ஊடகங்களின் பயன்பாடு கட்டுரை

oodagangalin payanpadu katturai

இந்த பதிவில் “ஊடகங்களின் பயன்பாடு கட்டுரை” பதிவை காணலாம்.

ஊடகங்கள் எப்போதும் மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் ஆக்கபூர்வமானவையாக இருக்க வேண்டும்.

ஊடகங்களின் பயன்பாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஊடகம் எனப்படுவது
  3. ஊடகங்கள்
  4. சாதகமான விடயங்கள்
  5. விரைவான தகவல் பரிமாற்றம்
  6. ஊடகங்களின் புதிய பரிணாமம்
  7. முடிவுரை

முன்னுரை

மனித நாகரீக வளர்ச்சியில் தகவல்களை விரைவாக பகிர்ந்து கொள்வதற்கெனவே ஊடகங்கள் உருவாகின. இரு வேறுபட்ட தரப்பினருக்கிடையே ஒரு தொடர்பாடலை தகவல் பரிமாற்றங்களை ஊடகங்களே செய்கின்றன.

ஊடகங்களினுடைய வளர்ச்சியானது மனித பரிநாமத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றுவிட்டது என்றே கூறலாம். தனிமைப்பட்டு கிடந்த மனித சமுதாயம் இன்று ஊடகங்களின் வளர்ச்சியால் பூகோளமயமாதல் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

இவற்றை சாத்தியமாக்கிய பெருமை ஊடகங்களையே சாரும். இக்கட்டுரையில் ஊடகங்களுடைய பயன்கள் பற்றி காண்போம்.

ஊடகம் எனப்படுவது

ஒரு மின்கலத்தில் இருக்கின்ற மின்சாரம் ஒரு மின்குமிழுக்கு கடத்தப்பட ஒரு கம்பி ஊடகமாக பயன்படுகின்றது.

அது போலவே முன்னொரு காலத்தில் நாட்டின் தலைவரிடம் உள்ள கருத்துக்கள் நாட்டு மக்களிடம் போய் சேர ஒரு ஊடகங்களாக தபால்கள், பத்திரிகைள் என்பன தோன்றின. இவ்வாறு தான் ஊடகம் என்ற விடயம் ஆரம்பித்தது.

நாளாக நாளாக மனிதர்களது நாகரீகம் வளர்ச்சி அடைய துவங்கியது விஞ்ஞானமும் அறிவியலும் வளர துவங்கியது இதன் வாயிலாக பல ஊடகங்கள் இந்த சமூகத்தில் உருவாக துவங்கின.

ஊடகங்கள்

அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் வரிசையில் தபால் மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து பத்திரிகைகள் உருவாகின. இவை தான் நாட்டு நடப்புக்கள், செய்திகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தன இன்றளவும் பத்திரிகைகள் பிரபல்யமானவை.

அவ்வாறே குரல் வழியாக மக்களிடம் சென்றடையும் வானொலி என்ற ஊடகத்தை மார்க்கோணி என்பவர் கண்டறிந்தார். இதனை தொடர்ந்து ஊடகங்கள் பெருவளர்ச்சி கண்டன.

இன்றளவும் தொலைக்காட்சி வானொலி பத்திரிகை இணையம் போன்ற வெகுசன ஊடகங்கள் எமது சமூகத்தில் காணப்படுகின்றன.

சாதகமான விடயங்கள்

ஊடகங்களானவை அன்றாடம் மக்களுக்கு பல தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்றது.

அரசியல் செய்திகள், உலகநடப்புக்கள், பொருளாதார தகவல்கள், விளையாட்டு செய்திகள், அறிவியல் நிகழ்வுகள், பாடல்கள், பல்சுவை நிகழ்வுகள் என பலவகையான விடயங்களை அறிய கூடியதாக உள்ளது.

உலக நாடுகளில் காணப்படுகின்ற வெவ்வேறான கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஊடகங்கள் மூலமாக நாம் அதிகளவாக அறிவினை வளர்த்து கொள்ளவும் முடிகிறது.

விரைவான தகவல் பரிமாற்றம்

உலகத்தின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை ஒரு நொடிகளில் அறிந்து கொள்ள கூடிய தகவல் தொழில்நுட்பம் இன்று வளர்ந்து விட்டது. இதனால் அதிவேகமாக தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதனால் மனித சமூகம் விரைவாக இயங்க முடிகிறது.

மாணவர்கள் இந்த ஊடகங்கள் வாயிலாக பல புதிய விடயங்களை விரைவாக அறிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடிகின்றது.

நீண்ட தூரங்களில் இருக்கின்ற நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களோடு விரைவாக தொர்பு கொள்ளவும் இந்த ஊடகங்கள் வழிவகுக்கின்றன.

உலகம் நாளுக்கு நாள் எவ்வாறு மாறி செல்கிறது என்பதனை நாம் விரைவாக அறிந்த கொள்ள இந்த ஊடகங்கள் மிகவும் அவசியமானவையாக காணப்படுகின்றன.

ஊடகங்களின் புதிய பரிணாமம்

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வெகுசன ஊடகங்களையே விஞ்சும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் இன்று அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

கணிசமான மக்கள் இன்று சமூக வலைத்தளங்களை பாவிக்கின்றனர். இது ஊடகத்துறையின் புதிய பரிநாமம் என பார்க்கப்படுகிறது.

இன்று சமூக வலைத்தளங்களில் தான் கல்வி, விளம்பரங்கள், செய்திகள், உலக நடப்புக்கள் என எல்லா விடயங்களும் இன்று ஒரு கையடக்க தொலைபேசி மூலமாகவே பார்க்க கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கின்றது. இது அதிகளவான நன்மைகளை வழங்குகிறது. வழமை போலவே சில தீமைகளையும் தருகிறது.

முடிவுரை

எமது மனித சமூகத்தினுடைய வளர்ச்சியில் ஊடகங்களினுடைய பங்கு அதிகமாகும். ஊடகங்களை பயன்படுத்தாது ஒரு நாளை கூட எம்மால் இன்று கடந்து செல்ல முடியாது.

அந்த அளவிற்கு ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் முக்கியமான வரவேற்பை பெற்று காணப்படுகின்றது.

இருப்பினும் சில உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு சுயலாபம் தேடுகின்ற ஊடகங்களும் எமது சமூகத்தில் காணப்படுவது வேதனைக்குரியதாகும்

ஊடகங்கள் எப்போதும் மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் ஆக்கபூர்வமானவையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

You May Also Like :

காலம் பொன் போன்றது கட்டுரை

சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை