சைவமும் தமிழும் கட்டுரை

saivamum tamilum katturai

உலகில் உள்ள ஒவ்வொரு சமயமும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே தோன்றியுள்ளன.

இவ்வாறாக உலகில் இந்து சமயம், பௌத்த சமயம், சைவ சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம் மற்றும் கிறிஸ்தவ சமயம் என பல்வேறு பல சமயங்கள் தோன்றி இன்றும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகிலுள்ள எல்லா சமயங்களினதும் அடி நாமம் இறைபக்தி ஆகும்.

சைவமும் தமிழும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சைவ சமயம்
  • சைவ சமயத்தின் பழமை
  • தமிழ் மொழி
  • சைவ சமய வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பல்வேறு சமயங்கள் காணப்படுகின்ற போதிலும் சைவ சமயம் மிகவும் தொன்மையானதும், சிறப்பு வாய்ந்ததுமாகும்.

“அன்பே சிவம்” என்பதுவே சைவ சமயத்தின் தாரக மந்திரம் ஆகும். அதன் அடிப்படையில் சைவ சமயம் பற்றியும் தமிழ் மொழி பற்றியும் இக்கட்டுரையில் நோக்கலாம்.

சைவ சமயம்

உலகில் தோன்றி நிலை பெற்றுக் கொண்டிருக்க கூடிய பல்வேறு சமயங்களில் மிகவும் பழமையான ஒரு சமயமாகவே இந்து சமயம் காணப்படுகின்றது. இந்த இந்து சமயமானது இரு பிரிவுகளை கொண்ட அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் சிவன் வழிபாட்டு பிரிவு சைவம் எனவும் திருமால் வழிபாட்டு பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டிலும் கூட சைவ சமயமே காலத்தால் முன்னயதாகும்.

சைவ சமயத்தின் பழமை

சைவ சமயத்தில் பழமையை எடுத்துக்காட்டுவதாகவே சங்ககால இலக்கியங்களில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றுள் சிவனைப் பற்றிய செய்திகள் இருப்பதனை காணலாம்.

எடுத்துக்காட்டாக “பிறைநூதல் பொழலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன்” என புறநானூறிலும், “பிறவா யாக்கை பெரியோன் கோவிலும்..” என சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளமையை காணலாம்.

மேலும் சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டமை சைவ சமயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் மொழி

சைவ சமயம் எவ்வாறு பழமையானது அதுபோலவே மொழிகள் மிகவும் பழமையான ஒரு மொழியாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. அதாவது மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின் போது தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அதன் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

சமயத்தின் சிந்தனைகள், கருத்துக்கள், கொள்கைகள் போன்றவற்றை பரப்புவதற்கு ஊடகமாக மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சைவ சமயத்தின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரப்புவதில் தமிழ் மொழி பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது.

சைவ சமய வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்கு

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படும் தமிழ் மொழியானது சைவ சமயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. அதாவது சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு தமிழ் மொழி உறுதுணையாக இருந்துள்ளது.

சைவ சமயத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றிவர்கள் பலரும் தமிழ் மொழியில் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்துள்ளமையை காணலாம்.

அந்த வகையில் சுந்தரர் “இறைவன் தமிழை ஒத்தவன்” என்றும், நம்பியாண்டார் நம்பி “தோடோடு செவியான்…” என்றும், திருநாவுக்கரசர் “பித்தா பிறைசூடி பெருமானே…” என்றும் மற்றும் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் போன்ற அனைத்துமே சிவபெருமானின் மகிமைகளை எடுத்துக் கூறும் தமிழ் பாடல்களாகும்.

எனவே தமிழ் மொழி சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றி உள்ளது என குறிப்பிடலாம்.

முடிவுரை

சைவ சமய கருத்துக்களை தமிழ் மொழியில் சான்றோர்கள் பரப்பியமையினால் சிவ பக்தியோடு இணைந்து தமிழ் மொழியும் வளர்ச்சி பெற்றது.

இந்து மதத்தின் உயிர்நாடியாக சைவ சமயம் விளங்குவது போல சைவ சமயத்தின் உயிர்நாடியாக தமிழ் மொழி விளங்குகின்றது. எனவே சைவமும் தமிழும் பின்னிப்பிணைந்த தொடர்பு கொண்டவை.

Read More: செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை

தமிழ் மொழியின் பண்புகள் யாவை