இந்த பதிவில் “அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரையில் எவ்வளவோ அறிவியல் சாதனங்களை பயன்படுத்துகின்றோம்.
Table of Contents
அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அன்றாட வாழ்வில் அறிவியல்
- மருத்துவத்துறை
- விவசாயத்துறை
- போக்குவரத்துதுறை
- தகவல் தொழில்நுட்பம்
- முடிவுரை
முன்னுரை
எமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற அறிவியல் சாதனங்கள் தான் எமது வாழ்வை இவ்வாறு இலகுபடுத்தி கொண்டிருக்கின்றன.
மனிதன் பண்டைய காலங்களில் காடுகளில் வாழ்கின்ற போது தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ள கடுமையான உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டான்.
ஆனால் இன்றோ அவ்வாறில்லை மிகவிரைவாக எமது வேலைகளை இலகுவாக்கும் வகையில் மிகச்சிறந்த அறிவியல் ஆக்கங்களை மனிதன் கண்டுபிடித்து விட்டான்.
இவை மனித பரிநாமத்தின் ஆகச்சிறந்த சாதனையாக உள்ளது இக்கட்டுரையில் அறிவியல் ஆக்கங்கள் பற்றி நோக்கலாம்.
அன்றாட வாழ்வில் அறிவியல்
இன்று நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரையில் எவ்வளவோ அறிவியல் சாதனங்களை பயன்படுத்துகின்றோம்.
ஒரு ஆளியை அழுத்தியதும் வெளிச்சம் மின்குமிழ் மூலமாக கிடைக்கிறது. மற்றொரு ஆளியை அழுத்தினால் நீர்பம்பி மூலம் நீர் நிறைகின்றது.
சமையல் அறையில் மின் அடுப்பு, எரியவாயு அடுப்பு, அரைக்கும் இயந்திரம் என பலவகையான உபகரணங்கள் சமையலை விரைவுபடுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்க கணணிகளும் தொடர்பாடல் மேற்கொள்ள தொலைபேசிகளும் விரைவாக பயணம் செய்ய நவீன போக்குவரத்து சாதனங்களும் என பலவகை அறிவியல் ஆக்கங்கள் நாள் முழுவதும் எமது வேலைகளை இலகுபடுத்தி கொண்டிருக்கின்றன.
மருத்துவத்துறை
முன்பெல்லாம் மனிதன் பல வகையான நோய்களால் குறைந்த வயதிலேயே இறந்து போனான் சில நோய்களுக்கு மருந்தே இல்லை என்ற நிலை காணப்பட்டது. விபத்துக்களால் உயிர் பிழைக்க முடியாத நிலை காணப்பட்டது.
இன்று மருத்துவ துறை அதி நவீன வளர்ச்சி கண்டிருக்கிறது. மனித உடல் பாகங்களை கூட மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிர் காக்கும் அளவுக்கு மருத்துவ துறையில் அறிவியல் ஆக்கங்கள் பல உருவாகி விட்டன.
மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் அறிவியல் ஆராய்சிகளும் இன்று நடந்து வருகின்றது. இது மருத்துவதுறையின் உச்ச வளர்ச்சியினை காட்டுகின்றது.
விவசாயத்துறை
உலகின் சனத்தொகை நாளுக்கு நாள் பெருகி வருவதனால் உலக மக்களுக்கான உணவை விவசாயம் மூலமாகவே உற்பத்தி செய்யமுடியும். இதற்கு அற்புதமான பல கண்டுபிடிப்புக்கள் விவசாய வளர்ச்சிக்கு உதவுகின்றன.
நாகரீக விவசாயம் பிரமாண்டமான வளர்ச்சி கண்டுள்ளது. இளையவளர்ப்பு மரபணுமாற்று என விளைச்சல் அதிகம் கிடைக்கும் தாவர இனங்களை இன்று உருவாக்கி பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மற்றும் விவசாய நடவடிக்கைகளில் இயந்திரமயமாதலை உருவாக்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம், மருந்து என்பன உச்ச பயன் உடையனவாக உருவாக்கப்படுகின்றன. இவற்றினால் பல நன்மைகள் இருந்தாலும் சிறு தீமைகளும் இருக்கவே செய்கின்றன.
போக்குவரத்து தறை
முன்பெல்லாம் நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்தல் என்பது சவாலான காரியமாக இருந்தது. ஏன் என்றால் போக்குவரத்து துறை வளர்ச்சி காணாமல் இருந்தது.
ஆனால் இன்று ஆகாய விமானங்கள், விரைவான கப்பல்கள், நவீன வாகனங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில நாட்களில் உலகின் எந்த நாடுகளுக்கும் சென்று வரக்கூடியதாக போக்குவரத்து துறை வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் என்பன வளர்ச்சி கண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பம்
இன்று உலகம் தொழில்நுட்பமயமாகி விட்டது. இணையத்தில் இல்லாத விடயங்கள் என்று எதுவுமில்லை எவ்விதமான தகவல்களையும் ஒரு நொடியில் அறிந்துகொள்ளும் வகையில் இன்று இணையம் வளர்ந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் போல மாறிவிட்டது.
எல்லா துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தனது வளர்ச்சியை காட்டுகிறது. இன்றைய இக்கட்டான சூழலில் வீட்டில் இருந்தபடியே கற்கவும் வேலை செய்யவும் இந்த தகவல் தொழில்நுட்பமே உதவுகிறது.
விரைவான தொடர்பாடல், உலகமயமாதல் போன்ற விடயங்களை தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே சாத்தியமாக்கியுள்ளது.
முடிவுரை
அறிவியல் ஆக்கங்கள் மனித சமுதாயத்துக்கு பல நன்மைகளையும் புதுமைகளையும் வழங்கி இருக்கிறது. இது ஒரு சிறந்த வளர்ச்சி என்று அனைவராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இதனை தவறாக பயன்படுத்தி நிறைய குற்ற செயல்கள் இடம் பெறுகின்றன. மனிதனுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
உலக நாடுகளிடையே ஆயுத அறிவியல் ஒரு பாரிய உலக யுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நாடுகளுக்கிடையான போட்டிகள் இடம்பெறுகின்றன. அறிவியல் ஆக்கங்களான அணுஆயுதங்கள் மனிதனையே அழிக்க காத்திருக்கின்றன.
எனவே அறிவியலை நல்ல முறையில் பயன்படுத்துவது தான் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
You May Also Like :