நிலவேம்பு கசாயம் பயன்கள்

Nilavembu Kashayam Uses In Tamil

சித்தர்களால் நமக்கு காண்பிக்கப்பட்ட சிறந்த மூலிகை “நிலவேம்பு கசாயம் பயன்கள்” பற்றி இதில் பார்க்கலாம்.

ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் இருந்தாலும் நிலவேம்பு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை உண்டு.

  • நிலவேம்பு கசாயம்
  • Nilavembu Kashayam Uses In Tamil
கபசுர குடிநீர் காய்ச்சுவது எப்படி

நிலவேம்பு பொடி தயாரிப்பு

நிலவேம்பு கசாயம் என்பதில் வெறும் நிலவேம்பு மட்டும் சேர்ந்தது அல்ல. இதில் நிலவேம்புடன் சேர்த்து சில மூலிகைகளும் உள்ளடக்கியிருக்கும்.

  • நில வேம்பு
  • வெட்டி வேர்
  • விலாமிச்சை
  • சந்தனம்
  • கோரைக்கிழங்கு
  • பேய்ப்புடலை
  • பற்படாகம்
  • சுக்கு
  • மிளகு

இந்த 9 மூலிகைகளையும் சமபங்கு எடுத்து பொடியாக்கி நிலவேம்பு கசாயத்துக்கு தேவையான பொடி தயாரிக்கப்படுகிறது.

நிலவேம்பு கசாயம் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை நிலவேம்பு குடிநீருக்கு உண்டு. இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுவது குறையும்.

உடல் சூடு

உடல் சூட்டை குறைப்பதற்கு நிலவேம்பு கசாயம் மிகச்சிறந்த மருந்தாகும்.

சளி, இருமல்

அடிக்கடி சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் அடிக்கடி நிலவேம்பு கசாயம் குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.

வயிற்றுப்புண்

வயிறுப்புண் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாகும்.

சித்த பிரமை

புத்தி மயக்கம் அதாவது சித்த பிரமை உள்ளவர்கள் நிலவேம்பினை குடித்து வந்தால் சித்த பிரமை நீங்கும்.

காய்ச்சல்

விட்டு விட்டு வரக்கூடிய ஜுரம், கடுமையான காய்ச்சல் மற்றும் விஷ ஜுரங்கள் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய தன்மை நிலவேம்பு கசாயத்திற்கு உண்டு.

குடல் புழுக்கள்

வயிற்று குடலில் உள்ள புழுக்களை மலத்தினூடாக வெளியேற்றும். அதுமட்டுமின்றி மலம் வெளியே போகாமல் சிரமப்படுபவர்களிற்கு மலமிலக்கியாகவும் செயல்படும் தன்மை இந்த நிலவேம்பு மூலிகைக்கு உண்டு.

உடல் சோர்வு

உடல் சோர்வு, உடல் மந்தநிலை, உடல் வலி போன்றவற்றிக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாகும்.

நிலவேம்பு வேறு பயன்கள்

தோல் வியாதிகள்

தோலில் உண்டாகும் சொறி, சிரங்கு, கடி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை நிலவேம்பு மூலிகைக்கு உண்டு.

இதற்கு நிலவேம்பு இலையினை அரைத்து சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் தோல் வியாதிகள் குணமடையும்.

நிலவேம்பு கசாயம் குடிக்கும் முறை

ஒரு தேக்கரண்டி நிலவேம்பு காயசம் பொடியினை எடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சும் போது அது கால் பங்காக குறையும்.

கால் பங்காக குறைந்த பின் சிறிது ஆற வைத்து இளம் சூடாக இருக்கும் போது எடுத்து பருக வேண்டும்.

இந்த நிலவேம்பு கசாயத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலன் கொடுக்கும்.

பொதுவாக நிலவேம்பு போன்ற கசப்பு உள்ள மூலிகைகளை ஏழு வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று குழந்தைகளுக்கு கொடுப்பது சிறப்பானது.

நிலவேம்பு பொடி கிடைக்கும் இடம்

நிலவேம்பு பொடி நாட்டு மருந்து கடைகள், அரச சித்த மருத்துவ நிலையங்கள், தனியார் சித்த மருத்துவ நிலையங்கள் போன்ற இடங்களில் கிடைக்கின்றன.

You May Also Like:

பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்

குப்பைமேனி இலை பயன்கள்