ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் உண்டு அதில் சிலவற்றை இதில் பார்க்கலாம்.

சிலருக்கு ஆவி பிடித்தல் என்றால் ஜலதோசத்திற்கு ஆவி பிடிப்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆவி பிடிப்பதால் சருமத்திற்கு பல பயன்கள் கிடைக்கின்றன.

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சரும அழுக்குகள்

சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கி விடுவதால் தான் முகம் பளபளப்பாக இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகின்றது.

ஆவி பிடிப்பதால் சரும அழுக்குகளை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றி இளமைத் தோற்றத்தை தரும்.

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கவும் ஆவி பிடித்தல் சிறந்த தீர்வாக இருக்கின்றது.

முகப்பருக்கள்

ஆவி பிடிப்பதால் சருமத்தின் சிறு துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பசையையும் நீக்குகிறது.

முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பருக்களை கட்டுப்படுத்தலாம்.

இரத்த ஓட்டம்

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் சருமம் மிகவும் அழகாகவும் பொழிவுடனும் இருக்கும்.

முகத்திற்கு தேவையான் ஈரப்பதன் ஆவி பிடித்தல் மூலம் கிடைக்கின்றது.

சரும அழகையும் ஆரோக்கியத்தையும் பேண நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை ஆவி பிடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.

வேறு நன்மைகள்

சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேயிலை தூள் ஆகியவற்றை சேர்த்து ஆவி பிடிக்கும் போது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடிகின்றது.

இந்த முறையை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் பொழுது நுரையீரலை சுத்தப்படுத்துவதுடன் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி இது சுவாச பாதையை சுத்தம் செய்வதுடன் முகத்துளைகளில் உள்ள கிருமிகளையும் அழிக்கின்றது.

சளி, இருமல், தலை வலி, தலையிடி மற்றும் திடீர் ஜலதோஷம் உள்ளவர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி ஆவி பிடித்தால் சிறந்த பலனை அடைய முடியும்.

குறிப்பு

தினமும் ஆவி பிடிப்பது சிறந்த முறை அல்ல.

ஆவி பிடிக்கும் போது மிதமான சூட்டில் பிடிக்க வேண்டும். அதிக சூட்டில் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதில் குறிப்பிட்டதை விட பல ஆவி பிடிக்கும் முறைகள் உள்ளன. மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பது கூடுதல் பயன் தரும்.