Table of Contents
உடற்றகைமை என்றால் என்ன
மனிதனின் உடலினால் குறிப்பிட்ட ஒரு செயற்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்கு மனிதனிடம் காணப்படும் திறன் உடற்றகைமை எனப்படும்.
நாம் உடற்றகைமையை விருத்தி செய்து கொள்வதற்காக உடற்பயிற்சிகள், விளையாட்டுக்கள், உடல் ரீதியான செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
உடற்றகைமைகளின் வகைகள்
- தாங்கும் திறன்
- கதி அல்லது வேகம்
- ஒத்திசைவு அல்லது துரிதம்
- நெகிழும் தன்மை
- பலம் அல்லது சக்தி
தாங்கும் திறன்
தாங்கும் திறன் என்பது, ஏதேனும் ஒரு செயற்பாடொன்றினை மேற்கொள்ளும் போது அந்த வேலையில் களைப்பின்றி நீண்ட நேரம் அந்த வேலையை மேற்கொண்டு மற்றும் அந்த வேலையை ஆரம்பிக்கும் போது எம்மிடம் காணப்பட்ட அதே பழைய நிலைக்கு எம்மை கொண்டு வருதலைக் குறிக்கும்.
ஒரு வேலையை செய்யும் போது சிலர் அந்த வேலையை களைப்படையாமல் நீண்ட நேரம் செய்வர் சிலர் விரைவில் களைப்படைவர். நீண்ட நேரம் களைப்படையாமல் வேலை செய்பவர்களுக்கு தாங்கும் திறன் அதிகம்.
தாங்கும் திறனை அளத்தல்
நீண்ட நேரம் களைப்பின்றி ஓடுவதற்குப் பயிற்சி முக்கியமாகும். குறிப்பிட்ட நிமிடங்கள் ஒருவர் இடைவிடாமல் ஓடுவதன் மூலம் ஒருவரின் தாங்கும் திறனை அறியலாம். கூடைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம், மரதன் ஓட்டம், துவிச்சக்கர வண்டி ஓட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு தாங்கும் திறன் அதிகளவு தேவைப்படும்.
கதி
கதி என்பது ஓரலகு நேரத்தில் செல்லும் தூரம் ஆகும். அதாவது ஒரு செயற்பாடொன்றினை குறைந்த நேரத்திற்குள் அதிக பயன்களுடன் முடிக்கும் ஆற்றலாகும்.
பலம்
பலம் என்பது ஒரு வேலையை செய்து முடிப்பதற்காக எம்மால் பிரயோகிக்கப்படும் சக்தி ஆகும்.
பலத்தினை அதிகம் பிரயோகிக்கும் விளையாட்டுக்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். பாரம் தூக்குதல், குத்துச் சண்டை, குண்டு போடுதல். மேலும் சக்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு சிறந்த உணவுப்பழக்கம், சிறந்த பயிற்சிகள் போன்றவற்றினை மேற்கொள்ளலாம்.
நெகிழும் தன்மை
நெகிழும் தன்மை என்பது உடலின் மூட்டுக்கு பகுதிகளினூடாக உடலை அசைக்கக் கூடிய திறன் ஆகும். இதற்கு நீந்துதல், தடை தாண்டல் ,உயரம் பாய்தல், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.
ஒத்திசைவு
உடல் உறுப்புகள் யாவும் இணைந்து சிறந்த திறனுடன் செயற்படுதல் ஆகும். இதற்கு மேசை பந்து போன்ற விளையாட்டுக்கள் விளையாடலாம்.
உடற்றகைமையை விருத்தி செய்துக் கொள்வதற்கு செய்ய வேண்டியவை
- தியானம் மேற்கொள்ளல்
- யோகா பயிற்சிகள் மேற்கொள்ளல்
- தினமும் உடற்பயிற்சிகளில் ஈடுபடல்
- தம் வேலைகளை முடிந்த வரை தாமே சிரமம் பாராமல் செய்தல்
- விளையாட்டுக்களில் ஈடுபடல்
உடற்றகைமையை பேணுவதால் மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
- ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு
- சுறுசுறுப்பாக இயங்க முடியும்
- சிறந்த உடல் அமைப்பினை பெறலாம்.
- நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- மன அமைதியினை பேணுதல்
Read more: உடல் நலம் என்றால் என்ன