எட்டுத்தொகை நூல்கள் யாவை

ettu thogai noolgal in tamil

சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுவது எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இவ்விலக்கிய நூல்கள் பழந்தமிழரின் நற்பண்புகளையும், சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றது.

எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் கூறுவர். எட்டுத்தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்தாகவும், புறம் பற்றிய நூல்கள் இரண்டாகவும் காணப்படுகின்றன.

அவ்வகையில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியன எட்டுத்தொகை நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

எட்டுத்தொகை நூல்கள் யாவை

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப்பத்து
  5. பரிபாடல்
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு

எட்டுத்தொகை அக நூல்கள்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. ஐங்குறுநூறு
  5. கலித்தொகை

எட்டுத்தொகை புற நூல்கள்

  1. புறநானூறு
  2. பதிற்றுப்பத்து

அகமும் புறமும் உடைய நூல்கள்

  1. பரிபாடல்

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்

நூல்தொகுத்தவர்தொகுபித்தவர்கடவுள் வாழ்த்து பாடியவர்தெய்வம்
நற்றிணைதெரியவில்லைபன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்திருமால்
குறுந்தொகைபூரிக்கோதெரியவில்லைபாரதம் பாடிய பெருந்தேவனார்முருகன்
ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்
பதிற்றுபத்துதெரியவில்லைதெரியவில்லை
பரிபாடல்தெரியவில்லைதெரியவில்லை
கலித்தொகைநல்லந்துவனார்தெரியவில்லைநல்லந்துவனார்சிவன்
அகநானூறுஉருத்திர சன்மனார்பாண்டியன் உக்கிரப்பெருவழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்
புறநானூறுதெரியவில்லைதெரியவில்லைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்

எட்டுத்தொகை நூல்களின் வேறு பெயர்கள்

எட்டுத்தொகை நூல்கள்வேறு பெயர்கள்
எட்டுத் தொகைஎண்பெருந்தொகை
நற்றிணைநற்றிணை நானூறு
தூதின் வழிகாட்டி
குறுந்தொகைநல்ல குறுந்தொகை
குறுந்தொகை நானூறு
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்துஇரும்புக் கடலை
பரிபாடல்பரிபாட்டு
ஓங்கு பரிபாடல்
இசைப்பாட்டு
பொருட்கலவை நூல்
தமிழின் முதல் இசைபாடல் நூல்
கலித்தொகைகலி
குறுங்கலி
கற்றறிந்தோர் ஏத்தும் கலி
கல்விவலார் கண்ட கலி
அகப்பாடல் இலக்கியம்
அகநானூறுஅகம்
அகப்பாட்டு
நெடுந்தொகை
நெடுந்தொகை நானூறு
நெடும்பாட்டு
பெருந்தொகை நானூறு
புறநானூறுபுறம்
புறப்பாட்டு
புறம்பு நானூறு
தமிழர் வரலாற்று பெட்டகம்
தமிழர் களஞ்சியம்
திருக்குறளின் முன்னோடி

எட்டுத்தொகை நூல்கள் விளக்கம்

குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகையிலுள்ள நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகின்றது.

இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இல்லற மாண்பு, விருந்தோம்பல், அளவிட முடியாத அன்பு போன்ற தமிழர்களின் வாழ்வியல் வழக்காறுகளை எடுத்தியம்புகின்றது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவது நூலாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை ஆகும். நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் திணை எனும் பெயரும் சேர்ந்து நற்றினை எனும் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகின்றது.

இந்நூலைத் தொகுத்தவர் பற்றி இதுவரை அறியப்படவில்லை. எனினும் தொகுப்பித்தவர் பன்னாடு தங்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.

அகநானூறு

அகத்திணை சார்ந்த இந்நூலானது நானூறு பாடல்களை கொண்டமைந்ததால் இது அகநானூறு என அழைக்கப்படுகின்றது. பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு.

பதிற்றுப்பத்து

எட்டுத் தொகையில் காணப்படும் நூல்களுள் பதிற்றுப்பத்து நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்து, பத்துச் சேர அரசர்கள் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது. பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.

பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன.

கலித்தொகை

சங்ககால தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். இந்நூல் கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்களைக் கொண்டுள்ளது. பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றமை இந்நூலுக்கே உரிய சிறப்பம் ஆகும்.

புறநானூறு

இது நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன.

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை கூறுகின்றன.

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. ஆசிரியப்பாவாலானது. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.

You May Also Like :
தமிழ் மொழியின் பண்புகள் யாவை
மூவகை மொழிகள் யாவை