உணவு கலப்படம் கட்டுரை

Unavu Kalapadam Katturai In Tamil

இந்த பதிவில் “உணவு கலப்படம் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று உயிரை குடிக்க கூடிய பாதகமான இரசாயனங்களை கூட மன சாட்சி இல்லாமல் உணவு பொருட்களில் கலந்து விற்பனை செய்து இலாபமீட்டுகின்றனர். இதனால் மக்களது எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

நாம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

உணவு கலப்படம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உணவு கலப்படம் எனப்படுவது
  3. உணவு கலப்படமும் பாதிப்புகளும்
  4. அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவுபொருட்கள்
  5. உணவு கலப்படம் சட்டவிரோதம்
  6. உணவு கலப்படத்தை தவிர்க்கும் வழிகள்
  7. முடிவுரை

முன்னுரை

நாம் அன்றாடம் உண்கின்ற உணவுகள் அனைத்தும் தரமானதா? என்று வினவினால் இல்லை என்று தான் கூறவேண்டும். மக்களுடைய நலனை கருத்தில் கொள்ளாது தாம் இலாபம் ஈட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தின் விளைவாக தான் இந்த உணவு கலப்படம் அரங்கேற்றப்படுகிறது.

இந்தியாவில் உணவு கலப்படம் மிகவும் அதிகளவில் இடம்பெறுகிறது. உணவுகள் மருந்துகள் குடிபானங்கள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களிலும் கலப்படம் மிகுந்துள்ளது. உலகில் அதிக உணவு கலப்படம் இடம்பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இக்கட்டுரையில் உணவு கலப்படம் அதனுடைய விளைவுகள் பற்றி நோக்கப்படுகிறது

உணவு கலப்படம் எனப்படுவது

உணவு கலப்படம் எனப்படுவது நாம் உண்பதற்காக பயன்படுத்துகின்ற உணவு பொருட்களில் அதனை போன்ற வேறு பொருட்களை சேர்த்து கலத்தல் அல்லது நல்ல பொருட்களில் இருந்து நல்லவற்றை பிரித்து எடுத்தல் மூலமாக நல்ல பொருளின் தரத்தை குறைத்தல் போன்ற செயற்பாடுகளாகும்.

வியாபாரிகள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு மக்களுக்கு குறைந்த விலையில் இவ்வாறான கலப்பட பொருட்களை சந்தையில் பொய் சொல்லி ஏமாற்றி விற்கின்றனர்.

தெரிந்தும் மக்களும் இவற்றை வாங்கி உண்பதால் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். வியாபார நிறுவனங்கள் கலப்படம் நிறைந்த பொருட்களுக்கு அதிக விளம்பரம் செய்து அதிக லாபம் அடைகின்றனர்.

உணவு கலப்படமும் பாதிப்புக்களும்

இயற்கையான கலப்படமற்ற உணவுகள் ஆரோக்கியமானவை மாறாக கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் பல நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை சார்ந்த பிரச்சனைகள், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம், புற்றுநோய்கள், சிறுநீரக பிரச்சனைகள், பார்வை குறைபாடுகள் என அதிகளவான புதிய நோய்கள் இளம் வளதிலேயே ஏற்பட இந்த கலப்பட உணவுகளே காரணமாகும்.

அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவுகள்

இந்தியாவில் அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவுகளாவன. நாம் அன்றாடம் பாவிக்கும் மஞ்சள் தூளில் நிறபொருட்கள் கலக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மற்றும் நற்சீரகத்துடன் புல்கட்டை தார் கரித்தூள் போன்றன கலந்து குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

தேன் உடன் சீனிப்பாகை சேர்த்து போலியான தேனை அதிகம் விற்பதனை காணலாம். மற்றும் நெய் உடன் காய்கறி எண்ணை மற்றும் வனஸ்பதி எண்ணை போன்றவற்றை கலந்து விற்பனை செய்கின்றனர்.

துவரம் பருப்புடன் மெற்றனின் யெலோவ் என்ற இரசாயன பதார்ததத்தை கலந்து பிரகாசமான மஞ்சள் நிறத்தை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.

பழங்களை பழுக்க வைக்க பல இரசாயன பதார்தங்களை ஊசிகள் மூலமாக செலுத்தி விற்பனை செய்கின்றனர். ஆப்பிள் பழத்திற்கு மெழுகு முலாம் செய்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு எண்ணிலடங்காத கலப்படங்கள் இடம்பெறுகின்றன.

உணவு கலப்படம் சட்விரோதம்

மக்கள் உண்கின்ற உணவை கலப்படம் செய்து மக்களுக்கு தீங்கு செய்யும் வகையில் விற்பனை செய்வது ஒரு சட்டவிரோத செயலாகும்.

வைத்தியசாலைக்கு செல்கின்ற 20 சதவீதமான இளம் தலைமுறையினர் இவ்வாறான கலப்பட உணவுகளை உண்பதன் விளைவால் நோயாளிகளாக மாறுகின்றனர்.

1954 இல் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான சட்ட நடைமுறை காணப்படுகின்ற போதிலும் நாட்டில் ஊழல் நிறைந்துள்ள படியால் இன்று இந்த கலப்படம் மேலும் அதிகரித்துள்ளது.

உணவு கலப்படத்தை தவிர்க்கும் வழிகள்

உணவு பொருட்களை நாம் வாங்கும் போது அந்த பொருட்கள் தரமானவையா என்று பரிசோதித்து பார்த்து வாங்கவேண்டும்.

காலாவதியாகும் திகதி மற்றும் இந்திய தர சான்றிதழ் போன்ற குறியீடுகள் சரியாக உள்ளதா என பார்த்து வாங்குதல் வேண்டும். மற்றும் உணவு பொருட்கள் காய்கறிகளை வாங்கும் போது பார்த்து தெரிவு செய்து வாங்குதல் வேண்டும்.

வீடுகளில் வீட்டுதோட்டங்களை அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். மேலும் எமக்கு தேவையான உணவு பொருட்களை இயன்றவரை நாமே உற்பத்தி செய்து உண்பது சிறந்ததாக இருக்கும்.

முடிவுரை

உணவு கலப்படம் நீண்ட காலங்களாகவே இருந்து வந்திருக்கிறது. அது அண்மைக்காலங்களாக மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இன்று உயிரை குடிக்க கூடிய பாதகமான இரசாயனங்களை கூட மன சாட்சி இல்லாமல் உணவு பொருட்களில் கலந்து விற்பனை செய்து இலாபமீட்டுகின்றனர். இதனால் எமது எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

ஆகவே நாம் உணவு பொருட்களை வாங்கும் போது கவனமாக ஆராய்ந்து வாங்குவதுடன் கலப்படம் செய்து வியாபாரம் செய்பவர்களை சட்ட ரீதியாக புகார் செய்யவும் முடியும். நாம் விழிப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

You May Also Like :

துரித உணவு துரித முடிவு கட்டுரை

உணவே மருந்து கட்டுரை

உடல் நலம் காப்போம் கட்டுரை