புழல் சிறை என்றால் என்ன

puzhal jail in tamil

குற்றம் புரிவது மனித இயல்பு எனினும், அதனை உணர்ந்து திருந்துவதே சிறந்த மனிதன். சிறைச்சாலை என்பது கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடம் என்றில்லாமல் அவர்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும்.

புழல் சிறையின் சிறப்பம்சங்கள்

புழல் சிறையானது சென்னை அருகே உள்ள திருவாரூர் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புழல் சிறையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகத்தை கொண்டது என்ற பெருமையை பெறுகின்றது.

இது முப்பதாயிரம் கைதிகளை சிறை வைக்கும் அளவிற்கு பெரியதாகும். சுமார் 212 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற இந்தச் சிறைச்சாலையானது 2006 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி கட்டப்பட்டது.

சிறைக்குள் அடைக்கப்படும் கைதிகள் வெளியில் தப்பிக்காமல் இருப்பதற்கு 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மதில் சுவரின் மீது ஒன்றரை அடி உயரத்திற்கு மின்வேலிகள் உள்ளன. அந்த மதிலின் உயரத்தையும், மின் வேலியையும் பார்த்தாலே புழல் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கைதியின் மனதில் ஏற்படாது.

சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்க 15ற்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளன.

புழல் சிறையில் கைதிகளை மூன்று வகைகளில் பிரித்து வைத்து அடைத்து வைத்துள்ளனர். தண்டனைக் கைதிகள் பிரிவு, விசாரனைக் கைதிகள் ஒருபிரிவு பெண்கைதிகள் ஒரு பிரிவு என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கெனத் தனித்தனியே கட்டிடங்கள், நிர்வாகப் பிரிவுகள் உண்டு.

இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள் தனித்தனி நிர்வாகம் என செயல்படுகின்றது.

3 கட்டிடங்களைக் கொண்ட இந்தச் சிறைச்சாலையானது ரிமாண்ட் கைதிகளுக்காக ஒன்றும், குற்றவாளிகளுக்கு ஒன்றும் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மகளீர் கைதிகளுக்காக சிறப்புச் சிறையொன்றும் உள்ளது.

ஒவ்வொரு புளோக்குகளையும் கண்காணிப்பதற்கு 3 முதல் 4 காவலர்கள் 24 மணித்தியாலமும் பணியில் இருப்பர்.

ஒவ்வொன்றுக்கும் வாடன், தலைமை வாடன் உண்டு. உயர் பாதுகாப்பு புளோக்குகளில் வாடன், தலைமை வாடன் தவிர உதவி ஜெயிலர், துணை ஜெயிலர், ஜெயிலர் போன்றோர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களுடைய பார்வைக்குத் தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது.

புழல் சிறையில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள்

புழல் சிறையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அங்கு சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது பதிவு செய்யப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு புழல் சிறையில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து தினமணி நாழிதலில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்த பின்னர் அங்கு 5 முறை சோதனை நடைபெற்றது.

அதில் 49 தொலைக்காட்சிகள், 70 எப்.எம் ரேடியோக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர இங்குள்ள சிறைக் கைதிகள் பயங்கர மோதல்களிலும் ஈடுபடுவதுண்டு.

மேலும் பல பாதுகாப்பு வசதிகள் நிறைந்திருக்கும் புழல் சிறைச்சாலைக்குள் பீடி, சிகரட் தொடங்கி அபின், கஞ்சா முதல் கிடைப்பதாகப் புழல் சிறையில் இருந்து வெளிவந்த கைதிகள் பத்திரிகைக்குக் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read More: போக்சோ சட்டம் என்றால் என்ன

நீதிமன்ற காவல் என்றால் என்ன