தாமரை வேறு பெயர்கள்

thamarai veru peyargal

ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடியில் மலரும் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற மலரே தாமரை ஆகும்.

புனிதமானதும், தெய்வீக தன்மையும் கொண்ட மலராகும். வண்ண வண்ண மலர்கள் காணப்படினும் தாமரை மலரே முதலில் தோன்றிய மலர் என்றால் மிகையாகாது.

மேலும் நீரில் பல்லாண்டு வாழக்கூடிய ஒரு தாவரம் ஆகும். சூரியன் உதிக்கும் போது மலர்ந்து மறையும் போது மூடிக்கொள்ளும் இம்மலரானது பண்டைய காலங்களில் ஆயகலையிலும் கட்டடக் கலையிலும் பயன்படுத்தப்பட்டது.

இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) ஆகும். பல சிறப்புடைய இம்மலர் தமிழில் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

தாமரை வேறு பெயர்கள்

  1. கமலம்
  2. பங்கஜம்
  3. அம்புஜம்
  4. சாரோருசம்
  5. வனசம்
  6. கஞ்சம்
  7. வாரிஜம்
  8. ஈரஜம்
  9. பத்மம்
  10. அரவிந்தம்
  11. போகனந்தம்
  12. முண்டகம்
  13. புண்டரிகம்
  14. ஜலஜா
  15. பதுமம்
  16. இண்டை
  17. சதபத்ரி
  18. நளினம்
  19. சரோஜம்
  20. முளரி

இவ்வாறான பெயர்கள் தாமரைக்கு வழங்கப்படுகின்றன.

தாமரை மலரின் சிறப்பு

  • நீரில் பல்லாண்டு காலம் வாழக்கூடிய தாவரம் ஆகும்.
  • இந்துக்களால் தெய்வீகமாக போற்றப்படும் மலராகும். ஆதாரமாக லக்ஷ்மி தேவி சிவப்பு தாமரையிலும் சரஸ்வதி வெள்ளை தாமரையிலும் வீற்றிருக்கின்றனர். காவல்தெய்வமான ஐயனார் போன்றோர் இரண்டு கையிலும் தாமரை மலரை வைத்து உள்ளனர்.
  • இந்தியாவின் தேசிய மலர் தாமரையாகும்.
  • மன்மதன் எய்திய அம்புகளில் தாமரை மலரும் ஒன்று ஆகும்.
  • திருமாலுக்கு மிகவும் பிடித்த மலர் தாமரை மலராகும்.
  • தூய்மைக்கு அடையாளம் தாமரை மலராகும். காரணம் சேற்றில்  பூத்தாலும் புனிதமாக இருப்பதனால் இது தூய்மைக்கு அடையாளமாக போற்றப்படுகின்றது.

தாமரை என்ற சொல்லின் உருவாக்கம்

தேவநேயப் பாவாணர், தும் – துமர் – தமர் – தமரை – தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார்.

தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம் ஆகும். ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப் பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்.

தாமரைப் பூ பற்றிய சில தகவல்கள்

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

வெண்தாமரை ஆயுர்வேதத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

தாமரை மலரின் பயன்கள்

சதுப்பு நிலத் தாவரமாகிய தாமரை ஒரு மூலிகை தாவரம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் பயன்படக்கூடியவை மற்றும் உண்ணக்கூடியவை.

தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.

தாமரை மலரை நிழலில் உலர வைத்து கஷாயம் செய்து உடல் ஆரோக்கியத்திற்காக குடிக்கின்றனர்.

தாமரை விதையின் பருப்பை சாப்பிட்டால் இதயம் பலப்படும், சிறுநீரகங்கள் வலுப்படும்.

வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் போன்றன குணமாகின்றன. மேலும் மூளைக்கு பலம் தருவதற்கும் பயன்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும்.கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறான பயன்களை கொண்டதே தாமரை மலராகும். எனவே பல சிறப்புக்களை கொண்ட இம்மலரை நாமும் போற்றுவோம்.

Read more: செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை

கரிநாள் என்றால் என்ன