கதிரவன்
  13. சுடரோன்
  14. செங்கதிரோன்
  15. சோதி
  16. தினகரன்
  17. பகலோன்
  18. பங்கயன்
  19. பரிதி
  20. விண்மணி
  21. வெய்யோன்
  22. மித்திரன்
  23. பானு
  24. அனலி

கதிரவன் என்ற பெயர் வர காரணம்

ஒளிக்கற்றைகளை கொண்டமைந்து காணப்படுவதனால் கதிரவன் என்ற பெயர் சூரியனுக்கு வழங்கப்படுகின்றது.

ஞாயிறு என்ற பெயர் வர காரணம்

ஞாயிறு என்பது நாயிறு என்ற சொல்லின் மருவிய சொல் ஆகும். இதற்கு கோள்களின் தலைவன் என்பது பொருள். கோள்களின் தலைவன் என்பதால் சூரியனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.

சூரியனின் சிறப்பம்சங்கள்

  • ஞாயிற்று தொகுதியில் காணப்படும் மையக் கோளே சூரியன்.
  • சூரியனின் ஈர்ப்பு சக்தியினாலேயே ஏனைய கோள்கள் நீள் வட்டப்பாதையில் சுழல்கின்றன.
  • இந்துக் கடவுள்களில் ஒன்றாகவும் சூரியன் காணப்படுகின்றது.
  • பால் வெளியில் காணப்படும் ஒளி கூடிய கோளே சூரியன் ஆகும்.
  • உலோகச் செறிவு மிக்க விண்மீன் வகையைச் சார்ந்தது.
  • புவியின் வானிலை காலநிலை ஆகியவற்றை இயக்குகின்றது.
  • தாவரங்கள் உயிர்வாழ ஒளித்தொகுப்பை மேற்கொள்ள முக்கியமான காரணியாக திகழ்கின்றது.
  • மனிதர்களின் பல தேவைகளிற்கு அடிப்படையாக சூரியன் திகழ்கின்றது.

சூரியனின் நிறம் என்ன

சூரியனிலிருந்து பல நிறங்கள் வெளிப்பட்டாலும் அது இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் புலப்பட்டாலும் அது உண்மையில் வெள்ளை நிறம் கொண்டது.

சூரியனைப் பற்றிய முக்கியமான தகவல்கள்

  • சூரியனின் வயது 4.603 பில்லியன் வருடம்.
  • சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும்.
  • பூமியிலிருந்து சூரியன் சுமார் 148.06 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • சூரியனின் விட்டம் சுமார் 14,00,000 கிலோமீட்டர். அதாவது, பூமியின் விட்டம் போல் 109 மடங்கு அதிக விட்டம் உடையது.
  • சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை போல் 28 மடங்கு அதிகம்.
  • சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86 % நிறையை கொண்டது.
  • சூரியன் ஒரு பெரிய நட்சத்திரம் குடும்பத்தை சேர்ந்தது.
  • பூமிக்கு மிகவும் அருகிலுள்ள நட்சத்திரம் (விண்மீன்) சூரியன்.
  • பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365 ¼ நாட்கள் ஆகும்.
  • சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் ஆகும்.

இவ்வாறு எண்ணற்ற சிறப்புடைய கோளே சூரியன் ஆகும்.

Read more: பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ்

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்