இந்த பதிவில் “இளமையில் கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.
கல்வி என்ற உயரிய ஆயுதம் மூலமாக தான் இந்த உலகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது.
Table of Contents
இளமையில் கல்வி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமை பருவம்
- இளமை கல்வியின் அவசியம்
- சிறந்த ஆரம்பம்
- கற்பனைக்கெட்டாத விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
எந்த ஒரு செயலை நாம் ஆரம்பிக்கின்ற போதும் அதனுடைய ஆரம்பம் என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.
சிறந்த ஆரம்பமானது பாதி வெற்றியடைந்தமைக்கு சமன் என்கின்றது ஒரு ஆங்கில பழமொழி எனவே தான் எமது இளமைப்பருவம் எமது வாழ்வின் பிற்காலத்தை தீர்மானிக்க போகும் ஒரு பொற்காலமாக பார்க்கப்படுகின்றது.
இளமை பருவம் கல்வியினை பெற்று கொள்ள சிறந்த பருவமாக கருதப்படுகின்றது இதனால் தான் அனைவரும் இளமையில் கற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள். இக்கட்டுரையில் அவை பற்றி இங்கே காணலாம்.
இளமை பருவம்
இளமை பருவம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான கால கட்டமாகும்.
வாழ்வின் அதிகளவான புரிதல்கள் மற்றும் அழுத்தங்கள் இன்றி நாம் மகிழ்ச்சியாக வாழும் காலமும் இதுவே. இந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்வதோடு கல்வி கற்கவும் பிற ஒழுக்கங்களை கடைப்பிடிக்கவும் குழந்தைகளை பாடசாலைகளை நோக்கி மகிழ்வோடு அனுப்பி வைப்பார்கள்.
இந்த இளமை காலம் தான் எமது வாழ்வின் அத்திவாரமாக அமைகிறது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
இளமை கல்வியின் அவசியம்
“வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்ற பழமொழியை போல எமது சிறப்பான எதிர்காலத்துக்காக எமது இளமைப்பருவத்தில் நாம் ஆர்வத்தோடு கற்று ஒழுக வேண்டும்.
ஏன் என்றால் இளமையில் கற்றுகொள்வது மிகவும் எளிது கல்வியோ பழக்கவழக்கங்களோ பசுமரத்தாணி போல ஆழ்மனதில் பதிய கூடிய காலமாக இந்த பருவம் காணப்படுகின்றது.
இதனால் தான் எமது பெற்றோரும் ஆசிரியர்களும் இளமை கல்வியினை எமக்கு போதிக்க ஆர்வம் காட்டுகின்றன. இளமையில் கல்வியில் ஆர்வம் உண்டான குழந்தை தன் வாழ்வு முழுவதும் அதன் மகத்துவத்தை நன்குணர்ந்து கொள்ளும்.
சிறந்த ஆரம்பம்
இன்றைய காலத்தினை பொறுத்த வரையில் இன்று கல்வி என்பது மிக பரந்தது அறிவியல் மற்று தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமானது. இதனால் இந்த வாழ்வு போட்டிகள் அதிகம் நிறைந்தவையாகும்.
இங்கே மிகச்சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்ற போதும் அதற்கான திறமையினை சரியாக வளர்த்துக் கொள்ள இளமை பருவம் மிகவும் அவசியமானதாக உள்ளது.
ஆதலால் காலத்தை வீண் விரயமாக்காமல் வாழ்வின் பொன்னான வாய்ப்புகளை அடைய இளமையில் கற்க வேண்யது அவசியமானதாக உள்ளது.
கற்பனைக்கெட்டாத விளைவுகள்
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல நாம் சிறுவயதில் இருந்து கைக்கொள்கின்ற சில சிறிய சிறிய நல்ல பழக்கங்கள் எமது வாழ்வின் பின்னாளில் மிகச்சிறந்த நல்ல விளைவுகளை எமக்கு தரும் என்பதனால்
மழை நாளுக்கு முன்பே சேமிப்பது போல சிறுவயது முதலே நாங்கள் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தேடி தேடி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இவைதான் பின்னாளில் மகத்தான வெற்றியாளர்களை இந்த உலகத்துக்கு தந்திருக்கின்றது என்றால் யாரும் மறுப்பதற்கில்லை.
முடிவுரை
இதனால் தான் எம் முன்னோர்கள் “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்று கூறியிருக்கிறார்கள்.
ஆதலால் வாழ்வின் உயர்ந்த நிலைகளை நாம் அடைய வேண்டுமானால் இளமை பருவத்தில் மிக ஆர்வத்தோடு கற்று கொள்ள வேண்டும்.
கல்வி என்ற உயரிய ஆயுதம் மூலமாக தான் இந்த உலகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது.
எனவே எமது எதிர்கால தலை முறையினர் சிறப்பாக கற்று கொள்வதன் மூலமாகவே சிறந்த எதிர்காலத்தை அடைந்து கொள்ள முடியும் என்பது தெளிவாகும்.
You May Also Like : |
---|
ஆசிரியர் பணி கட்டுரை |
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை |