இந்திரனுக்கு சாபம் கொடுத்த தேவலோக மங்கை

அகலிகை

இந்திரனுக்கு சாபம் கொடுத்த தேவலோக மங்கைஅகலிகை

இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்ச கன்னிகைகள் என அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த ஐந்து பெண்களும் கணவனனைத் தவிர வேறு எந்த ஆண்களையும் மனதால் கூட நினைக்காத பத்தினிப் பெண்கள் ஆவார்கள்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை, பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதி, இராமனின் மனைவி சீதை, இராமயணத்தின் வாலியின் மனைவி தாரை, இராவணனின் மனைவி மண்டோதரி போன்றவர்களே பஞ்ச கன்னிகைகள் ஆவார்கள்.

இந்திரனுக்கு சாபம் கொடுத்த தேவலோக மங்கை அழகில் சிறந்து விளங்கிய பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகிய அகலிகை ஆவாள். அகலிகை – இவர் அகல்யா, அகல்யை என்றும் அழைக்கப்பெறுகிறார். இந்த பதிவில் அகலிகையின் வாழ்க்கை வரலாற் பற்றி பார்ப்போம்.

அகலிகை படைக்கப்பட்ட விதம்

வரலாற்று அம்சங்களில் மோகினி என்ற திருமாலினுடைய அவதாரம் தன்னுடைய அழகிய உடலினால் அசுரர்களை மயக்க வைத்து தேவர்களுக்கு அமுதத்தை கிடைக்க வைத்தார்.

இதனால் அழகு என்பது காமத்திற்காக பயன்பட்டமையை எண்ணிய பிரம்மா அழகு என்பது காமத்திற்கு பயன்படாது தவத்திற்கு பயன்பட வேண்டும் என்று சிந்தித்து அழகு நிறைந்த பெண்ணை படைத்தார். அவருக்கு அகலிகை எனும் பெயரிடப்பட்டது. பிரம்ம தேவருடைய புகழ் பெற்ற மானசீக மகளாக அகலிகை விளங்கினார்.

அகலிகையின் திருமணம்

பிரம்மா ஒரு சமயம் இந்த உலகத்தை முதன்முதலாக சுற்றி வருபவருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அப்போது இதனை அறிந்த கௌதமர் என்ற முனிவர் பசுவே இந்த உலகின் மூலாதாரம் என்பதை உணர்ந்து பசுவை வலம் வந்தார்.

இதனால் பிரம்ம தேவர் அகலிகையை கௌதம முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். கௌதம முனிவருக்கும் அழகிற் சிறந்த அகலிகைக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பெற்றோர் சதானந்தன் எனப் பெயரிட்டனர்.

அகலிகை மீது இந்திரனுக்கு உண்டான ஆசை

அனைத்து பெண்களையும் அழகில் மிஞ்சியவளாக காணப்பட்ட அகலிகை மீது இந்திரன் ஆசை கொண்டான். ஒரு சமயம் அகலிகை ஆற்றங்கரையில் இருக்கும் போது இந்திரன் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினான் ஆனால் அகலிகை சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக கோபம் அடைந்தார்.

ஏனெனில் அகலிகை தன்னுடைய கணவனை மட்டும் எண்ணி மனதில் வாழும் கற்புக்கரசி ஆவாள். இதனால் கோபம் அடைந்த இந்திரன் ஒருநாள் கௌதம முனிவர் ஆற்றங்கரை சென்றிருந்த நேரம் கௌதம முனிவருடைய வேடம் தரித்து அகலிகையுடன் வாழ்ந்தான்.

ஆற்றங்கரையில் இருந்து திரும்பி வந்து பார்த்ததும் கோபம் கொண்டு இருவரையும் கல்லாக மாறுமாறு சபித்தார். ஆனால் அகலிகை தன்மீது எந்த தவறு இல்லை என்பதை கௌதம முனிவருக்கு புரிய வைத்தார்.

இதனால் தன் மனைவியின் அறியா நிலையை உணர்ந்த கௌதம முனிவர் இராமபிரானின் பாதம் கல்லாக இருக்கும் அகலிகை மீது எப்போது படுகிறதோ அப்போது நீ மீண்டும் உருமாறுவாய் சாபம் நீங்கும் விமோசனம் அருளினார்.

அதேபோல அகலிகை இராமபிரானின் வனவாச காலத்தின் போது கல்லாக இருந்த அகலிகை மீது பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றார். இவ்வாறு அகலிகை கல்லாக இருந்த கௌதம முனிவரது ஆச்சிரமம் அகல்யா இடம் மற்றும் அகல்யா ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது.

அகலிகைக்கான நூல்கள்

தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படுகின்ற வெ.ப. சுப்ரமணிய முதலியார் அகலிகையை பற்றி ஒரு வெண்பா நூலை இயற்றியுள்ளார். இந்த நூல் அகலிகை வெண்பா என அழைக்கப்படுகின்றது. அகலிகை வெண்பாவில் அகலிகையின் வாழ்க்கை வரலாறு வெண்பா பாடல்களாக பாடப்பட்டுள்ளது.

Read More: த்வைதம் என்றால் என்ன

பங்குனி உத்திரம் என்றால் என்ன