இணைய வழி கல்வி நன்மைகள் தீமைகள் கட்டுரை

Inaya Vali Kalvi Katturai In Tamil

இந்த பதிவில் இன்று மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் “இணைய வழி கல்வி நன்மைகள் தீமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு தொழில்நுட்பம் என்றால் அதில் நன்மை தீமை என்ற இரு பக்கங்கள் நிச்சயமாக இருக்கவே செய்கின்றது.

இணைய வழி கல்வி நன்மைகள் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இன்றைய சூழல்
  3. வள வாய்ப்புகள்
  4. நன்மைகள்
  5. தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தகவல் தொழில்நுட்ப யுகமாகும். மனிதன் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் கற்பனைக்கு எட்டாத உயரங்களை அடைந்து விட்டான்.

இணைய வழி மூலமாக நாம் இருந்த இடத்தில் இருந்த படியே பல வேலைகளை இலகுவாக செய்ய கூடிய அளவிற்கு இன்று இணையம் நவீனமயப்படுத்தப்பட்டு விட்டது.

இதற்கு கல்வி ஒன்றும் விதிவிலக்கல்ல இணையத்தின் மூலமாக நாம் எதையும் இலகுவாக தேடி கற்று கொள்ளும் வகையில் இன்று நிலைமை மாறியிருக்கிறது. இதன் வாயிலாக எமக்கு கிடைக்கின்ற நன்மைகள் தீமைகள் பற்றி இக்கட்டுரை வாயிலாக நாம் இங்கே நோக்கலாம்.

இன்றைய சூழல்

இன்றைய உலகம் கொரோனா என்ற வைரஸின் தாக்கத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு படிப்படியாக மீண்டு வருகின்றது.

இந்த உலக பேரிடரினால் கல்வி துறையில் மாணவர்கள் பாடசாலைகள், பல்கலைகழகங்கள், கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியாத நிலை தோன்றியிருந்தது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வியாண்டு காலம் வீணாகின்ற சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

இதனால் உலக நாடுகள் கல்வியை மாணவர்கள் வீடுகளில் இருந்தே தொடரும் வகையில் இணைய வழி கல்வி முறையினை பின்பற்றி வருகின்றன. இது போன்ற அசாதாரண சூழலில் இது ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகின்றது.

வள வாய்ப்புக்கள்

இணைய வழி கல்வி எனப்படுகையில் இதற்கு முன்பாகவே மாணவர்கள் தமக்கு தேவையான சகல விடயங்களையும் இணைய தளங்கள், யூடியூப், கூகுள் போன்றவற்றில் இருந்து தேடி இலகுவாக கற்று கொள்ள கூடிய சந்தர்ப்பமானது காணப்பட்டது.

சிறப்பாக இன்று இணையவழியாக ஆசிரியர்கள் தமது மாணவர்களை ஒரு குழுவாக்கி தமது கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஸ்மார்ட் போன்கள், மடிக்கனணிகள் கைவசம் இருக்கின்ற மாணவர்கள் விரும்பிய ஆசிரியர்களிடம் கற்கின்ற வசதியானது இன்று ஏற்பட்டுள்ளது.

நன்மைகள்

இக்கட்டான சூழல்களில் வெளியில் செல்லாமல் அதிக செலவுகள் இன்றி மாணவர்களால் பாதுகாப்பாக தமது கல்வி நடவடிக்கைகளை தொடர இந்த இணைய வழி கல்வி முறை உதவுகின்றது.

பயணசெலவு, உணவு செலவு, தங்குமிட செலவு எதுவும் இன்றி தங்களது வீட்டில் இருந்த படியே மகிழ்ச்சியாக கற்று கொள்ள இது உதவுகின்றது.

மற்றும் தமது பாடங்களில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் உலகத்தின் எப்பாகத்தில் இருந்தாலும் அவரிடம் கற்கும் அரிய வாய்ப்பை இது மாணவர்களுக்கு வழங்குவது நன்மை பயப்பதாகும்.

தீமைகள்

எது எவ்வாறாக இருப்பினும் இந்த இணைய வழிகல்வி மாணவர்கள் ஆசிரியர்கள் என்ற நேரடியான கல்வி முறை போன்று இருக்காது பல குறைபாடுகளையும் கொண்டு காணப்படுகின்றது.

நேரடியாக கற்பது போன்று தெளிவாகவும் சந்தேகம் இன்றியும் கற்கின்ற வாய்ப்பை மாணவர்கள் இழக்கின்றனர்.

மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை வாங்குமளவிற்கு வசதி இல்லாத ஏழை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலையானது ஏற்படுகின்றது.

மற்றும் சிறுபராய குழந்தைகள் இணைய வாயிலாக சில தவறான வழிகளில் செல்லும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

முடிவுரை

எது எவ்வாறாக இருப்பினும் ஒரு தொழில்நுட்பம் என்றால் அதில் நன்மை தீமை என்ற இரு பக்கங்கள் நிச்சயமாக இருக்கவே செய்கின்றது.

ஆகவே அதனை பாவிக்கின்ற மாணவர்கள் அதனை சரியான முறையில் பாவித்து அதில் இருந்து நல்ல பயனை பெற்று கொள்ள வேண்டும்.

இன்றைய சவால்கள் நிறைந்த உலகில் மாணவர்கள் தமது அறிவையும் தொழில்நுட்பத்தையும் நிச்சயமாக வளரத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.

You May Also Like :
விஞ்ஞானத்தின் விந்தை கட்டுரை
கொரோனாவும் கல்வியும் கட்டுரை