பயிர்ப்பு என்றால் என்ன

payirppu in tamil

ஆண், பெண் இருபாலருக்கும் அவரவர் இயல்புகளுக்கு ஏற்றவாறு இயற் பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக நாற்பண்புகள் அல்லது நால்குணங்களை மரபுவாதிகள் செய்யுள்களிலே வகுத்து தொகுத்து கூறியுள்ளனர். அவையாவன,

ஆண்களுக்குரிய நற்பண்புகள்

  • அறிவு

எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த பொருளின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வது  அறிவு எனப்படும்.

  • நிறை

தன்னிடம் காக்க வேண்டியவை அனைத்தையும் காத்து, போக்க வேண்டியவை அனைத்தையும்  போக்கி நடக்கும் நடத்தை நிறை என்று பொருள்படும்.

  • ஓர்ப்பு

ஒரு பொருளைப் பற்றி ஆராய்ந்து அறிவதே ஓர்ப்பு என்பதாகும்

  • கடைப்பிடி

கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது நன்று என அறிந்த பொருளை மறக்காமல் பின்பற்று என்பதாகும்.

பெண்களுக்குரிய நற்பண்புகள்

  • அச்சம்

அச்சம் என்பது பயம் எனப்படும். அதாவது தீய சொற்களுக்கு பயப்படுதல்.

  • மடம்

யாரேனும் ஒன்றைச் சொன்னால் அதைக் கேட்டுக்கொண்டு, அது தனக்குத் தெரிந்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல் மடம் ஆகும். ஒருவகை அடக்கம் ஆகும்.

  • நாணம்

நாணமென்பது வெட்கம் எனப்படும்.

  • பயிர்ப்பு

அருவருப்பு, கணவர் தவிர வேறு ஆடவர் எவரேனும் தொட்டால் பெண்களுக்கு ஏற்படும் அருவருப்பு அல்லது கூச்சம் ஆகும்.

பெண்களுக்குரிய நாற்பண்புகளில் ஒன்றாக காணப்படும் பயிர்ப்பு பற்றி சற்று விரிவாக நோக்குவோம்.

பயிர்ப்பு என்றால் என்ன

பயிர்ப்பு என்பது அருவருப்பு, கணவர் தவிர வேறு ஆடவர் எவரேனும் தொட்டால் பெண்களுக்கு ஏற்படும் அருவருப்பு அல்லது கூச்சம் ஆகும்.

அத்துடன் பயிர்ப்பு எனும் சொல்லுக்கு மதுரை தமிழ் பேரகராதி, கழகத் தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி – ஆகிய 4 அகராதிகளிலும் ஒன்றுபோல இச்சொல்லுக்குக் கொடுக்கும்  அர்த்தம் ‘அருவருப்பு’.

சில அகராதிகள் பயிர்ப்பு என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ‘குற்சிதம்’ என்ற சொல்லைக் காட்டுகின்றன. குற்சிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்க்கப்போனால் மதுரைத் தமிழ்ப் பேரகராதியின்படி அதுவும் ‘அருவருப்பு’ என்பதாகவே உள்ளது.

பயிர்ப்பு காணப்படும் விதம்

  • பெண் அருவருப்பான அல்லது அசுத்தமான தோற்றம் உள்ளவளாய்  சில வேளைகளில்  கணவர் தவிர்ந்த மற்றையோர் பார்வையில் இருக்க வேண்டும். அதாவது மணம் முடித்த பெண் பிற ஆண்களை கவரும் வகையில் செயற்படக் கூடாது என்பதற்காக கூறப்படுகின்ற சொல்லாகவும் அமைகிறது.
  • பெண்ணானவள் தனக்குப் பழக்கம் இல்லாதவர்களிடம், முக்கியமாக ஆடவர்களிடம்,  கட்டாயமாக காம நோக்கம் கொண்டோர்களிடம்  அருவருப்புக் கொண்டு விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இச்சொல் அமைகிறது.
  • கணவன் தவிர்ந்த வேற்று ஆண்மகனின் உடல் பரிசம் பட்டதும் பெண்களுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு “பயிர்ப்பு” எனவும் கூறப்படுகிறது.

எனும் மூன்று விதங்களில் பயிர்ப்பு என்பது பெண்களிடையே காணப்படுகிறது.

செய்யுள்களில் பயிர்ப்பு சொல்லின் தோற்றம்

தொல்காப்பியத்திலே ‘களவியல்’ பகுதியிலே 96வது வரியில் இருந்து “பயிர்ப்பு” ஆரம்பிக்கின்றது.

’மனது ஒருமித்த காதலர்கள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பிறர் அறியாமல் தனி இடத்தில் கூடி இன்பமாக இருப்பது’ – என்ற நிலையே களவியல் ஆகும். அப்படி அவர்கள் கூடும் இடத்திற்கு ‘குறி’ என்ற பெயர் சங்க இலக்கியங்களிலே காணப்படுகிறது. பகலில் கூடும் இடம் பகற்குறி, இரவில் கூடும் இடம் இரவுக்குறி.

தலைவியானவள் தலைவனுடன் தனியே இருக்கும் போது அவளுக்கு மனதின் உள்ளே உருவாகக் கூடிய

  • அச்சம் (பிறர் பார்த்தால் என்ன ஆகும் என்ற மனநடுக்கம்),
  • மடம் (என்ன ஆனாலும் சரி என்று தலைவனின் ஆசைக்குத் துணை நிற்கும் அறிவற்றதனம்),
  • நாணம் (தலைவனை அனுமதித்த பின்னர் அவனது செயல்களால் வரும் வெட்கம்)

ஆகியவற்றையே தொல்காப்பியர் ‘அச்சம், மடம், நாணம்’ என்று மூன்றாக வகுத்தார். சங்ககால இலக்கியங்களிலும் இதுவே களவின் நிலைகளாகப் பாடப்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ்ச்சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்த பின்னர், பிற்காலத்தில் தமிழரின் காதல் சுதந்திரத்தை ஏற்க முடியாத ஒருவர்,

திருமணத்திற்கு முன்பாக ஒருவன் தன்னைத் தொடும்போது பெண் அதனை அனுமதிப்பது தவறு. அவள் அவனது தொடுகையை அருவருப்பாக உணர்வாள் என்று எண்ணிப் பின்னாளில் சேர்த்ததே ‘பயிர்ப்பு‘ ஆகும்.

Read more: பெண்களின் சிறப்பு கட்டுரை

பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை