சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இம் மன்னன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த விழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அத்துடன் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் தஞ்சை மாவட்டமே விழா கோலம் பூண்டிருக்கும்.
Table of Contents
சதய விழா என்றால் என்ன
ராஐ ராஐ சேதழன் எந்தாண்டு பிறந்தார் என்ற தகவல் இல்லை. ஆனால் ஐப்பசி மாதத்தின் சதய நாளில் பிறந்தார் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது. அதன் காரணமாகத்தான் அவரது காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சதய தினத்தன்று கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றது.
சதய விழாவாக இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுமட்டுமன்றி மாமன்னர் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நாளும் இந்த நாளேயாகும்.
கி.பி 985ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு முடி சூட்டப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி சதய நாளில் தஞ்சையில், ராஜராஜனின் திருவுருவத்துக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, தஞ்சைப் பெருவுடையார் பெரியநாயகி மூர்த்தங்களுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, இசை, இலக்கிய, நாட்டிய நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் இடம் பெறும்.
ராஜராஜசோழ மன்னன்
உலக வரலாற்றிலேயே மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு திக்கெட்டும் வெற்றியைக் குவித்த மாமன்னன் ராஜராஜன் என்று வரலாறு போற்றுகிறது.
அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜன், சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் 3 ஆவது மகனாகப் பிறந்தார் என்று வரலாறு கூறுகின்றது.
அதே சதய நட்சத்திரத்தில் 985-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கோயிலில் வெட்டிய பல கல்வெட்டுகளை பாடல் வடிவில் வெட்டிய முதல் மன்னன் என்ற பெருமைக்கு உரியவராவார். 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர்.
குந்தவை, மாதேவடிகள் உள்ளிட்ட மூன்று மகள்களும் ராஜேந்திர சோழன் என்ற மகனும் இருந்தனர்.
தனது சகோதரியின் குந்தவை மீதான அன்பின் வெளிப்பாடாக மகளுக்கு குந்தவை எனவும் தனது பாட்டி செம்பியன் மாதேவியின் நினைவாக மற்றொரு மகளுக்கு மாதேவடிகள் என்றும் பெயர் சூட்டினார் ராஐராஐ சோழன்.
மற்ற தேசங்கள் எல்லாம் கண்டறியப்படாத அல்லது வளர்ச்சியுறாத காலத்தில் நிர்வாகம், ஜனநாயகம், மராமத்துப் பணிகள், கட்டடக்கலை, இலக்கியம், சமய நல்லிணக்கம் என அனைத்துத் துறைகளிலும் முன் மாதிரியாக நின்ற மாமன்னன் ராஐ ராஐ சோழனாவார்.
நீல வானின் விதானத்தைத் துளைத்துக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரிய கோவில் சோழர் சாம்ராச்சியத்தின் வரலாற்றுச் சுவடு ஆகும். இக்கோவிலானது உலகப் புகழ்பெற்ற கோவிலாகும்.
தோல்வியே காணாத மன்னன் படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து, தெற்கு ஆசிய நாடுகள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசாட்சி செய்தவன். நமது வீரத்தின் அடையாளமாகக் கொண்டாப்பட வேண்டியவனாவான்.
Read more: எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன