பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ்

foot crack solution in tamil

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சனையான பித்த வெடிப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் என்று டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

பாத வெடிப்பு நம் காலின் மொத்த அழகையும் கெடுத்து விடும். சிறியவர்களுக்கு இந்த பாத வெடிப்பு வயதானவர்களின் காலினைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

காலினை அழுக்காக வைத்திருத்தல் மற்றும் அழுக்கான இடங்களில் நடந்து விட்டு சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருத்தல் போன்ற காரணிகள் தான் காலில் பித்த வெடிப்பினை உருவாகின்றது.

அதிகமாக தண்ணீரிலே காலினை வைத்திருப்பவர்களுக்கு பாத பித்த வெடிப்பு விரைவாக வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் கால்களை அதிகமாக தண்ணீரில் வைத்திருப்பதால் பாத வெடிப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

கால் பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ்

டிப்ஸ்-1

தேவையான பொருட்கள்

  • விளக்கெண்ணெய்
  • தேங்காய் எண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • கற்றாளை

தேவையான அளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கற்றாளை சாற்றினை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

இதன் பின்னர் காலில் நன்றாக தடவி மசாஜ் செய்து தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் காலில் நன்றாக ஊற வைத்த பின்னர் தண்ணீரால் காலினை கழுவிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு தினமும் ஒன்று அல்லது இரண்டு தடவை செய்து வந்தால் பித்த வெடிப்பில் இருந்து விரைவாக குணமடையலாம்.

டிப்ஸ்-2

தேவையான பொருட்கள்

  • விளக்கெண்ணெய்
  • வேப்பம் எண்ணெய்
  • மஞ்சள்

இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இரவு உறங்க செல்வதற்கு முன் பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி விட்டு காலையில் எழுந்து கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரு மாத காலப்பகுதியில் பித்த வெடிப்பு குணமடைந்து விடும்.

டிப்ஸ்-3

தேவையான பொருட்கள்

  • விறகு மஞ்சள்
  • மருதாணி

விறகு மஞ்சளினையும் மருதாணியையும் நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து இரவு உறங்க செல்ல முன் காலில் நன்றாக தடவி விட்டு உறங்க செல்ல வேண்டும்.

பின்னர் காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய வேண்டும். பித்த வெடிப்பில் இருந்து விரைவான தீர்வு கிடைக்கும்.

டிப்ஸ்-5

தேவையா பொருட்கள்

  • மஞ்சள்
  • தேங்காய் எண்ணெய்
  • எலுமிச்சை சாறு

உங்கள் பாதங்களை 20 நிமிடங்கள் வெது வெதுப்பான இளம் சுடுநீரில் நன்றாக ஊற வைத்து பின் நன்றாக தேய்த்து கழுவிய பின்னர்.

தேவையான அளவு மஞ்சள், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்க செல்ல முன் காலில் நன்றாக தேய்த்து விட்டு காலையில் எழுந்து கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் பித்த வெடிப்பில் இருந்து சிறந்த தீர்வை பெறலாம்.

டிப்ஸ்-6

தேவையான பொருள்

  • கற்றாளை

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் கற்றாளை சாற்றினை வெடிப்புகள் இருக்கும் இடத்தில் பாதத்தில் நன்றாக தேய்த்து பூசி விட்டு செல்லவேண்டும்.

பின்னர் காலையில் எழுந்து தண்ணீரில் கழுவினால் போதும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் குணமாகலாம்.

மேலும் படியுங்கள்..

உதடு கருமை நீங்க