எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை

ettuthogai noolgal kurithu katturai

எட்டுத்தொகை நூல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற எட்டு நூல்கள் உள்ளடங்குகின்றன.

எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நற்றினை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானூறு
  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு
  • பரிபாடல்

முன்னுரை

எட்டுத்தொகை நூல்களை எண் பெருந்தொகை எனவும் அழைக்கின்றனர். எட்டுத்தொகை நூல்களில் அறம் பற்றிய நூல்களாக நற்றிணை ,குறுந்தொகை, ஐங்குறுநூறு, கறித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் விளங்குகின்றன.

எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றிக் கூறும் நூல்கள் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகியவை ஆகும். மேலும் அறமும் புறமும் பற்றிக் கூறும் நூல்களாக பரிபாடல் காணப்படுகின்றது.

நற்றிணை

நற்றிணை நூலானது அகம்பற்றி கூறும் நூலாகும். இது 400 பாடல்களை கொண்ட அமைந்துள்ளது. இந்நூலினை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. ஆனால் இதனை தொகுப்பித்தவர் அரசன் பாண்டியன் மாற வழுதி ஆவார்.

குறுந்தொகை

குறுந்தொகை ஓர் அகநூலாகும். இது 400 பாடல்களைக் கொண்டுள்ளது. இதனை தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகுப்பித்தவர் பெயர் அறியப்படவில்லை.

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு ஓர் அக நூலாகும். இதில் 500 பாடல்கள் உள்ளன. குறிப்பாக திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 500 பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. இதனைப் பாடிய புலவர் ஐவர். ஐங்குறுநூற்றை தொகுத்தவர் கடலூர் கிழார் ஆவார்.

இதனைத் தொகுப்பித்த அரசன் பந்திரஞ்சேரல் இரும்பொறையாவர். இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மூன்று அடிக்கு மேல் ஆறு அடிக்கு உட்பட்டனவாக அமையப்பெற்றுள்ளன.

இவ்வாறு குறைந்த அடிகளினுடைய பாக்களில் இயற்றப்பட்டமையால் இந்நூல் ஐங்குறுநூறு என பெயர் பெற்றது.

கலித்தொகை

இந்நூலானது 150 கலிப்பாக்களை கொண்டமைந்துள்ளது. ஐந்து புலவர்களால் ஐந்து திணைகள் பாடப்பட்டுள்ளன.

அதாவது பாலை பெருங்கடுங்கோ (35 பாடல்கள்), குறிஞ்சி – கபிலர் (29 பாடல்கள்), மருதம் – மருதனிளநாகனார் (35 பாடல்கள்), முல்லை – சோழன் நலுருத்திரன் (17 பாடல்கள), நெய்தல் – நல்லத்துவனார் (33 பாடல்கள்). இந்நூலானது நல்லத்துவனாரால் தொகுக்கப்பட்டது.

அகநானூறு

இது ஒரு அக நூலாகும். 400 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இதில் 146 புலவர்கள் பாடி உள்ளனர். இதனை தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார் ஆவார். தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிக் கிழார் மகன் உருத்திரசமன் ஆவர்.

பதிற்றுப்பத்து

இந் நூலானது பத்து பத்து அகவல் பாக்களினால் அமைந்த 10 பகுதிகளைக் கொண்ட நூல் என்பதினால் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. இதனைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பற்றி அறியப்படவில்லை.

புறநானூறு

புறப்பொருள் பற்றி கூறும் நூலாகும் இந்நூலானது புறப்பாட்டு, புறம், புறம்பு நாÇறு எனும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 160 புலவர்களால் பாடப்பட்டது. 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ மன்னர்களையும், 18 சேர மன்னர்களையும் பாடுகின்றது.

பரிபாடல்

இந்நூலானது பரிபாடல் எனும் இசைப் பாக்களினால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் என பெயர் பெற்றது. பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பா வகைகளில் ஒன்றாக உள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் அகமமும், புறமும் பற்றி கூறும் நூல்களாக அமைந்துள்ளது. தமிழில் முதல் இசை பாடல் பரிபாடல் எனும் சிறப்புக்குரியதாகும். 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 25 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளன.

Read More: ஆற்றுப்படை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் யாவை