உடல் நலம் என்றால் என்ன

udal nalam enral enna

உடல் நலம் என்றால் என்ன

இன்றைய காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு இணையாக வெவ்வேறுவிதமான நோய்கள் மனித இனத்தைத் தாக்கிய வண்ணம் இருக்கின்றன.

வணிக ரீதியான இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செல்வ வளத்தைச் சேர்ப்பதிலேயே நாம் குறியாக இருக்கிறோம். அதே நேரத்தில் நோய், நொடி ஏதுமின்றி நமது வாழ்க்கை பயணிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

உடல் நலம் என்றால் என்ன

உடல் நலம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமல்ல, உடலிலுள்ள அனைத்து செல்களும் உயிர்த்துடிப்புடன் இருப்பது என்பதுதான் உடல் நலம் ஆகும்.

உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டியவை

வாழ்வில் சந்தோசம், சோகம் என இரு உணர்ச்சிக்கும் உடனே புகைப்பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் நம்மில் பலருக்கு உண்டு. சிலருக்கு புகைப்பிடிக்க முடியாமல் விட்டால் அன்று நாளே போகாதது போல் உணர்வார்கள். இவ்வாறு புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சுத்தி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும்.

புகைப்பிடிக்கும் போது அது இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை குறைத்து கார்பன்டை ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலிலுள்ள திசுக்களுக்கு போதிய அளவு ஒட்சிசன் கிடைக்காது.

மேலும் பலர் தொடர்ச்சியாக குடிபோதையில் இருப்பதினால் அவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீர்ப் பாதிப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புண்டு. அதுமட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவடையும். இப்பிரச்சனைகளை குறைக்க வேண்டுமெனில் இப்பழக்கங்களை கைவிட வேண்டும்.

நாம் காலை, மாலை என இரண்டு வேளைகளும் பல் துவக்குவது முக்கியமானதாகும். இது ஒரு சிலரால் மட்டுமே பின்பற்றப்படுகின்றது. ஒருவேளை மட்டும் பல்துலக்குவதால் 90 சதவீத கிருமிகளை மட்டுமே அகற்ற முடியும்.

எனவே இரவு தூங்குவதற்கு முன் பல் துலக்க வேண்டியது மிகமிக முக்கியமானதாகும். பல் துலக்காமல் விட்டால் சொத்தைப் பிரச்சினை, வாய் துர்நாற்றம், முரசு கரைதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.

உணவு உண்ணும் போது நன்கு மென்று சாப்பிட வேண்டும். மெல்லாது சாப்பிடும் போது நேரடியாக உணவு இடுப்பைக்குள் சென்று செரிமானம் அடைய தாமதமாகும். அதுமட்டுமில்லாது உணவுக் குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் உணவு சிக்குவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவை நன்குமென்று சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல் வேண்டும். ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு இது உதவுகின்றது.

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததாகும். தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். இதனால் சாதாரண கிருமித் தொற்றைக்கூட உடலால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விடும். எனவே போதுமான தூக்கம் உடல் நலத்திற்கு அத்தியாவசியமானது.

இன்றைய நவீன உலகில் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை நாம் பெருமளவு கைவிட்டு விட்டோம். துரித உணவுப் பொருட்களை உண்பதையே அதிகம் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். இது உடல் நலம் சார்ந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

பொதுவாக துரித உணவுகள் மைதா மாவினால் செய்யப்படுகின்றன. இது உடலுக்கு உகந்ததல்ல. அத்துடன் துரித உணவுகளில் நார் சத்துக்கள் குறைவாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

Read more: உடல் நலம் காப்போம் கட்டுரை

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்